உன் சந்ததியார் தங்கள் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் AND THY SEED SHALL POSSES THE GATE OF HIS ENEMY Phoenix Arizona U.S.A. 62-01-21M 1. நான் வழக்கம் போல் ஒன்று இல்லை 2 மணி நேரம் தாமதமாகி விட்டேன். மேய்ப்பரோ எழுந்து நின்று, "இப்பொழுது, நான் உங்கள் எல்லோருக்கும் கால தாமதமாக வந்துள்ள திரு.பிரான்ஹாமை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்,” என்றார். பாருங்கள், நான் செய்ய வேண்டிய ஏராளமான காரியங்கள் உள்ளன. எனவே எப்போதாவது ஒருமுறை நான்-நான் காலதாமதமாக வருகிறேன். இந்த முறையோ வானிலை காரணமாக இது நடந்தது. எனவே நான் இதை வானிலை பேரில் சாக்காக வைத்துவிட முடியும். சகோ.ரோஸ், அதைக் கொஞ்சம், தள்ளிப் போட வேண்டியதாக இருந்தது. காலை வணக்கம், சகோதரி.ரோஸ். இங்கே இக்காலையில் சகோ.ரோஸ் மற்றும் சகோதரி ரோஸ், சகோ.ஷாரிட் மற்றும் அநேக சகோதரர்கள் வந்து இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம், நீங்கள் அருமையாக ஜனங்கள்... 2. யாரோ ஒருவர் என்னிடத்தில், “ஃபீனிக்ஸில் மழை பெய்யும் போது, யாருமே படுக்கையை விட்டு நகரமாட்டார்கள்” என்று கூறுவதை நான் கேட்டேன், அத்தகைய ஒரு மாற்றத்தை, நீங்கள் அறிவீர்கள். இந்நாட்களில் ஒன்றில் நான் ஒரு இலவசமான ஆகாரத்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன். சூரியன் பிரகாசிக்காத ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒரு இலவச ஆகாரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அதற்கானதை அவர்களுக்கு செலுத்த, நான் இன்றைக்கு அதைக் கவனிக்கப் போகிறேன். 3. நான் கடந்த இரவு ஏதோ ஒரு சபையில் பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு உண்மையாகவே அதன் உடைய பெயர் நினைவில் இல்லை. எனவே கடந்த இரவு, அந்த ஆராதனையில், நாங்கள் ஒரு அற்புதமான நேரத்தை உடையவர் களாய் இருந்தோம். மேலும் சகோ.அவுட்லாவினுடைய இடத்திலும் மற்றும் டெம்ப்பினுடைய இடத்திலும், மற்றும் இந்த ஐக்கியத்தில் ஓர் அருமையான நேரத்தை நாங்கள் உடையவர்களாயிருந்து கொண்டு இருக்கிறோம். மேலும் இந்த ஊழியக்கார சகோதரர்கள் யாவரையும் தொடர் கூட்டத்தில் சந்திக்கும்படி நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், எனவே நாங்கள் ஒருவிதமாக ஓய்வாக சுற்றித் திரிந்து, சகோ.ரோஸ், ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள நேரம் இருக்கும். மேலும் ஐக்கியம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் வருகிறேன். நாங்கள் எங்களுடைய கால அட்டவணையை நோக்கிப் பார்த்து அதிக இடங்களை கண்டு பிடிக்க... வேண்டியதாய் இருந்தது. ஆனால் இங்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருந்தது என்று நான் எண்ணினேன், ஏனென்றால் நான் வெவ்வேறு நபர்களை சந்திக்கவும், அவர்களைக் காணவும் தொடர்ந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. 4. சில சமயங்களில் பிரசங்கத்தில், ஒவ்வொரு ஊழியக்காரனும், ஒரு விதமாக அல்லது வேறொரு விதமாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறான். அநேக சமயங்களில் நீங்கள் கூறுகிற ஒரு காரியத்தை ஜனங்கள் ஒரு விதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அதை அந்த விதமாக கூறும்படி, அது அவர்கள் பக்கம் கொஞ்சம் சாய்கிறது. அதன் பின்னர் மற்றொருவர் அதைப் பெற்றுக் கொள்ளும் போது, அது இன்னும் கொஞ்சம் அதிகமாக சாய்கிறது. முதலாவது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, அது முழுவதும் தவறாகி விடுகிறது. 5. எனவே நாம், பல சமயங்களில், பிரசங்கத்தில், நான் ஸ்தாபனங்களையும், ஸ்தாபன அமைப்புகளையும் மற்ற காரியங்களையும் ஒரு விதமாக பெரிதும் தாக்கி விடுகிறேன். அப்பொழுது ஜனங்கள், சில நேரத்தில், “சகோ.பிரான்ஹாம் ஸ்தாபனத்திற்கு எதிராக இருக்கிறார்,” என்று கூறுகிறார்கள். அது தவறாகும். நான் எந்த ஸ்தாபனத்துக்கும் எதிராக இல்லை. ஆனால் நீங்கள் பாருங்கள், அது அநேக சமயங்களில் ஜனங்கள் அந்த ஸ்தாபனத்தின் பெயரில் சார்ந்து இருப்பதாயும், கிறிஸ்துவின் மேல் தங்களுடைய நம்பிக்கைகள் யாவையும் வைப்பதற்கு பதிலாக அதன் பேரில் வைத்துள்ளதாயும் உள்ளது. 6. அந்த ஸ்தாபன அமைப்பிற்கு எத்தனை அங்கத்தினர்களை அவர்கள் சேர்த்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் காண விரும்புகிறார்கள். இப்பொழுது, அது மிகவும் அருமையாக இருக்கிறது. நான்... அது பரவாயில்லை. ஒவ்வொரு ஸாதாபன அமைப்பும் அது சேர்த்துக் கொள்ளக் கூடிய ஒவ்வொரு அங்கத்தினரையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன். அது மிகவும் அருமையானது தான். ஆனால் பரிசுத்த ஆவியின் வலியுறுத்துதலின் பேரில் நீங்கள் சேர்த்துக் கொள்வதைக் காட்டிலும் நீங்கள் மனமாற்றம் அடையாதவர்களை ஏற்றுக் கொண்டு அதிகமாக அதில் சேர்ப்பது, சற்று முன்னர் இங்கே சகோ.ரோஸ் கூறிக்கொண்டு இருந்தது போன்றதான, மற்ற காரியங்களும், என்னவென்றால், நீங்கள் அப்படி செய்யும் போது, நீங்கள் அப்படி செய்யும் போது, "நாங்கள் இதற்கு சொந்தமானவர்கள், மற்றும் நாங்கள் அதற்கு சொந்தமானவர்கள்,” என்று ஜனங்களை சிந்திக்கத் தூண்டுகிறீர்கள். மொத்தத்தில் எப்படி இருந்தாலும், நாம் தேவனுக்கு சொந்தமானவர்கள். புரிகிறதா-? 7. இப்பொழுது, ஒரு மனிதன் ஆற்றில் ஒரு படகில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டால்... நான் இந்தியானாவில் உள்ள ஒரு நதிக்கு அருகில், ஒஹையோ நதிக்கு அருகில் வசிக்கிறேன், மேலும் நான் நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருக்கிறேன். அது மிக மோசமான இடமாய் இருக்கிறது, அந்த நீர்வீழ்ச்சிகள், ஏனென்றால் அது உங்களை இப்பொழுதே நொருக்கி விடும். நீங்கள் அந்த நீர் வீழ்ச்சிக்கு எப்போதாவது சென்றால், அதில் எந்த படகிலும் சவாரி செய்ய முடியாது, ஏன் என்றால் அது, சுமார் 40 அல்லது 50 அடி ஆழத்திற்கு நேராக கீழே கொட்டுகிறது, அப்பொழுது அடியிலிருந்து ஒரு பெரிய சுழல் மேலெ எழும்புகிறது, அது பாறையிலும், அங்குள்ள அடிப்பாறையிலும் மோதுகிறது. அலைகள், அந்த வெள்ளை அலைகள், 40-அடி உயரத்தில் நீர்வீழ்ச்சியின் அடியில் பொங்கி வழிகின்றன, பாருங்கள், அது எங்கே கீழே விழுந்து மோதுகிறதோ, மீண்டும் அங்கிருந்து எழுகிறது. அதன் பின்னர் அப்படியே சரிந்து விழுந்து, சுமார் 60 அல்லது 70 அடி ஆழமுள்ள ஒரு பலத்த வேகத்தோடு கீழே இறங்குகிறது. மேலும் ஒரு சுழல் இந்த விதமாக அது சுற்றிச் சுழன்று, அது வெளி வந்து, ஒரு வாய்காலினூடாக கீழே செல்கிறது. எனவே நீங்கள் பாருங்கள், உயிர் பிழைப்பதற்கான எந்த வழியுமே இல்லை. 8. கொஞ்சம் காலத்துக்கு முன்னே ஒரு மனிதன் ஒரு நீர் காப்பு சட்டையுடன் அங்கு சென்றான். அவன், அந்த விதமாக விழுந்த அந்த ஒரே காரியத்தை மாத்திரமே அவர்கள் கண்டனர். (சகோ,பிரான்ஹாம் தன்னுடைய விரலைச் சுடக்கினார்—ஆசி.) அந்த நீர், காப்பு சட்டையும் கூட, அந்த பயங்கரமான நீரோட்டம் அவனைக் கீழே கொண்டு சென்று விட்டது. மேலும் அவனை ஒரு போதும் கண்டு பிடிக்கவே இல்லை. அவனுக்கு என்ன ஆனது என்று ஒரு போதும் தெரியவே இல்லை. அவன் பாறைகளின் மேல், இல்லை அங்கு கீழே உள்ள விளிம்புகளில் தொங்கினான், அது ஒரு மைல் அல்லது இரண்டு மைல் தூரத்தில், அந்த விதமாக இருக்கலாம், எனவே உயிர் பிழைப்பதற்கான வழியே இல்லாது இருந்தது. 9. நான் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கையில், யாராவது ஒருவர் ஆற்றில் ஒரு சிறிய பழைய படகில் செல்வதை நான் கண்டால், அவ்வாறு சென்று கொண்டு இருந்தால், நான் அவரிடத்தில், “அந்த படகில் இருந்து வெளியேறுருங்கள். அந்தப் படகினால் அந்த அலைகளினூடாக செல்ல முடியாது,” என்று கூச்சலிட வேண்டும். இப்பொழுது, நான் அவன் இடத்தில் வெளியேறும்படி கத்தினாலும் மற்றும் அவனிடத்தில் உண்மையாகவே கடினமாக பேசினாலும் கூட அந்த மனிதனுக்கு எதிரான எதோ காரியம் என் இடத்தில் உண்டு என்பது அல்ல. அது அந்த மனிதனுக்கு எதிராக ஏதோக் காரியம் என்னிடத்தில் உண்டு என்பதல்ல. நான் அந்த மனிதனை நேசிக்கிறேன், அவன் நொறுங்கிவிடப் போகிறான் என்பதை நான் அறிவேன். அந்தக் காரணத்தினால் தான் நான் அவனிடத்தில் உரக்கச் சத்தமிடுகிறேன். ஏன் என்றால் அவன் இல்லை... அது... நான் சத்தமிடுவதற்கான காரணம், நான் அவனை நேசிக்கின்றபடியாலே ஆகும். நான் கவலைப்படாது இருந்திருந்தால், நான், "சரி, போய் பார்," பார், என்று, நான் அவனுக்காக கவலைப்படாதிருந்தால், கூறுவேன். 10. ஆனால் நான் அந்த காரியங்களைக் கூறுவதற்கான காரணம், நான் சபையைக் குறித்து வைராக்கியமாய் இருக்கிறேன் என்பதினாலேயாம். நான்-நான் தேவனுடைய சபை குறித்து வைராக்கியமாய் இருக்கிறேன். மேலும் அது ஸ்தாபன- சிந்தனை கொண்டதாக மாறுவதைக் காண நான் வெறுக்கிறேன். அந்த விதமாகவே ஒவ்வொரு சபையும் பாறைகளன்டைக்குச் சென்று உள்ளன என்பதும், அந்த விதமான, அந்த ஸ்தாபன போக்கினூடாகவே என்ற, அந்தப் போக்கு எனக்குத் தெரியும். 11. லூத்தரின் காலத்தில் ஏற்பட்ட எழுப்புதலைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள், அது எங்கே சென்றது என்று பாருங்கள். அது எப்போதுமே வீழ்ச்சி அடைந்தவுடனே, அது மீண்டும் ஒரு போதும் எழும்புகிறதில்லை. லூத்தரன்கள் திரும்பி வரவேயில்லை. வெஸ்லி மெத்தோடிஸ்டுகள், ஒருபோதும் திரும்பி வரவேயில்லை என்பதைப் பாருங்கள். யாத்திரீகப் பரிசுத்தர், நசரேயன்கள், மற்ற யாவரும், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்களைப் பாருங்கள். அவர்கள் ஒரு எழுப்புதலைப் பெற்றுக் கொள்கிறார்கள், அதன் பின்னர் தன் மீது தேவன் உடைய வல்லமையோடு ஒரு மனிதன் எழுப்புகிறான், அவன் ஆவியில் ஒரு அசைவைத் துவங்குகிறான். அதன் பின்னர் அந்த மனிதன் மரித்தவுடனே, அதன் பின்னர் அதில் இருந்து அவர்கள் ஒரு ஸ்தாபன அமைப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். 12. மூடி வேதாகம் நிறுவன அமைப்பு போல, அருமையான இடம், ஆனால் அது ஒரு போதும் மூடி அதை உடையதாக இருந்தது போல் இருக்காது. புரிகிறதா-? மேலும் அவர்கள் மூடி நின்ற காரியங்களிலிருந்து, பத்து இலட்சம் மைல்கள் தூரத்தில் இருக்கின்றனர், எனவே அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. நீங்கள் பாருங்கள், மேலும் அது இப்பொழுது முழுவதும் அறிவாற்றல் உள்ளதாக உள்ளது, அங்கே மூடியோ அதை ஆவியில் உடையவராய் இருந்தார். ஆகையால் நீங்கள் அதை, அந்த காரியங்களில் கண்டறிகிறீர்கள். 13. இப்பொழுது, அநேக ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஃபீனிஸ்ஸுக்கு வந்து, நான் முதலில் துவங்கிய போது, பெந்தேகோஸ்தே அசைவில், நானே ஒரு அமைப்பினை துவங்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்மாரி சகோதரர்கள் என் இடத்தில் வந்து, "இது தான் அது. நாம் துவங்குவோம். ஏன், நாம் மற்ற எல்லோரையும்விட பெரிதாக இருப்போம்,” என்றனர். 14. அதற்கு நான், “இரக்கம்-! சகோதரனே, இதுவல்ல அது- அந்தக் காரியம் அல்ல. நீங்கள்... நீங்கள் சரியான பாதையிலிருந்து பத்து இலட்சம் மைல்கள் தூரத்தில் இருக்கிறீர்கள். தேவன் அதை ஒரு போதும் ஆசீர்வதிக்க மாட்டார்” என்றேன். உங்களுடைய சரித்திரத்தை படியுங்கள். வேதாகமத்தை படியுங்கள். இதில் இருந்து, இதிலிருந்து ஒருபோதும் மற்றொரு ஸ்தாபன அமைப்பு வெளி வராது. அது உண்மை. இது ஸ்தாபனமாகிச் சென்றால்... இது இப்பொழுது லவோதிக்கேயா நிலையில் உள்ளது. ஆனால் நான் உங்களுக்கு சொல்லுவேன், சகோதரனே, ஸ்தாபனங்கள் தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டு எழும்பினதே இல்லை. இது குறித்தும் ஒன்றுமே இருக்காது. நாம் கர்த்தருடைய வருகையில் இருக்கிறோம். புரிகிறதா-? இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற, இந்த பெரிய உலக ஆலோசனை சபை சங்க அசைவிலிருந்து, மீதியானவர்களை மணவாட்டிக்காக தேவன் வெளியே எடுப்பார், ஆனால் இனி ஒரு போதும், ஆவிக்குரியப் பிரகாரமாக, ஸ்தாபனமாகாது. புரிகிறதா-? அது முடிந்து விட்டது. 15. நான் என்னுடைய சகோதரர்கள், விலையேறப்பெற்ற சகோதரர்கள், அந்த வழியில் சாய்ந்திருப்பதைக் காணும் போது, நான் பெற்றுள்ள எல்லாவற்றையும் அதில் ஊற்றுகிறேன். மேலும் சில நேரங்களில் சகோதரர்கள், “சரி, சகோ.பிரான்ஹாம் எங்களுக்கு எதிராக இருக்கிறார். நாங்கள்...” என்கிறார்கள். அது தவறாகும். என்னே-! எவருக்கும் எதிராக இருப்பது என்பது, அது... அது என்னுடைய சிந்தையில் இல்லாத காரியமாக இருக்கிறது. நான்... நான் உங்களுக்காகவே இருக்கிறேன். நான் உங்களுடைய சகோதரன், பாருங்கள், என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். அந்தக் காரணத்தினால் தான் நான் எந்த குறிப்பிட்ட ஸ்தாபனத்திலும் ஒரு போதும் சேர்ந்ததே இல்லை, எனவே என்னால் அந்த திறப்பின் வாயிலே நின்று, “சகோதரனே, வேண்டாம். அது வழி அல்ல,” என்று கூற முடியும். 16. அவர்களோ, "நாங்கள் அசம்பளீஸை சேர்ந்தவர்கள்,” என்கின்றனர். அது அற்புதமாய் உள்ளது. அசம்பளீஸ் ஆஃப் காட் எனக்கு ஒரு அற்புதமான ஆசீர்வாதமாய் இருந்து வருகிறது. "நாங்கள் போர்ஸ்கொயர்.” சரி, அவர்கள் எனக்கு என்ன ஒரு ஆசீர்வாதமாய் இருந்து வருகிறார்கள் என்று பாருங்கள். "நாங்கள் இயேசுவின் நாமம்.” அவர்கள் எனக்கு என்ன ஒரு ஆசிர்வாதமாய் இருந்து வருகிறார்கள் என்று பாருங்கள். “நாங்கள் ஒருத்துவம், மற்றவைகள்.” என்னவாய் இருந்தாலும், அவைகள் யாவும் ஆசீர்வாதங்கள். ஆசீர்வாதங்கள். அவர்கள்- அவர்கள் தேவனுடைய ஜனங்கள். புரிகிறதா-? மேலும் தேவனுடைய ஜனங்களே அதில் எல்லாவற்றிலும் இருக்கிறார்கள். 17. மேலும் நாம் நம்மை இணைந்துக் கொள்ளும் போது, “நாம் சர்ச் ஆஃப் காட்டைப் பார்க்கிலும் சற்று மேலானவர்களாக இருக்கிறோம்," நீங்கள் பாருங்கள், "நாம் போஸ்ர்கொயர் அல்லது இயேசுவின் நாமம்' அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றைப் பார்க்கிலும் சற்று மேலானவர்களாய் இருக்கிறோம்," என்று கூறுகிறோம். நாம் ஒரு இந்தக் கருத்துகளில் சிறிது வேறுபடலாம். நாம் யாவரும் இன்றைக்கு இரவு உணவு உண்ணச் சென்றால், நாம் யாவரும் வித்தியாசமான பழங்களை எடுத்துக் கொள்வோம், ஆனால் நாம் ஒரே மாதிரியான பழத்தை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம், நீங்கள் பாருங்கள். அது தான் உள்நோக்கம். எனவே அதனுடைய உள் நோக்கம் என்னவென்றால், நம்மால் நம்முடைய ஐக்கியத்தைக் காண முடிந்தால் நலமாயிருக்கும். எனவே ஸ்தாபனத்தின் பக்கம் சாய்ந்திருக்க வேண்டாம். கல்வாரியை நோக்கி 'சாய்ந்து இருங்கள். அப்பொழுது நீங்கள் இந்த மற்ற காரியங்களுக்கு மரித்தவராகிறீர்கள். புரிகிறதா-? மேலும் நான் விசுவாசிக்கிறேன்... 18. இது என் சிந்தையில் இருக்கும் போது நான் இதை கூறட்டும். ஸ்தாபனம் ஒரு நல்ல பங்கை கொண்டு உள்ளது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அநேக சமயங்களில், சகோதரர்களே, நாம் அதை வெறுக்க நினைக்குமளவிற்கு அது அவ்வளவு மோசமாக இருக்கிறது, அதைப் போன்ற காரியங்கள் நம் இடையே வளர்ந்து வந்திருக்கின்றன, அது மார்க்க பேதமாக இருந்து வருகிறது. ஜனங்கள் அந்த மார்க்க பேதங்களை எடுத்துக் கொண்டு, எந்த வழியிலும் ஜனங்களை சிதறடிப்பார்கள். மேலும் ஒரு கூட்ட சகோதரர்கள் ஒன்று சேர்ந்து... அதாவது நான்... ஆரம்ப நாட்களில் அவர்கள் செய்தது போல மற்றும் எல்லா விதமான காரியமும் வெளியே சென்று கொண்டு இருக்கிறது என்று நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். மேலும்— மேலும் நாம் அவை யாவற்றையும் இன்றைக்கு உடையவர்களாய் இருக்கிறோம், பாருங்கள், இன்னமும் ஒரு செயல்பாட்டில் உள்ளது. மேலும் தங்களை ஒன்று சேர்க்க முடிந்த ஜனங்கள்... 19. என்னுடைய கருத்தின்படி அதுவே உண்மையான பெந்தேகொஸ்தேவின் காட்சி, அது ஸ்தாபனத்தண்டை வரும் போது, அது- அது சபையாய் உள்ளது, சகோ.பெத்ரோஸ், ஸ்வீடனில் உள்ள பிலதெல்பியா சபையாய் உள்ளது. இப்பொழுது, அது வேதப் பிரகாரமானமானதாய் இருக்கும் வரையில், நீங்கள் எந்த விதமான ஒரு உபதேசத்தை உடையவர்களாய் இருக்கிறீர்கள் என்று அவர்கள் கவலைப்படுவதில்லை. நீங்கள் அதை இந்த வழியில், அந்த வழியில், அல்லது எந்த காரியத்தையாவது காண வேண்டும் என்றால், நீங்கள் ஐக்கியத்தில் இருக்கும் வரை ஒரு உண்மையான சுத்தமான பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும். அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. அது நல்லது தான். இயேசு ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் வருகிறார் என்று நீங்கள் கூற விரும்பினாலும், மற்றொருவர், அவர் ஒரு வெள்ளை மேகத்தில் வருகிறார், அவரை அந்த விதமாக நோக்கி பாருங்கள் என்று கூறினாலும் சரி. நீங்கள் ஒரு நல்ல சுத்தமான ஜீவியம் ஜீவித்து, ஐக்கியம் கொண்டிருக்கும் வரை, அப்படியே சென்று கொண்டு இருங்கள். அதுதான் வழி. அதுதான் இது. 20. அதாவது, சரி, இப்பொழுது, அந்த ஒரு காரணத்தினால் தான், நண்பர்களே, நான் இந்த வர்த்தக புருஷருடைய கூட்டத்தோடு இருக்கிறேன். காரணம், அங்கே சரிபடுத்தப்பட வேண்டிய ஏராளமான காரியங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன். ஆனால் இதுவோ- இதுவோ நாம் பெற்றுள்ள மிகச் சிறந்ததாக உள்ளது. அது உண்மை. ஆம். நான் கூறவேண்டிய அநேக காரியங்கள் உள்ளன. மேலும்- மேலும் உங்களிடத்தில், நான் அவர்களுக்கு கூற வேண்டியதை ஒரு போதும் கூறாமல் இருந்ததில்லை என்பதை, இங்கு உள்ள சகோதரர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். நான் சத்தியத்தை கூறுவதற்கு, தேவனுடைய ஊழியக்காரனாக இங்கே இருக்கிறேன். நான் அதற்காக பதில் கூற வேண்டியவனாக இருக்கிறேன். அது உண்மை. சகோ.ரோஸ், “அதனால் தான் நாங்கள் உம்மை விரும்புகிறோம்,” என்றார். பாருங்கள், அது- அது, சரி, நம்மால் முடியாது... நாம், இந்த வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும். புரிகிறதா-? 21. கொஞ்ச காலத்திற்கு முன்பு, நீங்கள் உள்ளே இருந்தீர்கள் என்று, நான் நினைக்கிறேன்... நான் வெளி நாட்டில் இல்லை கடந்த வருடம் தீவில் இருந்தேன், அப்போது அவர்கள் ஒரு கூட்டம் நடத்தினர், அப்போது சகோதரர்களில் சிலர் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த வணிகர்கள் இருந்த இந்த பெரிய கூட்டத்தை குறித்து தற்பெருமை அடித்துக் கொண்டு இருந்தனர். மேலும் அவர்கள், “எனக்கு மூலையில் ஒரு சிறு இடம் இருந்தது. என்னுடைய வியாபாரம் நன்றாக இல்லாதிருந்தது. எனக்கு ஒரு பயங்கரமான நேரம் உண்டாயிருந்தது. மேலும் முதலாவது காரியம் உங்களுக்கு தெரியுமா, நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள உள்ளே வருகிறேன், மேலும் நான் இப்போது எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டேன்," என்பதைக் குறித்து பேசிக் கொண்டு இருந்தனர். இப்பொழுது அது நல்லது தான். நாம் அதை பாராட்டுகிறோம். அது நல்லது தான், ஆனால் செழிப்பு எப்பொழுதுமே கிறிஸ்துவை குறிக்கிறதில்லை. அதாவது, பாருங்கள், மேலும் நாம் அதை கவனிக்க வேண்டும். இப்பொழுது, அது நல்லது தான். புரிகிறதா-? நான்... அதற்கெதிராக ஒன்றுமில்லை. 22. ஆனால் அந்த இரவு நான் ஒருவிதமாக அந்த சகோதரர்களை பின் தொடர்ந்து சென்றேன். எங்களுடைய ஒரு குழுவினரும், சகோ.ஷகாரியன் மற்றும் நாங்கள் யாவரும் தங்கியிருந்த உணவுக தங்கும் விடுதிக்கு நாங்கள் சென்றோம். அப்பொழுது நான் "பாருங்கள்,” என்றேன், நான், “சகோதரரே, நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்” என்றேன். நான், “என்னுடைய வாழ்க்கையில் நான் எப்போதும் சந்தித்தவர்களிலேயே, சகோதரர்களாகிய நீங்கள் தான் மிக அருமையான கூட்ட மனிதர்களாக இருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். ஆனால்” என்றேன். நான், "அதனுடைய காரியம் என்னவென்றால்,” என்றேன், நான் கூறினேன்... 23. நான் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்தவன் அல்ல, ஆனால் நான் அதனோடு அந்த ஐக்கியத்தைச் சேர்ந்தவன். நான் அவர்களோடு ஒரு ஐக்கிய அட்டையைக் கொண்டு செல்லுகிறேன், நான் கொண்டு செல்வது ஒரே அட்டை ஆகும், ஏன் என்றால் அது எல்லா ஆவணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, நீங்கள் பாருங்கள். அதைத்தான் நான் விரும்புகிறேன். அதற்காகத்தான் நான் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன். 24. “ஆனால்,” நான், “அங்குள்ள அந்த மனிதர்களுக்கு முன்பாக உள்ள சகோதரர் களாகிய உங்களைக் குறித்த காரியம் தான் எனக்கு கவலை அளிக்கிறது, அவர்கள் உங்களைக் காட்டிலும் ஆயிரக்கணக்கான மடங்கு செழித்து இருக்கிறார்கள், மேலும் அதன் பின்னர் கிறிஸ்து செழிப்பு உள்ளவராயிருக்கிறார் என்று அவர்கள் கூற முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அதை ஒரு போதும் விற்க முயற்சிக்காதீர்கள்” என்றேன். புரிகிறதா-? 25. உலகத்தோடு ஒருபோதும் ஒப்பிட முயற்சிக்காதீர்கள். உலகம் நம்முடைய களத்திற்கு வரட்டும். அவர்களுடைய களத்திற்கு செல்லாதீர்கள். புரிகிறதா-? புரிகிறதா-? நீங்கள் அவர்களுடைய களத்திலிருந்து சென்று விடுங்கள், நாம் அவர்களோடு ஒரு போதும் பிரகாசிக்க மாட்டோம். மொத்தத்தில், சுவிசேஷம் பளபளக்கிறது இல்லை; அது கொழுந்து விட்டு எரிகிறது. ஹாலிவுட் பளபளக்கிறது. சுவிசேஷம் கொழுந்து விட்டு எரிகிறது. பளபளத்தலுக்கும் கொழுந்து விட்டு எரிதலுக்கும் இடையே ஏராளமான வித்தியாசம் உண்டு. 26. ஆகையால், இப்பொழுது, மேலும் நான், ‘ஆதிகால பெந்தேகோஸ்தே சகோதரர்கள், ஏதோ ஒன்றை உடையவர்களாயிருந்து, அதிலிருந்து வெளியேற முயன்று, ஏழைகளை போஷித்து, அது போன்றவற்றை செய்து, சுவிசேஷத்தை பிரசங்கிக்க, பாருங்கள், தோழமையாயிருக்க ஒன்றுமேயில்லாமல் வெளியே புறப்பட்டுச் சென்றனர்," என்றேன். மேலும் நான், "இப்பொழுது நாம் எவ்வளவு வைத்து உள்ளோம் என்பதன் பெயரில் பெருமையடித்துக் கொள்ள முயன்று கொண்டு இருக்கிறோம்,” என்றேன். நான், “அது என்ன ஒரு வித்தியாசமாய் இருக்கிறதே-!” என்றேன். 27. ஒரு சில நிமிடங்கள் கழித்து, ஒரு விலையேறப்பெற்ற சகோதரன் எழும்பி நின்று, என்னிடத்தில் கூறினார், அவர், “சகோ.பிரான்ஹாம், அதுவே ஜனங்கள் எப்போதும் செய்த தவறுகளிலேயே மிகப்பெரிய ஒன்றாய் இருந்தது," என்றார். 28 மேலும் நான், "இப்பொழுது, சகோதரனே, கவனியுங்கள், ஜனங்கள் வைத்து இருந்ததை விற்றுவிட வேண்டும் என்று நான் அவர்களுக்கு சாடையாக சுட்டிக் காட்ட முயற்சித்து கொண்டு இருக்கவில்லை. ஆனால் இந்த வர்த்தக புருஷர்களுக்கு ஒரு கருத்தைக் கூறவே நான் முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்” என்றேன். அதற்கு அவர், "அதுவே ஜனங்களின் மிகப்பெரிய தவறாயிருந்தது,” என்றார். 29. அப்பொழுது நான், “அவர்கள் பரிசுத்த ஆவியினால் அதைச் செய்தனர். அதை செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் கூறினார்," என்றேன். பரிசுத்த ஆவியானவர் எந்தக் காரியத்தையாவது செய்யும்படி உங்களிடத்தில் சொல்லுகிறார், அவர் உங்களிடத்தில் செய்யும்படி சொல்லுகிறதை நீங்கள் செய்யுங்கள். 30. மேலும் அவர், "பாருங்கள், அதுவே சபை எப்போதும் செய்த மிக மோசமான தவறாய் இருந்தது" என்றார். 31. அப்பொழுது நான், "ஏன், சகோதரனே-?” என்றேன். நான் பேசிக்கொண்டிருந்த அந்த மனிதனுக்கு முன்னால் அங்கேயே அவ்வாறு கேட்டேன். 32. அதற்கு அவர், “காரணம், ஒரு சிறு சலசலப்பு அங்கே சபையில் உண்டான உடனே, கிரேக்கர் மற்றும் எபிரெயர் போன்றோருக்கு இடையே ஒரு வேறுபாடு இருந்தது,” என்றும், மேலும், “அந்த ஜனங்களுக்கு செல்வதற்கு ஒரு இடம் இல்லை. அவர்கள் திரும்பி வருவதற்கு கூட வீடு இல்லாது இருந்தது” என்றார். அப்பொழுது நான், “அது சரியாக தேவனுடைய சித்தம்” என்றேன். அதற்கு அவர், “அது எப்படி தேவனுடைய சித்தமாக இருக்க முடியும்-?" என்றார். 33 அப்பொழுது நான், "அவர்கள் எங்கும் சென்று, சுவிசேஷத்தை பரப்பினர், ஏன் என்றால் அவர்கள் செல்வதற்கு இடம் இல்லாதிருந்தது,” என்றேன். 34. பரிசுத்தாவி எந்த தவறையும் செய்கிறதில்லை. அவர் அதைச் செய்கிறது இல்லை. அவ்வளவுதான். மேலும் நான் கடந்த இரவு பேசிக் கொண்டு இருந்த போது, நீங்கள் தேவனை பற்றி பிடித்துக் கொள்ள வேண்டும், மற்றும் அவருடைய வார்த்தையை பற்றிக் பிடித்துக் கொள்ள வேண்டும், அதை சரியாக பற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினேன். அது உங்களை எங்கே வழி நடத்தினாலும் கவலைப்படாமல், அதை அப்படியே பின் தொடர்ந்து கொண்டு இருங்கள். அந்த விதமாக அதை அப்படியே பின்தொடர்ந்து கொண்டு இருங்கள். 35. ஆனால் நான் நிச்சயமாகவே இந்த வர்த்தக புருஷருடைய ஐக்கியத்தின் ஒரு ஆதரவாளனாக இருக்கிறேன். மேலும் நான் அழைக்கப்படுகின்ற ஒவ்வொரு தொடர் கூட்டத்திற்கும், நான் எப்பொழுதும் சென்று பேசுகிறேன், என்னால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் கூறுகிறேன். இன்னார்- இன்னாரை, யாரையாவது மகிழ்விக்கும்படி, ஏதோ ஒன்றை போலியாக கூற முயற்சிக்காதீர்கள். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் என்னுடைய கூட்டத்திற்கு செல்லும் போது, நான் ஆய்ந்து படித்து ஜெபித்து மற்றும் உபவாசித்து, "கர்த்தராகிய இயேசுவே, அந்த ஜனங்களுக்கு உதவியாக இருக்கும்படி என்னால் என்ன—என்ன கூற முடியும்,” என்று கேட்பேன். 36. நான் ஒரு பிரசங்கி அல்ல என்பதை எல்லோரும் அறிவர். நான் ஒரு பேச்சாளர் அல்ல. நான்... எவருமே அதை அறிவர். நான் ஒரு பிரசங்கி அல்ல. என்னுடைய செய்தி வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது மற்றும் அது போன்றது ஆகும். ஆனால், நான் ஒரு பிரசங்கி அல்ல. நான் பிரசங்கிப்பதைக் கேட்கும், எவரும் அதை அறிந்து கொள்வார்கள். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், நான் செய்யும் எதோக்காரியத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். 37. “அவர் ஒரு-ஒரு ஆற்றல் வாய்ந்த பேச்சாளராயிருக்கவில்லையே-? அவர் தன்னுடைய இலக்கணத்தை சரியாக உபயோகிக்கிறதில்லையா-? அவர் பிரசங்க பீடத்தில் அற்புதமாக இருக்கவில்லையா-?” என்று கூற வேண்டாம். எனக்கு அது வேண்டாம். என்னால் அதை செய்ய முடியாது. தேவன் அதற்காக என்னை ஒரு போதும் அழைக்கவில்லை. 38. ஆனால் அந்த நபருக்கு உதவி செய்யும் ஏதோ ஒரு காரியத்தை கண்டு அறியவும், அந்த சபை ஒரு சிறந்த சபையாக இருக்கவும், அது ஒரு சிறந்த ஜனங்களை கொண்டிருக்க உதவி செய்யவும், அதற்காக ஜெபிக்கவுமே நான் முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். 39. இப்போது நான் இந்த விதமாக பேசிக் கொண்டே இருந்து விட்டேன், ஏனென்றால் இன்னும் சிலர் உள்ளே உள்ளே கூடி வருவதையும், மழை பெய்து கொண்டு இருப்பதையும் நான் கண்டேன். அந்த காரணத்தினால் தான், நான் இந்தக் காரியங்களை கூறிக்கொண்டு இருந்தேன். இப்பொழுது, ஒரு கால் பகுதிக்கான நேரமாகி விட்டது. 40. நான் இப்பொழுது சகோதரனுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நான் சகோ.ஃபுல்லரை நீண்ட காலமாக அறிந்திருக்கிறேன், எப்பொழுதும் அவரை, என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறேன். மேலும் எங்களுக்கு அநேக காரியங்கள் பொதுவானதாக இருக்கின்றன, சகோ.ஃபுல்லர். எனவே நாங்கள்... நான் சகோ.ஃபுல்லரை இப்பொழுது அநேக ஆண்டுகளாக பார்த்து வருகிறேன், அவர் உண்மையான அசலான தேவனுடைய மனிதனாய் இருப்பதை நான் அறிந்து இருக்கிறேன், மேலும் நான் அவரை நேசிக்கிறேன். நான் இங்கே இந்தக் காலை ஐக்கியத்திற்காகவே இருக்கிறேன். அது இங்குள்ள இடத்தில் விளம்பரப் படுத்தப்பட்ட போதும் நான் அவர் பேசின இரவு வரமுடியாததற்கு மிகவும் வருந்துகிறேன், ஆனால் என்னால் அதை தவிர்க்க முடியாமற் போயிற்று. மேலும் நான் இந்த காலை இங்கு இருப்பதற்கும், அவருடைய அருமையான சபையையும், எப்படி தேவன் அவர்களை செழித்திருக்க செய்து, அவர்களை ஆசீர்வதித்து உள்ளார் என்பதைக் காண, மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவர் இவருக்காக செய்துள்ள ஒவ்வொரு காரியத்திற்காகவும், நான் நிச்சயமாகவே அதைப் பாராட்டுகிறேன். தேவன் அவரைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக, மற்றும் இந்தக் கூடாரத்தையும், மற்றும் தர்மகர்த்தாக்களின் குழுவையும், உதவிக்காரர் களையும், சபையின் எல்லா அங்கத்தினரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் நீங்கள் கர்த்தருடைய கிருபையில் வளர்ந்து செழிப்பீர்களாக என்பதே என் உடைய தாழ்மையான ஜெபமாய் உள்ளது. 41. இப்பொழுது, நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்பு, நாம் முதலில், ஆக்கியோனை அணுகுவோமாக. நாம் நம்முடைய தலைகளை ஜெபத்திற்காக சற்று நேரம் வணங்குவோமாக. 42. நம்முடைய தலைகளும் இருதயங்களும் வணங்கி இருக்கையில், நான் இங்கே சபையிலே இக்காலை என்னுடைய ஜெபத்தில் உங்களை நினைவு கூரும்படியாக, கர்த்தர் உங்களுக்கு தரவேண்டுமென்று நீங்கள் விரும்புகிற, உங்களுடைய தேவையைக் குறித்து ஏதோ ஒரு காரியம், உங்களுடைய இருதயத்தில் ஒரு வேண்டுகோளாக இருக்கிறதா-? நீங்கள் அதை உங்களுடைய கரத்தை உயர்த்துவதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறீர்களா-? அது என்ன என்பதை உங்களுடைய சிந்தனையில், அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களுடைய வேண்டுகோளை கர்த்தர் அருள் வாராக. 43. கிருபையும் பரிசுத்தமுள்ள பிதாவாகிய தேவனே, இயேசு கிறிஸ்து மூலமாக எல்லா காரியங்களையும் அவருடைய மகிமைக்கு சிருஷ்டித்தவரே, எங்கள் இருதயத்தில் நன்றியோடு நாங்கள் இக்காலை உம்முடைய சமூகத்திற்குள்ளாக வருகிறோம். நாங்கள் மழையினூடாகவும், காற்று வீசிக்கொண்டிருப்பதின் ஊடாகவும், மழை பெய்து கொண்டிருப்பதினூடாகவும் கடந்து வந்திருக்கையில், பரலோகப் பிதாவே, நீர் எங்கள் மேல் பரலோகத்தின் மழையை, ஆவிக்குரிய மழையை, பின்மாரியையும் முன்மாரியையும் ஒன்றாக இன்றைக்கு எங்கள் இருதயங்களில் பொழிய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். 44. பிதாவே, நீர் இந்த சபையை ஆசீர்வதியும் என்று, நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இதற்காகவும், இதனுடைய மேய்ப்பருக்காகவும் இதனுடைய சபையோருக்காகவும், அதற்காகவும்... ஜனங்கள் தங்களுடைய தலைக்கு மேலே தளமிடப்பட்டுள்ள ஒரு இடத்தில் சந்திக்க முடிகிறதற்காகவும் மற்றும் உள்ளே அமர்வதற்கு ஒரு அருமையான வசதியான இருக்கைக்காகவும் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். 45. இந்த சபையின் ஆரம்ப கால, இதன் ஆரம்பகால, அப்போஸ்தல, கத்தோலிக்க சபையின் சரித்திரத்திற்கு எங்களுடைய சிந்தையில் நாங்கள் திரும்பிச் சென்று தேவனுடைய வார்த்தையை கேட்பதற்கு அவர்கள் எப்படியாய் பாறை குவியல்களின் மேலும் அல்லது அவர்களால் முடிந்த எதன் மேலாவது அமர்ந்தனர் என்பதையும், அதன் பின்னர் தரையிலே முழங்காற்படி இட்டு, அது குளிராயும், பாறையாயும், தூசியாயும் இருக்க, தங்களுடைய கரத்தை பரலோகத்தை நோக்கியவாறு உயர்த்தி, பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் களிகூருவதை நாங்கள் காண்கிறோம். அவர்கள் ஒரு சிங்க குகைக்குள் நடந்து செல்லும் அளவிற்கு, அவர்களுடைய ஜீவியத்தில் அப்படிப்பட்ட ஒரு உறுதியை அவர்களுக்கு அளித்தீர், ஒரு போதும் சிறிதும் கலக்கமின்றி, ஆனால் தங்கள் உடைய முகத்தில் சிரிப்போடு, பரலோகத்தை நோக்கிப் பார்த்து, இன்னும் ஒரு சில நிமிடங்களில், அவர்கள் நேசித்த அவருடைய பிரசன்னத்தில், அவர்கள் இருக்கப் போவதை அறிந்திருந்தனர். 46. ஓ, எங்களுடைய பிதாக்களின் விசுவாசம், நிலவறையாய் இருந்தாலும், அக்கினி ஜூவாலைகளாய் இருந்தாலும் மற்றும் பட்டயமாய் இருந்தாலும் அப்பொழுதும் ஜீவித்து இருந்தது. ஓ கர்த்தாவே, அப்படிப்பட்ட விசுவாசத்தை எங்களுக்கு உள்ளாக புதுப்பியும். பரிசுத்த ஆவியின் மகத்தான அப்போஸ்தல ஆசீர்வாதத்தை எங்களுக்குத் தாரும். 47. ஒவ்வொருவரும் இன்றைக்கு தங்களுடைய கரங்களை உயர்த்தினர், கர்த்தாவே, அவர்களுக்கு என்ன தேவை என்பதை நீர் அறிந்திருக்கிறீர். அந்த கரத்துக்கு பின்னால் என்ன இருந்தது என்பதையும், அந்த இருதயத்தில் என்ன உள் நோக்கம் மற்றும் குறிக்கோள் இருந்தது என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர். கர்த்தாவே, நீர் ஒருவர் மாத்திரமே ஒவ்வொரு தேவையும் அளிக்க முடியும். அவர்களுடைய தேவையை அறியாமலேயே நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன், ஆனால் அவர்களுக்கான ஒரு விண்ணப்பமாக என்னுடைய ஜெபத்தை ஏறெடுக்கிறேன். உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், நான் ஒவ்வொருவருக்காகவும் உத்தமமாக ஜெபிக்கிறேன், அதாவது, அவர்கள் என்ன எல்லாம் கேட்டுக் கொண்டார்களோ, அதை அவர்கள் பெற்றுக் கொள்வார்களாக. பிதாவே, அவர்களை ஆசீர்வதியும். 48. நாங்கள் இப்பொழுது உம்முடைய வார்த்தையை வாசித்து, இந்த ஞாயிறு வேத பாட வகுப்பில், இக்காலை, இருந்த விதமாக, நீர் இந்த வார்த்தைகளை எடுத்து, அவர்களிடத்திலிருந்து எல்லா அவிசுவாசத்தையும்; அதனுள்ளிருக்கும் விதைப் பகுதியை வளரவிடாமல் தடுக்கும், எந்த சாத்தானின் வல்லமையும் அகற்றிவிட வேண்டும் என்று கர்த்தாவே, நான் ஜெபிக்கிறேன். அது ஒவ்வொரு இருதயத்துக்குள்ளாகவும் சென்று, கர்த்தாவே, நீதியின் கனி விருட்சங்களாக மாறுவதாக. விசுவாசமானது, உம்முடைய வார்த்தை செய்யும்படி நீர் நியமித்து இருக்கிறதை கொண்டு வரும், “அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்,” என்று உரைக்கிறது. 49. இப்பொழுதும், கர்த்தாவே, ஊழியக்காரனை பரிசுத்தப்படுத்தும். உம்முடைய வார்த்தை ஏற்கனவே பரிசுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் நாங்களும் கூட, பரிசுத்தாவியானவர் எங்களுக்கு அளித்திருக்கிற போதனையைக் கொண்டு மந்தையைப் போஷிப்போமாக. நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 50. இப்பொழுது, சில சமயங்களில் படிக்க விரும்புகிற உங்களுக்கு, செய்தியுடன் கூட, நான்... நீங்கள் வேதப் புத்தகத்தை திருப்புவீர்களா என்று, நான் உங்களைக் கேட்கிறேன். இந்த காலை ஜனங்களுக்கு, ஒரு சிறு ஞாயிறு வேதபாட பள்ளி செய்தியைப், போன்று, நான் அளிக்க உள்ளேன். 51. நான் பேசுவதை சரியாக, சுற்றிலும், எல்லாவிடங்களிலும், உங்களால் கேட்க முடிகிறதா-? நான் இந்த ஒலிபெருக்கியை மேலே நகர்த்தினேன். எனக்கு தொண்டை சற்று கரகரப்பாக உள்ளது. நான், நான் இங்கு வந்தவுடனே எனக்கு சளிக்காய்ச்சல் ஏற்பட்டது. என்னை இங்கிருந்து விலக்கி வைக்க பிசாசு இயன்றளவு முயற்சித்தான். எனக்குத் தெரியாது. இந்த தொடர் கூட்டத்தில் இந்த நேரத்தில் மகத்தான ஏதோ ஒரு காரியத்தை நிச்சயமாகவே தேவன் ஊற்றுவார் என்று நான் விசுவாசிக்கிறேன், ஏனென்றால் இதிலிருந்து என்னை விலக்கி வைக்க சாத்தான் அவனால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்து உள்ளான். 52. ஆனால் இப்பொழுது நாம் ஆதியாகமம், 22-ம் அதிகாரத்திலிருந்து வாசிக்கப் போகிறோம். நீங்கள் உங்களுடைய வேதாகமத்தைத் திருப்புங்கள், நாம் அதில் இருந்து ஒரு பகுதியை, சேர்ந்து வாசிப்போம். ஆதியாகமம் 22, நாம் 9-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். தேவன், அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில், அடுக்கிய கட்டைகளின் மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்தில் இருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும் போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகன பலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்துக்கு, ''யேகோவாயீரே,'' என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்தில் இருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக் கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததிகளை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருவின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும், 53. நான் அந்த கடைசி சொற்றொடரை ஒரு பாடப் பகுதியாக எடுக்க விரும்புகிறேன்: உன் சந்ததியார் தங்கள் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். அது ஒரு- ஒரு அற்புதமான வாக்குத்தத்தம். 54. இப்போது நாம் யாவரும் இந்த நிகழ்சியை அறிந்திருக்கிறோம், ஒரு வேளை அதை மீண்டும் மீண்டும், ஆபிரகாமை குறித்து, தேவன் எப்படி அவனை அவனுடைய தேசத்திலிருந்து அழைத்தார் என்றும், அவன் எப்படி ஒரு சாதாரண மனிதனாக இருந்தான் என்றும், சிறப்பு ஏதுமில்லை என்றும், சற்று நேரம் கழித்தும் படிக்கலாம். ஆனால் தேவன் அவனை அழைத்து, அவனுக்கு ஒரு வாக்குத்தத்தைக் கொடுத்தார். 55. இப்பொழுது, தேவன் ஆபிரகாமுக்கு அளித்த இந்த வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு மாத்திரமானதாய் இருக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் அது அவனுக்கு பின் வரும் சந்ததிக்குமானதாய் இருந்தது. இப்பொழுது, அநேக ஜனங்கள், "ஓ, நான் ஆபிரகாமை போல இருந்திருந்தால், தேவன் ஆபிரகாமுக்கு செய்தது போல அவர் என்னிடத்தில் பேசி மற்றும் எனக்கு உறுதி அளித்து இருந்திருந்தால் அப்பொழுது நான் அதைப் பெற்றுக் கொண்டு இருந்திருப்பேன். தேவன் ஆபிரகாமுக்கு செய்தது போல அவர் என்னிடத்தில் பேசி இருந்திருந்தால், சகோ.பிரான்ஹாம், நான்- நான் உண்மையாகவே விசுவாசத்தை உடையவனாய் இருந்திருப்பேன்,” என்று கூறுகின்றனர். ஆனால் நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாய் இருந்தால், ஆபிரகாமுக்கு இருந்த அதே விசுவாசத்தை, அதையே, நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். 56. அப்படியானால் நீங்கள், “ஆனால், சகோ.பிரான்ஹாம், நான் ஒரு புறஜாதி. நான் ஆபிரகாமின் சந்ததியாக இருக்க முடியாது” என்று கூறுகிறீர்கள். 57. ஆபிரகாமின் சந்ததி மாம்சபிரகாரமான சந்ததியாய் இருக்கவில்லை. அது ஆவிக்கு உரிய சந்ததியாய் இருந்தது, ஏனென்றால் அதைக் குறித்து விருத்த சேதனம் ஒன்றும் இல்லாதிருந்தது. வாக்குத்தத்தம், அவர் அவனுக்கு விருத்த சேதனத்திற்கு முன்பே அளிக்கிறார். ஆனால் அது அவனுக்கு விருத்த சேதனத்திற்கு முன்பே கொடுக்கப்பட்டு இருந்தது, அது அவன் விருத்தசேதனம் செய்யப்பட்டு அந்த விதமாக தேவனோடு உடன்படிக்கை செய்த காரணத்தினால் அல்ல. ஆபிரகாம் தேவனை விசுவாசித்த காரணத்தினாலேயாகும். 58. மேலும் வேதம், "நாம் கிறிஸ்துவுக்குள்ளாக மரிக்கும் போது, நாம் ஆபிரகாமின் சந்ததி ஆகிறோம்," என்று கூறி உள்ளது. பவுல், "ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, உள்ளத்திலே யூதனானவனே யூதன்" என்று அதைக் குறித்துப் பேசுகிறான். ஆகையால், நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால், "நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத் தத்தத்தின்படியே ஆபிரகாமுடன் சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.” புரிகிறதா-? ஆகையால் தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த ஒவ்வொரு வாக்குத் தத்தமும் உங்களுடையதாய் இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் ஆவிக்குரியப் பிரகாரமான ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கிறீர்கள். 59. நீங்கள் யூதனுடைய இரத்தத்தில் பிறந்திருந்து, அதன் பின்- அதன் பின்னர் அந்த சபையில் ஒரு வைதீக யூதராயிருந்து, நீங்கள் இந்த விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிறவராய் இருப்பதைக் காட்டிலும், நீங்கள் ஒரு மேம்பட்ட யூதராக இருக்கிறீர்கள். புரிகிறதா-? நீங்கள் ஒரு யூதராக இருக்கிறீர்கள், ஏனென்றால் பரலோகத்தில் இருந்து வந்த ஒரு வாக்குத் தத்தத்தினால் நீங்கள் ஒரு யூதராக பிறந்து இருக்கிறீர்கள், தேவன், ஆபிரகாமுக்கு கொடுத்தார், ஆபிரகாம் அதை விசுவாசத்தினால் ஏற்றுக் கொண்டான், அதுவே அவன் என்னவாய் இருந்தான் என்பதாக்கியது. மொத்தத்தில், ஒரு யூதன் வேறு பிரிந்தவனாய், கடந்து வந்தவனாய், எபிரெயனாய், மற்றும் அந்த விதமாக இருக்கிறான். 60. இப்பொழுது, நீங்கள் உங்களை உலகத்தின் காரியங்களிலிருந்து வேறு பிரித்திருக்கும் போது, அந்த பிரிக்கும் கோட்டைக் கடந்து, ஓர் அந்நிய தேசத்தில், ஆரம்பத்தில், நீங்கள் இல்லாதிருந்த ஒரு தேசத்தில், ஆரம்பத்தில் நீங்கள் ஒரு போதும் தொடர்பு கொண்டிராத ஜனங்களோடு, சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறீர்கள், அப்பொழுது நீங்கள் ஒரு ஆவிக்குரிய யூதராகின்றீர்கள். ஏனெனில் அந்த விதமாகவே ஆபிரகாம் விசுவாசத்தினால் தன்னுடைய தேசத்தை விட்டு, தன்னுடைய ஜனங்களை விட்டு, அந்நிய ஜனங்களோடு ஒரு அந்நிய தேசத்துக்கு சென்றான். நீங்கள் உங்களுடைய ஜனங்களை விட்டு விட்டீர்கள், உலகத்தை விட்டு விட்டீர்கள், உங்களுடைய கூட்டாளிகளை விட்டு விட்டீர்கள், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினூடாக, கடந்து வந்து, பரதேசிகளாய் சஞ்சரித்து, ஆபிரகாம் இருந்ததைப் போன்றே, தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரத்திற்காக தேடிக் கொண்டிருக்கிறீர்கள். யாத்திரிகர்களாய், அவரோடு கூட இருந்து, கூடாரங்களில், சபைகளில் வாசம் பண்ணி, பரலோக ராஜ்ஜியத்தின் உடன் பிரஜைகளாக, இயேசு கிறிஸ்து மூலமாக எல்லா காரியங்களுக்கும் சுதந்திரவாளிகளாக இருக்கிறீர்கள். புரிகிறதா-? நாம் கடந்து வந்து, வேறு பிரிந்து உள்ளோம். 61 இப்பொழுது, ஆபிரகாம், வாக்குதத்தமானது, ஆபிரகாமுக்கும் அவனுக்கு பின் வரும் சந்ததிக்கும் செய்யப்படுகிறது. இப்பொழுது, தேவன் இந்த வாக்குத் தத்தத்தை, ஆபிரகாமுக்கும், அவனுடைய சந்ததிக்கும்.., அவர் ஆபிரகாமை சோதித்தப் பிறகு, பரிசோதித்தப் பிறகு, தங்களுடைடைய சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ள அவர் இந்த வாக்குத்தத்தை அளித்தார். இப்பொழுது, சோதனை வந்த பிறகே, அதன் பின்னரே... 62 ஆபிரகாம் ஏற்கனவே அஞ்ஞான மார்க்த்திலிருந்து தேவனுக்குள்ளாக மனமாற்றம் அடைந்திருந்தான், நாம் அதை அவ்வாறு அழைப்போம். மேலும் அப்பொழுது தேவன் அவனுக்கு, பரிசுத்தாவியின் ஒரு அடையாளமாக, விருத்த சேதனத்தைக் கொடுத்திருந்தார். அதன் பின்னரே, விருத்தசேதனத்திற்குப் பின்னரே, அதன் பின்னரே சோதனையின் நேரம் உண்டானது. 63 இங்கே சபைக்கு ஒரு மிக அழகான மாதிரி, அதாவது, நாம் இரட்சிக்கப்பட்டப் பிறகே, அப்பொழுது நமக்கு வாக்குதத்தம் பண்ணப்பட்ட முத்திரையாக விருத்த சேதனம், மாம்சத்தின்படி அல்ல, ஆவியின்படி கொடுக்கப்படுகிறது. மேலும் பரிசுத்தாவியே நம்முடைய விருத்தசேதனமாய் இருக்கிறது. அது தேவனுடைய கூர்மையான கத்தியாய் இருக்கிறது. அது நம்மிடத்தில் இருந்து தேவையற்ற மாம்சத்தையும், உலகத்தையும் வெட்டி வேறு பிரிக்கிறது. தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிற்றே-! எனவே, நீங்கள் பாருங்கள், மீண்டும் திரும்பி வாருங்கள். தேவனுடைய வார்த்தை என்பது பரிசுத்தாவியானவர் உபயோகிக்கிற காரியமாய் இருக்கிறது; கோட்பாடுகள் அல்ல, ஸ்தாபனங்கள் அல்ல. ஆனால் வார்த்தையே நம்மை உலகத்தின் காரியங்களில் இருந்து வேறு பிரிக்கிறது. அது நம்முடைய எண்ணங்களையும் காரியங்களையும் வெட்டி, முழுமையாக நம்மை தேவனிடத்தில் அர்பணிக்கிறது. 64. இயேசு, "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்து இருந்தால்," அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. அப்படியானால் அது உங்களுடைய வார்த்தை அல்ல. அது அவருடைய வார்த்தையாக இருக்கிறது. அப்படியானால், நீங்கள் பாருங்கள், “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதை பெற்றுக் கொள்ள முடியும்.” ஹு-ஹூ. புரிகிறதா-? அது என்னவாக இருக்கிறது, நீங்கள் உங்களுடைய சொந்த வார்த்தையைப் பேசிக் கொண்டு இருக்கவில்லை. நீங்கள் அவருடைய வார்த்தையை பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். 65. ஆகையால் பரிசுத்த ஆவியானவரே தேவனுடைய வார்த்தையை எடுத்து நம்மை உலகத்தின் காரியங்களில் இருந்து வேறு பிரிக்கிறவராக இருக்கிறார், பாருங்கள், விருத்தசேதனம், வெட்டியெடுத்தல். அதன் பின்னர் நீங்கள் ஒரு சோதனையின் ஊடாக செல்கிறீர்கள். 66. இப்பொழுது, ஆபிரகாம், கல்தேயர் தேசமான, ஊர் பட்டிணத்திலிருந்து, அவன் அழைக்கப்பட்ட பிறகு, அவன் ஒரு யாத்திரிகனும், ஒரு பரதேசியும் ஆனான். அவன் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு போகப் போகிறான் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, அதன் பின்னரே தேவன் அவனை அழைத்தார். அதன் பின்னர், அப்பொழுது தேவன் என்ன செய்தார், அவன் அவரை ஏற்றுக் கொண்டிருந்தான் என்பதற்கு, ஒரு அடையாளத்தை அவனுக்குக் கொடுத்திருந்தார், அவர் அவனுக்கு விருத்தசேதனம் செய்தார். அவன் இஸ்மவேலுக்கும் மற்றும் அவனுடைய வீட்டார் யாவருக்கும் விருத்தசேதனம் செய்தான். 67. மேலும் இப்போது நீங்கள் பாருங்கள், நீங்கள் அழைக்கப்படும் போது, நீங்கள் உண்மையாகவே தொடர்ந்து செல்ல போகின்றீர்களா என்பதைப் பார்க்க, முதலாவது நீங்கள் ஒரு சோதனையின் ஊடாக செல்கிறீர்கள். அதன் பின்னர் தேவன் உங்களுக்கு பரிசுத்தாவியைத் தருகிறார், அது நீங்கள் அவருக்குள்ளாக இருப்பதாக உறுதியாக கூறுகிற உங்களுடைய விசுவாசத்தை அவர் ஏற்றுக் கொண்டு உள்ளார் என்பதற்கான அடையாளமாக இருக்கிறது. இப்பொழுது நான் கூறுவதை நீங்கள் கவனித்து வருகிறீர்களா-? அவர் அதை ஏற்றுக் கொள்ளப் போகிறார். 68. இப்பொழுது நான் பேசிக்கொண்டிருந்த, சில விலையேறப் பெற்ற பாப்டிஸ்ட் சகோதரர்கள் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கலாம். மேலும் நான் ஒரு பாப்டிஸ்டு சபையில் இருந்து வெளியே வந்தவன் என்பதை ஒவ்வொருவரும் அறிவர். நான் என்னுடைய பாப்டிஸ்டு சகோதரனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடத்தில், "சகோ.பிரான்ஹாம்-?” என்று ஒன்றைக் கேட்டார். அவர் தெய்வீக பாண்டித்தியம் பெற்ற ஒருவர், ஒரு அருமையான மனிதன், உண்மையான கிறிஸ்தவராய் இருந்தார். அவர், “ஆனால், சகோ.பிரான்ஹாம், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தை காட்டிலும் வித்தியாசமாக இருக்கிற பரிசுத்தாவியின் அபிஷேகத்தை நீங்கள் எங்கே பெற்றுக் கொள்கிறீர்கள்-?” என்று கேட்டார். அப்பொழுது நான், “அது வித்தியாசமானது, என் விலையேறப் பெற்ற சகோதரனே,” என்றேன். 69. அதற்கு அவர், “நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது, நீங்கள் பரிசுத்தாவியை பெற்று கொள்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கவில்லையா-?” என்றார். 70. அப்பொழுது நான், "சரியே. ஆனால்,” என்று கூறி, மேலும் நான், “நீங்கள் பாருங்கள், அவர் அதை அங்கீகரிக்கும் வரையில், நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிக்கை மாத்திரமே செய்து கொண்டிருக்கிறீர்கள்,” என்று கூறினேன். 71. அதற்கு அவர், “சகோ.பிரான்ஹாமே, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்று கூறினார். 72. அப்பொழுது நான், "ஆம். ஆனால் தேவன் அவனுடைய விசுவாசத்தை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு அவர், அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார், அவர், அவனுக்கு விருத்தசேதனத்தின் முத்திரையை அளித்தபோது, அவர் அவனுடைய விசுவாசத்தை அங்கீகரித்திருந்தார்,” என்றேன். ஆமென். 73. இப்பொழுது நாம் கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது, அப்பொழுது, நாம் அதில் உத்தமமாக இருந்தால், அப்பொழுது பரிசுத்த ஆவியாய் இருக்கிற விருத்தசேதனத்தின் முத்திரையை நமக்கு கொடுப்பதன் மூலம் கிறிஸ்துவில் உள்ள நம்முடைய விசுவாசத்தை அவர் ஏற்றுக் கொண்டு உள்ளார் என்பதற்கு தேவன் நமக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறார். அதுவே விருத்தசேதனத்தின் முத்திரையாய் இருக்கிறது. “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." அடுத்த கூட்டம் வரை அல்ல; ஆனால் உங்களுடைய மீட்பின் நாள் வரைக்கும். அது உண்மை, எபேசியர்.4:30. இப்பொழுது, அப்படித் தான் நாம் பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்கிறோம். 74. இப்பொழுது, நீங்களோ, "ஓ, நான் ஒரு விசுவாசி,” என்று கூறினாலும், தேவன் இன்னும் உங்களுக்கு பரிசுத்தாவியைக் கொடுக்கவே இல்லை, அவர் அதை ஒரு போதும் அங்கீகரிக்கவே இல்லை. நீங்கள் அதை விசுவாசிப்பதாக வெறுமென அறிக்கையிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் எல்லா சந்தேகமும்... நீங்கள் இப்பொழுது ஒரு விசுவாசியாக இருக்கவில்லை என்று நான் கூறிக் கொண்டு இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பாகத்தில், நீங்கள் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்கள். 75. ஆனால் தேவன் தயவை அளிக்கும் போது, நீங்கள் அவரோடு தயை கண்டு அடைகிறீர்கள், சரியாகக் கூறினால், அவர் உங்களை தம்முடைய பிள்ளையாக அடையாளம் கண்டு கொள்கிறார், மேலும் அவர் உங்கள் இருதயத்தை அறிந்து இருக்கிறார், அவர் உங்களுடைய உத்தமத்தைக் காண்கிறார், உங்களிடத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிற எல்லா காரியங்களையும் அவர் அறிந்து இருக்கிறார். அப்பொழுது அவர் உங்களை பரிசுத்த ஆவியினால், தேவனுடைய இராஜ்யத்திற்கு உள்ளாக முத்தரிக்கிறார், நீங்கள் அவருக்குள் கொண்டுள்ளதாக உறுதியாக கூறுகிற விசுவாசத்தை அவர் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று உலகத்திற்கு நிரூபிக்கிறார். இப்பொழுது இதைப் புரிந்து கொண்டீர்களா-? 76. இப்பொழுது, அதற்கு பின்னர் உடனடியாக, சோதனை உண்டாகிறது. "தேவன் இடத்திற்கு வருகிற ஒவ்வொரு குமாரனும் முதலில் சோதிக்கப்பட்டு சிட்சிக்கப் பட வேண்டும். ' 77. இயேசு, யோவான் அவருக்கு ஞானஸ்தானம் கொடுத்த போது, நதியிலே, அவர் ஆவியின் பரிபூரணத்தைப் பெற்றுக் கொண்டவுடனே, ஒரு சோதனையின் நேரத்தினூடாக கொண்டு செல்ல, பிசாசு அவரை உடனே வனாந்திரத்திற்கு எடுத்துக் கொண்டு சென்றான். ஆனால் அவர் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்ட போது, "எழுதியிருக்கிறதே. எழுதியிருக்கிறதே” என்று கூறி, பிசாசை ஜெயங் கொண்டார், அவர் திரும்பி வந்து அதன் பின்னர் தன்னுடைய ஊழியத்திற்கு ஆயத்தமானார். 78. அந்த விதமாகவே தேவன் ஆபிரகாமுக்குச் செய்தார். இப்பொழுது, தேவன், அவனுடைய தேசத்தில் இருந்து அவனை அழைத்த பிறகு, அவனுடைய தேசத்தில் இருந்தும், தன்னுடைய ஜனங்களிடத்திலிருந்தும், தன்னை வேறு பிரித்துக் கொண்டான், அப்பொழுது தேவன் அவனுக்கு விருத்தசேதனத்தின் முத்திரையைக் கொடுத்தார், அதன் பின்னர் அவனுக்கு குமாரனைக் கொடுத்தார். அதன்பி ன்னர் அவன் அந்த கடைசியான சோதனைக்குச் சென்றான், அந்த நேரத்தில் அவன் தன்னுடைய சொந்த குமாரனாகிய ஈசாக்கை ஒரு பலியாக அளிக்க வேண்டியதாய் இருந்தது. அப்பொழுது அவர், “நீ அவனை ஏகசுதன் என்றும் பாராததினால் நீ என்னை நேசிக்கிறாய் என்பதை நான் அறிந்து இருக்கிறேன்" என்றார். அவர், அவனுக்கு அந்த சோதனையைக் கொடுத்தார். 79. அதன் பின்னர் உடனடியாக, அப்பொழுதே யுத்தமானது வெற்றி பெற்று விட்டது, அவர், “உன் சந்ததி தங்கள் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்வார்கள்” என்றார். ஆமென். எனக்கு அது பிடிக்கும். "தங்கள் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்வார்கள்." கர்த்தருக்குச் சித்தமானால், இன்னும் ஒரு சில நிமிடங்களில், நாம் அந்த முடிவான கூற்றைப் புரிந்து கொள்வோம். இப்பொழுது அவர் இதை, ஆபிரகாம் உண்மையுள்ளவன் என்பதைக் கண்டார். ஆபிரகாம் உண்மையுள்ளவன் என்பதை அவர் கண்ட பிறகே, அதன் பின்னரே அவர் அவனுக்கு சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ளும் வாக்குத் தத்தத்தை அளித்தார். 80. இப்பொழுது, அநேக சமயங்களில், நம்மில் பலர் பெந்தேகோஸ்தேக்காரர்கள் ஒரு தவறை செய்து உள்ளனர் என்றும், "பாருங்கள், பரிசுத்த ஆவி என் மேல் ஊற்றப்படுகிறது. தேவனுக்கு மகிமை-! நான் பெற்றுக் கொள்ள வேண்டியது அவ்வளவு தான்,” என்று நினைக்கிறோம். இல்லை, ஐயா. நீங்கள் அப்பொழுது தான் தொடங்கி இருக்கிறீர்கள். நீங்கள், அது அப்பொழுது அல்ல. இது உங்கள் உடைய பரீட்சையும் சோதனையுமாய் இருக்கிறது. 81. நாம் அந்த விதமாகவே, பழைய ஏற்பாட்டில்— அங்கே கண்டறிகிறோம்; பரீட்சை, சோதனை, அதன் பின்னர் குமாரனை ஸ்தானத்தில் வைத்தல். புத்திர சுவிகாரம், அவன் குடும்பத்திற்குள் பிறந்திருந்து, ஏற்கனவே ஒரு மகனாக இருந்த பிறகு, அந்த குமாரனை ஸ்தானத்தில் வைத்தல். அவன் ஒரு குமாரனாய் இருக்கிறான், அதன் பின்னர் அவன் பரீட்சிக்கப்பட்டு சோதிக்கப் பட்டு, ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டு, அவன் எப்படி வளர்ந்து வருகிறான் என்று பார்ப்பார். அதன் பின்னர் அவன் கிட்டத்தட்ட தன்னுடைய தகப்பனுக்கு, சமமாக, அந்த ஸ்தானத்தில் வைக்கப்படுகிறான். 82. இப்பொழுது அது தான் இன்றைக்கும் உள்ளது. நாம் சுமார் நாற்பது வருடங்கள், அல்லது அதற்கு மேலாக பெந்தேகோஸ்தேயின் சோதனையை உடையவர்களாக இருந்தோம், அவர்கள் நிற்கப் போகிறார்களா அல்லது இல்லையா என்று பார்க்கும்படி, சபையை சோதித்துப் பார்க்கிறோம். நீங்கள் என்ன என்று பார்க்கிறோம்... மேலும், பாருங்கள், அங்கு தான் நான் அதை மீண்டும் பெற்றுக் கொள்கிறேன். சிலுவையையும் வார்த்தையும் பற்றிக் கொண்டு, முன்னேறிச் செல்வதற்கு பதிலாக, நாம் உலகத்தைப் பின்பற்றி நாகரீகமாகி, இந்த வழியை விட்டு விட்டு, அல்லது இந்த ஒரு வழியை விட்டு விட்டு, அல்லது இதை மாதிரியாகப் பின் பற்றுகிறோம். 83. இன்றைக்கு இந்த நவீன போக்கில் நான் எப்பொழுதுமே ஜனங்களுக்கு எதிராக மிகக் கடுமையாக பேசியுள்ளதற்குக் காரணம், ஸ்தீரிகள் தங்களுடைய தலை முடியை வெட்டிக்கொள்கிறார்கள், மற்றும்— மற்றும் புருஷர்கள் மட்டுமீறி நடந்து ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறார்கள், ஒழுக்கக் கேடான ஆடைகளையும் மற்ற காரியங்களையும் அணிகிறார்கள். அது குறித்து நிறைய விமர்சனங்களை நான் பெற்றுக் கொள்கிறேன். ஆனால் அது என்ன-? அது அந்த சபையைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பதாய் இருக்கிறது. உலகத்தில் உள்ள மற்றவர் அதைக் குறித்து என்ன கூறினாலும் பொருட் படுத்தாமல் அது அவர்களை இங்கே, தேவனுடைய வார்த்தைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையோடு தரித்து இருங்கள். ஆமென். புரிகிறதா-? பார்த்தீர்களா-? 84. அதுகுறித்த காரியம் என்னவென்றால், நான் கடந்த இரவு கூறிக் கொண்டு இருந்தது போல பெந்தேகோஸ்தேயினர் ஒரு பலத்த காற்று அடிக்கிற முழக்கத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்பதற்கு தவறிப் போனார்கள். புரிகிறதா-? அதாவது, அந்தக் காரியங்களை செய்வது தவறாக இருக்கிறது. அவர்கள், "பலத்த காற்று அடித்துக் கொண்டிருக்கும் வரை சரி” என்று நினைக்கிறார்கள். 85. ஆனால் அது தீர்க்கதரிசியின் கவனத்தைக் கவரவில்லை. பலத்த காற்று ஒரு போதும் குகையிலிருந்த எலியா தீர்க்கதரிசியைப் பாதிக்கவில்லை. பலத்த இடி முழக்கங்களும் மின்னல்களும் மற்றும் பொழிவுகளும் ஒரு போதும் அவனைக் கவரவே இல்லை. ஆனால் அவனைத் திடுக்கிடச் செய்தது எது என்றால் உட்புறத்தில் ஏதோ ஒன்றை பேசுகிற அந்த அமர்ந்த மெல்லிய சத்தமாய் இருந்தது. “என்னுடைய வார்த்தை சத்தியம். எல்லா மனிதனுடைய வார்த்தையும் பொய், என்னுடையதே சத்தியமாகும்.” அதுதான் தீர்க்கதரிசியைக் கவர்ந்தது. புரிகிறதா-? 86. அது இன்னமும் அதைச் செய்யும். தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே ஆவிக்குரிய சிந்தையைக் கவர்கிறது, ஏனென்றால் அது உங்களுக்கு உள்ளாக இருக்கிற கிறிஸ்துவின் சிந்தையாய் இருக்கிறது, வார்த்தை சத்தியமாக இருக்கிறது என்பதை அது அறிந்து உள்ளது. 87. நீங்கள் ஒரு சோதனை நேரத்தினூடாகச் செல்கிறீர்கள். சபை ஒரு சோதனை நேரத்தினூடாகச் செல்கிறது. தனிப்பட்ட ஒவ்வொருவரும் சத்துருவின் வாசலை சுதந்தரிப்பதற்கு முன்பு ஒரு சோதனை நேரத்தினூடாக செல்கின்றனர். ஆபிரகாம் அதனூடாகச் சென்றான். கிறிஸ்து அதனூடாகச் சென்றார். யோர்தான் நதியண்டையிலே, கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டப் பிறகு, அவர் ஒரு சோதனை நேரத்தினூடாகச் சென்றார். ஆபிரகாம் அழைக்கப்பட்ட பிறகு, ஒரு பரதேசியாய் இருக்கும்படியாக அவனுடைய தேசத்தில் வைத்து, அதன் பின்னர் ஒரு விருத்தசேனத்தை அளித்து, தேவன் அவனை அவ்வப்போது சந்தித்தார், அதே சமயத்தில் அவன் சோதனை நேரத்தினூடாக செல்ல வேண்டியதாயிருந்தது. ஆபிரகாமின் ஒவ்வொரு சந்ததியும் அதே காரியத்தைச் செய்கிறது, ஆபிரகாமும் அவனுடைய சந்ததியும். 88. ஒரு ஸ்தாபனம், ஒரு சபை, அது ஒரு சோதனைக்கு வரும் போது, அந்தக் காரணத்தினால் தான் நம்முடைய ஸ்தாபனங்கள் பாதையில் விழுவதைக் கண்டறிகிறோம். என்ன சோதனை-? தேவனுடைய வார்த்தை. சோதனை உண்டு. தேவனுடைய வார்த்தை சோதனையாக இருக்கிறது. ஒரு கூட்ட மனிதர் கூறுகிறதை நாம் செய்வோமா, அல்லது தேவன் கூறுவதை நாம் செய்வோமா-? அது தான் வித்தியாசம். 89. அது உண்டானதோ, டுவைட் மூடியின் நாட்களில், ஃபின்னியின் நாட்களில், சாங்கி, கால்வின், ஸ்பர்ஜன், மற்ற யாவரும், அந்த ஆவிக்குரிய மனிதர்கள், ஸ்தாபனங்கள் அவர்களைப் பின் தொடர்ந்தன. அவர்கள் அங்கே முன்னர் எழுப்பி உள்ள ஒரு கூட்ட மனிதர் தங்களுடைய வழிகளை அதற்குள் துண்டித்துக் கொண்டனர், முடிவிலே அவர்கள் அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்குமளவிற்கு ஒவ்வொருவரும் இதை அதை விசுவாசித்து, இங்கே கொஞ்சம் சேர்த்து, அங்கே கொஞ்சம் எடுத்து போட்டு, இங்கே கொஞ்சம் கூட்டிக் கொண்டனர். 90. அவர்கள் அவ்வாறு செய்கிறபோது, அசலான உண்மையான விசுவாசிக்காக, தேவன் நேராக வந்து ஒரு எளிய, தாழ்மையான நபரை எடுத்து, அந்த காரியங்களைச் சுக்குநூறாக உடைத்துப்போடுகிறார். சரி. எப்பொழுதுமே அதைச் செய்து உள்ளார். தேவன் மாறுகிறதில்லை. அந்தக் காரியத்தைச் சுக்குநூறாக கிழித்தெறிகிறார், சில ஆவிக்குரிய சிந்தை கொண்ட ஜனங்கள் வார்த்தையோடு தரித்து இருப்பார்கள். 91. நான் உங்களுக்குச் சொல்லட்டும். அருமையான சபைகளில் ஒன்றில், பெந்தேகோஸ்தே அசைவில் உள்ள பெரிய ஸ்தாபனங்களிலிருந்து வந்த, ஒரு கடிதத்தை நான் வீட்டில் வைத்துள்ளேன். அந்த ஏழ்மையான இருதயம் நொறுங்குண்ட ஸ்திரீ எனக்கு ஒரு கடிதத்தை எழுதினாள். அவள், “சகோதரன் பிரான்ஹாம், நான் நீண்ட தலைமுடியினை உடையவளாக இருந்து என்னுடைய தலைக்கு பின்னால் அதை ஒரு கொண்டையாக வைத்திருந்தேன்” என்றாள். அவள், "மேலும்... என்னுடைய கணவருக்கு அது பிடித்திருந்தது” என்றாள். மேலும் அவள், "உண்மையாகவே ஆவிக்குரியதாய் இருந்த ஒரு சபையில் இருந்து நாங்கள் நகரத்திற்கு இடம் பெயர்ந்து, இந்தப் பெரிய சபைக்கு, நகரத்தின் முதன்மையான சபைக்குள் சென்றோம்,” என்றாள். அவள் தொடர்ந்து, “நாங்கள் அங்கு சென்ற போது, எல்லா பெந்தேகோஸ்தே சகோதரிகளும் தங்களுடைய தலைமுடியை கத்தரித்திருந்தனர்,” என்றாள். மேலும் அவள், “அவர்கள் அதைக் குறித்து என்னிடத்தில் கேட்டனர். அப்பொழுது நான், 'இல்லை, இல்லை. அதை செய்யக் கூடாது என்று வேதம் நமக்கு கூறுகிறதை நான் விசுவாசிக்கிறேன்; அதை செய்வது கனவீனமாய் இருக்கிறது” என்றேன். மேலும் அவள், “அப்பொழுது அவர்கள்... அவர்கள் அவளைப் பார்த்து சிரித்தனர் என்றும், மேலும், 'ஹே, அது பின் புறத்தில் உன்னுடைய உன்னுடைய உதிரியான, காற்றுப் போய் விட்ட தட்டையான டையரைப் போன்றிருக்கப் போகிறது,' என்றும், மற்றும் அதைப் போன்றே பரியாசம் பண்ணினார்கள் என்றும் கூறினாள். மேலும் என்னுடைய கணவரும் என்னை பலவந்தம் செய்து என்னுடைய முடியை வெட்டும் வரை அப்பேர்ப்பட்ட ஒரு தொல்லையை அவருக்குக்கொடுத்தனர்,” என்றும் கூறினாள். மேலும், "அது முதற்கொண்டு நான் கடிந்து கொள்ளப்பட்டேன்,” என்றாள். 92. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், தேவனுடைய வார்த்தைக்காக நிற்க வேண்டிய ஒரு பெந்தேகோஸ்தே சபை-! அங்கு தான் உங்களுடைய ஸ்தாபனம் உங்களைக் கொண்டு செல்கிறது. சரி. வார்த்தையின் அமர்ந்த மெல்லிய சத்தம், அவர்களை சத்தியத்திற்கு அழைக்கிறது என்பதை அவர்கள் கேட்கத் தவறிப் போகின்றனர். அவர்கள் எல்லோரும் பலத்த காற்று அடிக்கிற முழகத்தையும், ஏராளமான சத்தத்தையும் நடனத்தையும் கேட்டுக் கொண்டு, அவர்கள் வல்லமையைப் பெற்று விட்டதாகக் கூறுகிறார்கள். அதனால் பரவாயில்லை. நானும் கூட அதில் நம்பிக்கைக் கொண்டு உள்ளேன். ஆனால், சகோதரனே, உங்களால் நடனமாடி சத்தமிட முடிந்து, அதன் பின்னர் நீங்கள் திரும்பி தேவனுடைய வார்த்தையை மறுதலித்து, உலகத்தைப் போன்று ஜீவிக்கும் போது, அதில் எங்கோ ஏதோ தவறு உள்ளது. உண்மை. 93. தேவனுடைய ஆவியானது இறங்கி வந்து, அந்த அமர்ந்த மெல்லிய சத்தம், உங்களை நேராக கல்வாரிக்கு வழி நடத்துகிறது, அங்கு நாம் மரித்து, நம் உடைய ஜீவன் கிறிஸ்து மூலமாக தேவனுக்குள் மறைந்து, பரிசுத்தவியினால் முத்திரை இடப்படுகிறோம். அப்பொழுது அந்த வார்த்தை மாத்திரமே அங்கே ஜிவிக்கிறது. “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்து இருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்கு கொடுக்கப்படும்.” அங்கு வித்தியாசம் உள்ளது. 94. நான் உங்களுக்கு ஒரு மதவெறியன் போல தோன்றவில்லை என்று நான் நம்புகிறேன். நான் அவ்வாறு இருந்தால், நான்- நான் நான் அதைக் குறித்து அறியாதவனாய் இருக்கிறேன். தேவனுடைய வார்த்தை சத்தியமாய் இருக்கிறது என்றும், அது இங்கே நிலைத்திருக்க வேண்டும் என்றும் நான்— நான் விசுவாசிக்கிறேன். அது இங்கே நிலைத்து இருந்தால், அது தன்னை வெளிப்படையாக காண்பிக்கும். அது காண்பிக்க வேண்டுமே-! உங்களுடைய ஜீவியமும், உங்களுடைய முழு அமைப்பும், வித்தியாசமாக இருக்கும். 95. எனவே தேவன் ஆபிரகாமுக்கு சோதனையைக் கொடுத்த போது, அவன் நூறு சதவீதம், அதனூடாக கடந்து வந்தான். மேலும்... 96. தேவன் ஸ்தாபனத்திற்கு ஒரு சோதனையை கொடுக்க முடியாது, ஏனென்றால் அது முழுவதும் கலப்படமடைந்துள்ளது. தேவன் ஸ்தாபனத்தோடு அந்த விதமாக ஈடுபடுகிறதில்லை. அவர் புறஜாதி இனத்தில் தேசங்களோடு ஈடுபடுவதில்லை. "அவர் புறஜாதிகளிலிருந்து ஒரு ஜனத்தைத் தெரிந்து கொண்டார்.” இஸ்ரவேலை, அவர் ஒரு தேசமாகத் தெரிந்து கொண்டார். ஆனால், புறஜாதிகளிலிருந்து, “அவர் தம்முடைய நாமத்திற்காக புறஜாதிகளில் இருந்து ஒரு ஜனத்தைத் தெரிந்து கொண்டார்.” எனவே, நீங்கள் பாருங்கள், அது ஒரு ஸ்தாபனம்... அல்ல, அது ஒரு ஸ்தாபனம் அல்ல. அது அவர் புறஜாதியில் இருந்து தனிப்பட்ட நபர்களை தெரிந்தெடுப்பதாக உள்ளது. 97. சோதனை வரும் போது, என்ன நடக்கிறது என்று நீங்கள் பார்க்கிறீர்களா-? நாம் நீதிமானாக்கப்படுதல் இருந்து வெளியே வந்தோம். பெந்தேகோஸ்தே அசைவில் நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்டோம். ஆனால் சோதனை நேரம் உண்டான போது, மெருகேற்றப்பட்ட வேத பண்டிதர்களை பெற்றுக் கொண்டு, வெஸ்லியினுடைய அசைவின் நாட்களிலும் மற்ற ஏனையோரின் நாட்களிலும் இருந்தது போலவே உலகத்தைப் போன்று இருக்க விரும்புகிறோம். அவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்கள்-அவர்கள் விஞ்ஞானத்தை கற்கிறார்கள். மேலும் அவர்கள் கல்வியோடு செல்லுகிற மற்ற இந்த எல்லாவிதமான காரியங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் உளவியலைக் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள். “மிகச் சிறந்த காரியம், பாருங்கள், இதைக் கூறுகிறதில்லை. அவர்கள் இதை மற்றும் அதை செய்யட்டும். ஏனென்றால் அது...” பாருங்கள், நீங்கள் சேர்த்துக் கொண்டும் கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுடைய— உங்களுடைய— உங்களுடைய குறிக்கோள் தவறாக இருக்கிறது. உங்களுடைய எண்ணம் தவறாக இருக்கிறது. நீங்கள் கல்வாரியை உருவாக்குவதற்கு பதிலாக ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். வார்த்தையின் வழியினால் வராமல், உங்களால் எப்படி கல்வியை உருவாக்க முடியும்-? 98. “திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரிக்கப்பட்டு இருக்கிறோம்.” “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், அப்பொழுது உங்களுக்கு என்னவேண்டுமென்று கேளுங்கள்.” 99. அங்கு தான் பெந்தகோஸ்தே இயக்கத்தின் தோல்வியை நாம் காண்கிறோம், ஏனென்றால் அவர்கள் வார்த்தையிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர். வார்த்தை ஒரு காரியத்தைக் கூறும்; அவர்கள் அந்த ஸ்தாபனத்தை அங்கு எங்காவது உள்ளே கொண்டு வர முயற்சிப்பார்கள். அவர்கள் அந்த வார்த்தையில் இருந்து விலகி நடந்து, ஸ்தாபனத்தோடு அதை ஏற்றுக் கொள்வார்கள். அது எங்கே சென்று விட்டது என்று பார்க்கிறீர்களா-? அது கிட்டதட்ட மற்ற சபைகளைப் போன்றே உள்ளது. ஆனால் அதன் பின்னர் நாம் நடனமாடி, சத்தமிட்டு, அந்நிய பாஷைகளில் பேசி, மேலும் கீழும் குதிக்கிறோம், அவைகள் எல்லாம் சரி தான். அவர்களுடைய ஸ்தாபனம் சரி தான். நான் எனக்கு தானே தெளிவுபடுத்திக் கொண்டேன் என்று நான் நம்புகிறேன். ஆனால் காரியம் என்னவென்றால், அந்த அமர்ந்த மெல்லிய வார்த்தையின் சத்தம் பேசுகிறது. அது தான் அது. 100. நீங்கள் ஒரு சோதனையினூடாக செல்கிறீர்கள். தேவன் ஆபிரகாமுக்கு செய்தது போல உங்களை சோதிக்கிறார். இப்பொழுது, சத்துருவின் வாசலை நாம் சுதந்தரிக்காததற்கு காரணம், நம் மத்தியில் சத்துரு அதிகமாக இருப்பதற்கு காரணம், நம்மால் சோதனைக்கு நிற்க முடியாது இருப்பதே காரணமாயுள்ளது. மேலும் நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறட்டும், வார்த்தையின் சோதனையே சரியானது. 101. நம்மிடம் இல்லாததற்கு காரணம், மேலும் நாம் ஒரு போதும்... ஸ்தாபனத்தை உண்டாக்கமாட்டோம். பெந்தேகோஸ்தே சில அருமையான ஸ்தாபன அமைப்புகளைப் பெற்றுள்ளது என்று நான் நினைக்கிறேன். அருமையான மனிதர்களில் சிலர் நான்... பூமியில் ஜீவிக்கிறவர்கள்... அந்த அந்த ஸ்தாபனத்தை சார்ந்து இருக்கிறார்கள். 102. அசம்பிளீஸ் ஆஃப் காட், எனக்கு அங்கே நண்பர்கள் உண்டு. என்னே-! அங்கு இந்தியானாவில் இருக்கிற ஒரு சகோதரனிடத்தில், உடனே, ஒரு கூட்டத்தை நடத்தப்போகிறேன் என்று நான் நம்புகிறேன். சகோதரன் ராய் வீட், அவர் இந்தியானா மாநிலத்தின் ஒரு மாவட்ட அதிகாரியாய் இருக்கிறார். அவர் ஒரு தேவ பக்தியுள்ள மனிதன் என்று நான் நம்புகிறேன். அதே சமயத்தில், அவர் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையில் ஒரு மாவட்ட அதிகாரியாயிருக்கிறார். 103 ஃபோர்ஸ்கொயர், ஓ, என்னே, எத்தனை-! ரால்ப் மெக்பெர்சன் மற்றும் அந்த சகோதரர்களில் பலர், தேவபக்தியுள்ள மனிதர்களாயும், தங்களுடைய ஜீவியங்களில் வசதி ஏதுமில்லாது இருக்கின்றனர். அவர்கள் நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள். 104. அங்கே ஒருவத்துவத்தில், அவர்கள் தங்களை ஒருத்துவம் என்றே அழைத்துக் கொள்கிறார்கள். இல்லை என்றால், இப்பொழுது, நான் நினைக்க வில்லை... அவர்கள் அதை ''இயேசுவின் நாமம் சபை,'' என்று அழைக்கிறார்கள். ஜேக் மூர், ஒருவரைக் கூறுகிறேன்... அவர்களில் நூற்றுக் கணக்கானவர்கள் இருக்கிறார்கள், அருமையான மனிதர்கள், நல்ல மனிதர்கள், தேவ பக்தியுள்ள மனிதர்கள். 105. ஆனால் அதைக் குறித்த காரியம் என்னவென்றால், சகோதரனே, இது, அந்த ஸ்தாபனத்தை நீங்கள் சார்ந்திருக்கிறீர்கள். புரிகிறதா-? தேவன் அந்த ஸ்தாபனங்களை எடுத்து, மேலும் மேலும் அவைகள் ஒவ்வொன்றையும் விழச் செய்திருக்கிறார், அவைகளை நோக்கிப் பாருங்கள், உலகம் உள்ளே ஊர்ந்து வருகிறது. அவருடைய ஸ்திரீகளை நோக்கிப் பாருங்கள். அவர்களுடைய மனிதர்களை நோக்கிப் பாருங்கள். அவர்களுடைய நிலைமைகளை நோக்கிப் பாருங்கள். அசெம்பிளீஸ் ஆஃப் காட் ஜனங்கள் தங்களுடைய குழுவில் பெற்றுள்ள உதவிக்காரர்கள், 2 அல்லது 3 முறை விவாகமானவர்கள் என்பதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியும், பிரசங்கிமார்களும் அவ்வாறே இருந்து வருகிறார்கள். ஸ்தீரிகள் தங்களுடைய தலைமுடியை வெட்டிக் கொண்டு, குட்டைக் கால் சட்டைகளை அணிந்துகொண்டு, முக ஒப்பனை செய்துகொண்டு, இன்னமும் பரிசுத்தாவியைப் பெற்றிருப்பதாக கூறிக் கொண்டு, அந்நிய பாஷைகளில் பேசுவது, அல்லது மேலும் கீழும் குதிப்பது அல்லது சத்தமிடுவது என்ற அத்தாட்சியின் பேரில் சார்ந்திருக்கிறார்கள். 106 அவர்கள் அந்த வார்த்தையின் அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்கத் தவறிப் போகிறார்கள். அந்த வார்த்தை உங்களை சிலுவையண்டைக்கு சமநிலைப்படுத்துகிறது. அங்கு தான் அது இருக்கிறது. அந்தக் காரணத்தினால் தான் இன்றைக்கு சபையில் அகபுவைப்போல அசலான தீர்க்கதரிசிகளை நாம் பெற்றிருக்கவில்லை. 107. அந்தக் காரணத்தினால் தான், இன்றைய சபை, யாராவது அந்நிய பாஷையில் பேசும் பொழுது அவர்கள்— அவர்கள் மரியாதை அளிக்கிறதில்லை, ஏனென்றால் அவர்கள் அதில் எது சரி எது தவறு என்று அறியாத அளவிற்கு, அவர்கள் அதிகமான போலியான மற்றும் மட்டுமீறிய வகைகளை கேட்கிறார்கள். 108. வெறும் மாயையான வியாக்கியானங்கள், யாரோ எதோ காரியத்தைச் சொல்லுகிறார், ஏனென்றால் அவர் வழி நடத்தப்படுகிறதை உணருகிறார். அது அல்ல வியாக்கியானம். வியாக்கியானம் என்பதோ: யாரோ ஒருவர் நின்று அந்நிய பாஷையில் பேச, மற்றொருவர் ஒரு சில நிமிடங்களில் எழுந்து நின்று அவர் என்ன கூறினார் என்பதை சரியாக வியாக்கியானிக்காதது வியாக்கியானம் அல்ல. பேசிக் கொண்டிருக்கையில், மற்றொருவர் அங்கே வியாக்கியானித்துக் கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை, அதே தொனியில், அதே விதமாக ஒவ்வொரு காரியத்தையும் கூறுதல். இந்த மனிதன் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டு இருக்கலாம், ஆனால் அது வியாக்கியானம் அல்ல. அவர்களில் சிலர், இந்த விதமான ஒரு சத்தம் ஏதோ ஒரு காரியத்தை கூறிக்கொண்டிருக்கிறது, இங்கே பின்னால் உள்ள இந்த சத்தம் மற்ற ஏதோ ஒன்றை கூறிக் கொண்டு இருக்கிறது. யாரோ ஒருவர் பத்து வார்த்தைகளைக் கூறுகிறார், மற்றவர் வியாக்கியானமாக ஐம்பது வார்த்தைகளை அதற்கு பின்னால் கூறுகிறார். 109. வியாக்கியானம் என்பது “வார்த்தைக்கு வார்த்தை கூறுவதையே” பொருட்படுத்துகிறது. அது தேவனுடைய வார்த்தையாய் இருந்தால் அதற்கு வியாக்கியானம் வார்த்தைக்கு வார்த்தை வர வேண்டும்; வரிக்கு வரி, வரிக்கு வரி. அந்த விதமாகத்தான் வார்த்தை வர வேண்டும். 110 ஆனால் நாம் என்ன பார்த்திருக்கிறோம்-? மிக அதிகமான போலியையே-! அவர்கள் அதைத்தான் செய்தார்கள், ஒழுங்கின்படி வார்த்தையோடு தரித்து இருப்பதற்கு பதிலாக அவர்கள் அதை அங்கே விட்டு விட்டார்கள். ஒரு மனிதன் அதை செய்தவுடனே, அவர்கள் அவனை ஒரு பெந்தேகோஸ்தே என்று அழைத்தனர். மேலும் என்ன சம்பவிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 111. சோதனை வருகிற போது, சோதனை நேரம் வருகிற போது, அப்பொழுதே வித்தானது, அது வித்தாய் இருக்கிறதா, வித்தாய் இல்லையா என்பதைக் காண்பிக்கத் துவங்குகிறது. இப்பொழுது, என்ன நடந்தது என்பதைப் பொருட் படுத்தாமல், ஆபிரகாம் வார்த்தையோடும், வாக்குத்தத்தத்தோடு தரித்திருந்தான். 112. ஆனால் இன்றைய ஸ்தாபனம் அதைச் செய்ய முடியாது. விலையேறப் பெற்ற சகோதரர்களாகி உங்களில் சிலர் அந்த ஸ்தாபனங்களை சேர்ந்து இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு முறை அவர்களோடு உடன்படவில்லை என்றால், நீங்கள் எந்நிலையை அடைவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்-? 113. நான் இப்போது இந்த கட்டிடத்தில் கூறவில்லை, ஆனால் நான் ஆய்ந்து படிக்கும் அறையில் என்னோடு இருந்து வந்துள்ள, என்னோடு இருந்து வந்துள்ள எத்தனை பேர், “சகோ.பிரான்ஹாமே, அது சத்தியம் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் இங்கிருந்து துரத்தப்பட்டால், நாங்கள் என்ன செய்யப் போகிறோம்-?” என்று கேட்டிருக்கிறீர்கள். 114. சகோதரனே, நாம் என்ன செய்யப் போகிறோம்-? எதையும் பொருட் படுத்தாமல் கல்வாரியைப் பற்றிக் கொண்டிருங்கள், வாக்குத்தத்தத்தைப் பற்றிக் கொண்டிருங்கள், சிலுவையைப் பற்றிக் கொண்டிருங்கள். 115. மேலும் அங்கே, அவர்கள் சில சில சிறந்த மனிதர்களைப் பெற்றுள்ளனர். புரிகிறதா-? ஆனால் நான் என்ன கூற முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன் என்றால், அது தோல்வி அடைந்து உள்ளது. அது எப்பொழுதுமே தோல்வி அடைந்து உள்ளது, எப்பொழுதுமே தோல்வியுறும். ஆனால் அது, நீங்கள் தோல்வி உற்றாலும் அல்லது இல்லை என்றாலும், தேவனோடு, தேவனுடைய வார்த்தையையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் முதலில் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதனால் சோதிக்கப்படுவீர்கள். 116. நீங்கள் ஆவணங்களில் கையெழுத்திடுவீர்கள், அதாவது நீங்கள் இதைச் செய்வீர்கள் அல்லது அதைச் செய்வீர்கள். வார்த்தைக்கு விரோதமாக இருந்தாலும் கூட, நீங்கள் இன்னமும் அதற்கும் கையெழுத்திடுவிடுவீர்கள். அது உண்மை. உங்களுடைய இதயத்தில் அது தவறு என்று உங்களுக்குத் தெரியும். அது தான் அந்த அமர்ந்த மெல்லிய சத்தம் பேசுகிற, அந்த வார்த்தையாய் இருக்கிறது. நாம் முன்னேறி செல்ல முடியாததில் வியப்பொன்றுமில்லை, ஏனென்றால் ஏதோக் காரியம் சம்பவித்துள்ளது. நீங்களும் அந்த மெல்லிய சத்தத்திலிருந்து உங்களை வேறு பிரித்துக் கொண்டீர்கள். நீங்கள் மிகத் துரிதமாக ஓடி விட்டீர்கள். தேவன் உங்களை அழைத்துக் கொண்டிருந்தார், ஆனால் நீங்கள் மிகத் துரிதமாக ஓடி விட்டீர்கள், ஏனென்றால் இடிகள் முழங்கின, மின்னல்கள் மின்னியது, மலை அசைந்தது. 117. அது அந்த தீர்க்கதரிசி எலியாவை ஒரு போதும் அசைக்கவில்லை. அவனுக்கு முதலாவது, அந்த சத்தம் தேவைப்பட்டது. அவன், "நான் இங்கேயே படுத்துக் கிடப்பேன்" என்றான். 118. ஆகையால் இன்றைக்கு அநேகர், சுகமளிக்கும் ஆராதனைகளைத் தொடங்கி, மாம்சப் பிரகாரமான ஒப்பீடு செய்தல், எல்லாவிதமான காரியங்களையும், மேலும் தேவனுடைய வார்த்தையில் ஒரு போதும் தோன்றாத உணர்ச்சி வசப்படுதல்களை கொண்டிருந்தனர். அது உண்மை. அது என்னவாயிருக்கிறது-? நாம், "கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள். நான் என்னுடைய பெருமையைத் தாழ்த்தி உமது நாமத்தை கூப்பிடட்டும். கர்த்தாவே, நான் அந்த மெல்லிய அமர்ந்த சத்தத்தைக் கேட்கும் வரை நான் காத்திருப்பேனாக,” என்ற அந்த பாடலைப் பாட வேண்டும். அந்த சத்தம் ஒரு வேதப் பிரகாரமான சத்தமாக இருக்கும். அது சரியாக வார்த்தையோடு பேசும். ஆமென். சரி. 119. ஆபிரகாம் கண்டறியப்பட்டு, அவன் அழைக்கப்பட்ட பிறகு, தன்னுடைய அன்பார்ந்தவர்கள் இடத்திலிருந்து, தன்னுடைய குடும்பத்தார் இடமிருந்து, தன்னுடைய வீட்டார் இடமிருந்து, தன்னுடைய இனத்தாருக்காக, ஒரு அந்நிய தேசத்துக்குச் செல்ல வேறு பிரித்துக் கொண்டான். விசுவாசத்தினாலே அவன் அதைச் செய்தான். அதன் பின்னர், அவன் அதைச் செய்தபடியால், அவன் அவருக்குள் விசுவாசம் கொண்டிருந்தது வாக்குத்தத்தத்தை விசுவாசித்துக் கொண்டு இருந்தபடியால், அவன் தேவனுடைய குமாரனாய் இருந்தான் என்று நிரூபிக்கும்படியாக தேவன் அவனுக்கு விருத்தசேதனத்தை அளித்தார். அதே சமயத்தில், அவன் மாம்சப் பிரகாரமாக காணவில்லை, காணவும் முடியவில்லை, ஆனால் “தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருந்த எதையும் ஒரு பொய்,” என்று அவன் உறுதியாகக் கூறினான். எவ்வளவு அத்தாட்சி வந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது இன்னமும் ஒரு பொய்யாய் இருக்கிறது. 120. நான் இதைக் கூற வெறுக்கிறேன், ஆனால் நான் கூறியாக வேண்டும். பாருங்கள். பரிசுத்த ஆவியை பெற்றிருப்பதாக உரிமை கோரும் ஒரு ஸ்தீரியை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது, காண முடிந்த ஒரு காரியத்தை, காணக் கூடியதை, நான் கூறுவேன், தங்களுடைய தலைமுடியை வளரவிடுவதற்கு போதிய பண்பு இல்லாதிருக்கும் போது எங்கோ ஏதோ காரியம் தவறாக இருக்கிறது. வேதம், "ஒரு புருஷனுடைய உடையை ஒரு ஸ்திரீ தரித்துக் கொள்வது தேவனுக்கு அருவருப்பானது,” என்று கூறியிருக்கும் போது, ஒரு புருஷனுடைய உடையை தரித்துக் கொள்ளும் ஒரு ஸ்திரீ, அதை அணிந்து கொண்டு, அதன் பின்னரும் நீங்கள் பரிசுத்தாவியைப் பெற்றிருப்பதாக உரிமை கோரி, அதைச் செய்வீர்களா-? 121. நான் ஓரிகனில் ஒருநாள் அதன் பேரில் பேசினேன். எனக்கு ஒரு மிகப் பெரிய கடிதத்தை எழுதின ஒரு ஸ்திரி அங்கிருந்தாள். அவள், “சகோதரன் பிரான்ஹாமே, உங்களுக்கு ஒரு அற்புதமான ஊழியம் கிடைத்துள்ளது, ஆனால் நீரோ, நிச்சயமாக அதை பாழாக்கிக் கொண்டிருக்கிறீர்,” என்றாள். அவள், "இப்பொழுது, அதைக் குறித்து என்ன...” என்றாள். மேலும், “நான் எல்லா நேரத்திலும் தளர்த்தியான பணி ஆடையையே அணிகிறேன்” என்றாள். அவள், "வெளியே தோட்டத்துக்கு சென்று ஏதோ ஒன்றை -ஏதோ ஒன்றை தோட்டத்தில் இருந்து, இந்த ஆடையோடு கொண்டு வருவதைக் குறித்து என்ன. முரட்டுத் துணிகளாய், அது வேறென்ன, ஒரு ஆடையாய் இருப்பதைக் காட்டிலும், இந்த விதமான தளர்த்தியான பணி ஆடைகள் மிகவும் மேலானதாக காணப்படுகிறது என்று நீர் கருதவில்லையா-?” என்று கேட்டாள். மேலும், “பாருங்கள், பையன்கள் கால் நடைகளை மேய்க்க மேலே செல்லும் போது நானும் அவர்களோடு மலைக்குச ஏறிச் செல்கிறேன், மற்றும்," என்று கூறி, “நான் கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிக்குள் வருகிறேன்,” என்றும் கூறினாள். "இப்பொழுது இப்படிப்பட்ட ஒரு -ஒரு ஆடையில்லை என்றால், அவைகள் என்னைக் கடித்துவிடும். இந்த தளர்த்தியான பணி ஆடைகளினால் அவைகள் என்னை தொலைப்படுத்துவது இல்லை” என்றாள். 122. அப்பொழுது நான், "பட்டினியால் வாடி மரிக்கும்படியாய் உள்ள ஒரு கோழிக்குஞ்சியின் நிழலிலிருந்து தயாரிக்கப்படும் சாறைப் பார்க்கிலும் இது ஒன்றுமற்றதாய் இருக்கிறது. பரிதாபம்-! அது குறித்த தேவனுடைய வார்த்தை ஒன்றும் இல்லையே. அது உன்னுடைய சொந்த கருத்தாக உள்ளது,” என்றேன். 123. தேவன், "எவருடைய வார்த்தையும் பொய், அவருடையதே உண்மையாய் இருக்கும்” என்றார். என்னுடைய மனைவி ஆடைகளை அணிகிறாள். அவள் தோட்டத்திற்கு செல்கிறாள். அவளுக்கு அதை குறித்து எந்த தொல்லையும் இல்லை. எப்படி இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு அங்குள்ள, கால்நடைகளை மேய்க்கும் ஆண்களின் கூட்டத்துடன், எப்படியும் வேலையில்லை. அவளுக்குச் சொந்தமான சமையலறையில் அவள் இருக்க வேண்டும். அது உண்மை. 124. அவர்கள் ஒரு சாக்குப்போக்கு கண்டறிய முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் ஏதும் இல்லை. தேவனுடைய வார்த்தை தெளிவாய் உள்ளது, தேவனுடைய சித்தத்தின் ஆவியினால் பிறந்துள்ள ஒரு ஸ்திரி, மேலும் தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவி அந்த விதமாக நடந்து கொள்ள அனுமதிக்கமாட்டான். அவர் என்ன கூறினார்-? "அவள் தன்னுடைய முடியை எடுத்து, கத்தரித்துக் கொண்டால், அவளுடைய தலையை கனவீனப்படுத்துகிறாள்.” அவளுடைய கணவனே அவளுடைய தலை. அவள் கனவீனமற்றவளாய் இருக்கிறாள். 125. நான் வாயை மூடிக் கொள்வது நல்லது. சரி. இப்பொழுது, பாருங்கள், பாருங்கள், அது போதுமானது. நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 126. நான் தீய நோக்கத்தினூடாக அதைக் கூறவில்லை. நான் அதை தீய நோக்கத்துடன் கூறினால், அப்போது தேவன் என்னுடைய பாவமுள்ள இருதயத்தின் மீது இரக்கமாயிருப்பாராக; நான் இந்த பீடத்தண்டை இறங்கி வந்து, மனந்திரும்புவேனாக. 127. நண்பர்களே, நான் இதைக் கூறுவதற்கான காரணம், நான் உங்களை நேசிக்கிறேன். மேலும் சத்தியம் எது என்பதையே நான் உங்களுக்கு கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், அது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. நான் அந்த வார்த்தையின் அளவு முறைப்படி, அந்த மெல்லிய சத்தத்திற்கு செவி சாய்க்க வேண்டும். நாம் ஒரு சோதனையின் நேரத்தினூடாக சென்று கொண்டு இருக்கிறோம். அல்லேலுயா-! 128. அந்த சோதனை நேரம் வந்த பிறகு, ஒரு ஸ்தாபன குடும்பத்திற்குள்ளாக அந்த அந்த பயிற்சி போதனையின் குமாரன் பிறந்திருந்தான் என்று நீங்கள் தெளிவாக உணருகின்றீர்களா-? அவன் சோதனையில் நின்று தகப்பனுடைய வாஞ்சையோடு நிலைத்திருந்திருந்தால், அப்பொழுது இந்த பையன் வெளியே அழைத்து செல்லப்பட்டு, அவனுக்கு ஒரு வஸ்திரம் தரிக்கப்பட்டு, அதன் பின்னர் ஒரு விழாவில் பிரகடனப்படுத்தப்படும். அந்த பையன் அவன் பிறந்திருந்த குடும்பத்திற்குள் தற்போது ஒரு ஸ்தானத்தில் வைக்கப்படுகிறான். 129. இன்றைக்கு நம்முடைய பெந்தகோஸ்தேக்களோடுள்ள காரியம் அது தான். அவர்கள் இங்கேயும் அங்கேயும் குதிக்கிறார்கள், நம்முடைய ஸ்தாபனங்கள் அவர்களை இந்த விதமாக, அந்த விதமாக இழுக்கும் அவர்கள், வார்த்தையோடு தரித்து இருக்கிறதில்லை. 130. நீங்கள் வார்த்தையோடு தரித்திருந்தால், அப்பொழுது தேவன், காண்கிறார், “நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால்," அவருடையதில், அவரால் அதை மறுதலிக்க முடியாது. அது அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. அப்பொழுது நேரம் உண்டாகும், எப்போதாவது, நீங்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டு, ஒரு புறமாக வைக்கப்பட்டு, அசலான ஒரு காரியம், அல்லேலூயா, சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை கொடுக்கப்படும். 131. அது, தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக காத்துக் கொண்டிருப்பதாகும், ஆனால் அவர்கள் அந்த சோதனை நேரத்திற்கு வரும் போது, அவர்கள் அந்த வரிசையில் நிற்கமாட்டார்கள். நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா-? “பாருங்கள், சபை என்னை வெளியேத் தள்ளி விடும்." சரி, அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. அப்படியானால், போய் விடுங்கள். அது ஆபிரகாமினுடைய சந்ததி அல்ல. ஆபிரகாமினுடைய சந்ததி அந்தவிதமாக செயல்படுகிறதில்லை. 132. ஆபிரகாமினுடைய சந்ததி-! இப்பொழுது, ஆபிரகாமுக்கு நேர்மாறாக என்ன வருகிறது என்பதைக் குறித்து நான் கவலைப்படுகிறதில்லை, அவன் வாக்குத் தத்தத்தின் வார்த்தையோடு சரியாகத் தரித்திருந்தான், அதனோடு சரியாக தரித்து இருந்தான். சாராள் எப்படி வந்தாலும், மற்றவர்கள் வந்தாலும், வித்தியாசமானவர்கள் வந்தாலும், மற்ற ஒவ்வொரு காரியத்தைக் குறித்தும் கவலைப்படவில்லை, அவன் அதை இல்லாதது போல எண்ணினான். அவன் நோக்கிப் பார்த்தான், அந்த வாக்குத்தத்தத்தை அவனால் காண முடிந்தது என்று அவன் விசுவாசித்தான், ஏனென்றால் அதை அவனுக்கு வாக்களித்தார், மேலும் அதுவே அங்கு அதற்கு எல்லாமுமாய் இருந்தது. அது அவனுக்குள் சரியாக தரித்திருந்த, தேவனுடைய வார்த்தையாக இருந்தது. அதன் பின்னர் அவர், அவனுக்கு அந்த முடிவான சோதனையைக் கொடுத்தார். “நான் அவனுக்கு இரட்டிப்பான பங்கை அளித்து, அவனை சோதிப்பேன்." இப்பொழுது, அவனுக்கு ஏற்கனவே மகன் பிறந்து விட்டான். அவன் அதைப் பெற்றுக் கொண்டதை அவர் காண்கிறார். “ஆனால் இப்பொழுது நான் அவன் இடத்தில், ‘அந்த குமாரனைக் கொண்டு சென்று அவனைக் கொல்,' என்று சொல்லுவேன். மேலும் அந்தக் குமாரனை அவன் காணும் போது... அவன் அந்த குமாரனைக் கொல்லுவானா-? நான் இப்பொழுது அவனை சோதிப்பேன்." 134. ஆபிரகாம், வார்த்தைக்கு உண்மையாய் இருந்தானே-! எப்படி, நீங்கள் வாக்குத் தத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, நீங்கள் எப்படி அந்தக் காரியத்தை நிறுத்தப்போகிறீர்கள்-? எப்படி, நீங்கள் எப்படி நிறுத்தப்போகிறீர்கள்-? 135. "உங்களுக்கு இங்கே இப்பொழுது 115-வயதாக இருக்கும் பொழுது, நீங்கள் எப்படி ஒரு ஜாதிகளுக்கு தகப்பனாக இருக்கப் போவதை எதிர்பார்க்கப் போகிறீர்கள்-? ஆபிரகா-... குட்டி ஈசாக்கு கிட்டத்தட்ட 14, 15 வயதாயிருந்தான். நீங்கள் 115 வயதாக இருக்கும் போது, நீங்கள் எப்படி ஜாதிகளுக்கு தகப்பனாக இருக்கப் போகிறீர்கள்-? இதோ உங்களுடைய ஒரே குழந்தை, மேலும் உங்களுக்கு இருக்கிற உங்களுடைய ஒரே அத்தாட்சியையே நீங்கள் அழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்." ஆமென். 136. “நான் என்னுடைய ஸ்தாபனத்திலிருந்து வெளியேறிவிட்டால் நான் எப்படி அதைச் செய்யப் போகிறேன்-? நான் இதைச் செய்தால், நான் எப்படி அதைச் செய்யப் போகிறேன்-?” ஓ, அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்திற்குச் செவி கொடுத்து, வார்த்தை, வார்த்தைக்கு வாருங்கள். 137. நீங்களோ, “ஒரு சத்தம் எனக்கு இதைக் கூற நான் கேட்டேன்” என்கிறீர்கள். அது வார்த்தைக்கு முரணாக இருக்குமானால், அது தேவனுடைய சத்தம் அல்ல. தேவனுடைய சத்தம் வார்த்தைக்கு வருகிறது. 138. அப்பொழுது, ஆபிரகாம் அங்கே சரியாக அந்த சத்தத்தின்படி, தன்னுடைய சொந்த குமாரனுடைய ஜீவனை எடுக்க வேண்டுமென்ற, அமர்ந்த, மெல்லிய சத்தத்தின்படி, தேவனுடைய வார்த்தையின்படி நடந்தான். 139. அவர், "ஆபிரகாமே, உன்னுடைய கையை நிறுத்து. நீ இப்பொழுது என்னை நேசிக்கிறாய் என்பதை நான் அறிவேன். உனக்கு பிறகு வருகிற யாவரும், அல்லேலூயா, உனக்கு பின் வருகிற யாவரும், மனப்பூர்வமாய் என்னுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கிறவர்கள், அதுவே உன்னுடைய சந்ததியாய் இருக்கும், மேலும் அவன் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்வான்.” 140. ஒரு சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு காரியத்தை உங்களிடம் கூறுவதற்கு எனக்கு நேரம் இருந்தால் நலமாய் இருக்கும், என்ன நடந்தது என்பதைக் குறித்துப் பாருங்கள். ஓ, என்னே-! 141. "உனக்குப் பின்வரும் உன்னுடைய சந்ததி; சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ளும். ஆபிரகாமே, உன்னை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான், உன்னை சபிக்கிறவன் சபிக்கப்படுவான்.” இயேசு, "சபிப்பதை விட உன்னுடைய கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அமிழ்த்துவது நலமாயிருக்கும்” என்றார். 142. இந்த ஸ்தாபனங்கள் அந்த தேவ பக்தியுள்ள மனிதர்களை புறம்பே தள்ளி விடுகின்றன, ஏனென்றால் அவர்கள் சத்தியத்திற்காக, வார்த்தைக்காக, ஆவியானவருக்காக, தேவனுடைய வல்லமைக்காக வார்த்தையோடு தரித்து இருக்கும்படியான, ஒரு பின்னிடா உறுதிநிலையைத் தெரிந்து கொண்டபோது.., தெரிந்து கொண்ட போது, என்ன சம்பவித்தது என்று நீங்கள் பார்த்தீர்களா-? நீங்கள் மறதியின் கடலில் மூழ்கடிக்கப்பட்டீர்கள். 143. "இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறதைப் பார்க்கிலும், உன்னுடைய கழுத்திலேயே ஒரு எந்திரக் கல்லைக் கட்டி சமுத்திரத்தின் ஆழத்திலே அமிழ்த்துவது நலமாயிருக்கும்.” அவர்கள் என்னவாய் இருக்கிறார்கள்-? வாக்குத்தத்த வார்த்தையோடு தரித்திருக்கிற ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கிறார்கள். 144. அவர்கள் மறுக்கிற இடத்திற்கு நம்முடைய சபைகள் சென்று கொண்டு இருக்கின்றன. அவர்கள் தெய்வீக சுகமளித்தலை மறுதலிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சபையில் அதை இனிமேல் விரும்புகிறதில்லை. அது உண்மை. நம்முடைய பெந்தேகோஸ்தே ஸ்தாபனங்களுக்கு இனி மேல் தெய்வீக சுகம் அளித்தல் தேவையில்லை. அது என்ன-? பிசாசு எப்படி கிரியை செய்து இருக்கிறான் என்பதை நீங்கள் காணவில்லையா-? அவன் அங்கே சுற்றித்திரிந்து, அந்த விதமான போலியான காரியங்களைக் கூறி இருக்கிறான். அறிவார்ந்த மனிதர்கள் அவைகள் ஆவிக்குரியவைகள் என்று எண்ணிக்கொண்டு, அதைப் பார்த்து, "அந்த ஒன்றை நோக்கிப் பாருங்கள். அந்த ஒன்றை நோக்கிப் பாருங்கள்” என்று கூறுகிறார்கள். நான் அதை நோக்கிப் பார்க்கமாட்டேன். 145. நீங்கள் ஆபிரகாமினுடைய சந்ததியாய் இருந்தால், நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தையும், தேவன் செய்யும்படி அதைக்குறித்து என்ன கூறினார் என்பதையுமே நோக்கிப் பார்ப்பீர்கள். அவ்வளவுதான். ஆபிரகாமினுடைய சந்ததி, நாம் ஒரு வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்க்கிறோம். எத்தனை பேர் இந்த வழியில் விழுந்தாலும் மற்றும் எத்தனை பேர் அந்த வழியில் விழுந்தாலும் எனக்குக் கவலை இல்லை. வாக்குத்தத்தம் உண்மையாகவே நிலைத்திருக்கிறது. 146. நீங்கள் அந்த சோதனைகளினூடாக வரவேண்டும். புரிகிறதா-? ஆம். ஆபிரகாம், முதலில் சோதிக்கப்பட்டு, அதன் பின்னர் முத்திரையிடப்பட்டு, அதன் பின்னர் "அவனுடைய சந்ததி சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்” என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. எனக்கு அது பிடிக்கும். அதன் பின்னர், அவர்கள் சோதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தங்களுடைய சத்துருவின் வாசல்களை சுதந்தரித்துக் கொண்டனர். 147. அதைக் குறித்த காரியம் என்னவென்றால், நம்மால் சோதனையில் நிற்க முடியவில்லை. அந்தக் காரணத்தினால் தான் நம்முடைய ஸ்தாபனங்கள் சோதனையில் நிற்க முடியவில்லை. அது தேவனுடைய சித்தமாக இருக்கவில்லை. அது, தேவன் அதை ஆசீர்வதித்திருக்கிறார், ஆனால் அது தேவனுடைய சித்தமாக இருக்கவில்லை. ஏனென்றால், பாருங்கள், நீங்கள் பல கருத்துக்களைக் கொண்ட ஒரு கூட்ட மனிதரைப் பெற்றுள்ளீர்கள், அவர்கள் அவைகளை ஒன்றாகத் திரட்டி, தங்களால் முடிந்த மிகச் சிறந்ததை வெளியே கொண்டு வருகிறார்கள். அவர்களில் சிலர், "இவர் ஒரு பெரிய மனிதன். உங்களால் அவருடைய வார்த்தையை மறுக்க முடியாது,” என்கின்றனர். பாருங்கள், ஒரு கூட்ட அறிவாற்றல் கொண்ட விசுவாசிகளின் பேரில், அந்த விதமாகவே கத்தோலிக்க சபையானது ஸ்தாபிக்கப்பட்டது, அதே காரியம். அறிவாளிகள், அவர்கள் அதை நோக்கிப் பார்த்து, அந்த காலங்களில் அதனோடு சமாளிக்கிறார்கள். உங்களால் அதைச் செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தையை தவிர மற்ற ஒவ்வொரு காரியமும் ஒரு பொய்யாய் இருக்கிறது. 148. ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தைத் தவிர எந்த ஒரு காரியத்தையும் நோக்கிப் பார்க்கவே இல்லை. எதுவாய் இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தோடு தரித்திருந்தான். 149. அப்படியானால் நாம் அதிகம் கண்டறியாததற்கு இதுவே காரணமாக இருக்கிறது. ஒரு ஸ்தாபனத்தால் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ள முடியாது. அங்கு மிக அதிகமான வளைந்து கொடுக்கும் மனங்கள் உள்ளன. 150. அந்த சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ள, தனிப்பட்ட நபரை அழைத்துச் செல்ல வேண்டும். நீங்கள் விரும்பினால் உங்களால் அதைச் செய்ய முடியும். ஆம், ஐயா. 151. அவர்கள் வேதத்தில் நிலைத்திருக்கிறார்களா என்று பார்க்க, ஒரு சில நிமிடங்களில், நாம் ஒரு சிலவற்றை முயற்சித்துப் பார்ப்போமாக. 152. இப்பொழுது, பாபிலோனில் ஒரு காலத்தில் அங்கே ஒரு... ஒரு சொரூபம் அமைக்கப்பட்டது, கத்தோலிக்க-சபையின் அழகான மாதிரி, அந்த சொரூபத்தி ற்கு தலை வணங்காத யாவரும் அக்னிச்சூளையில் எரிக்கப்படுவார்கள். இப்பொழுது, தேவன், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாகி இருக்க வேண்டாம், அல்லது வேறெந்த சொரூபத்தையும் உண்டாக்க வேண்டாம்” என்று கூறியிருக்கும் போது, அவர்கள் தரித்திருக்கப் போகின்றார்களா என்ற, ஒரு பலப்பரீட்சையாய் அது இருந்தது. அதைத் தான் தேவன் கூறினார். பலப்பரீட்சை உண்டானது. 153. மற்ற எல்லா இஸ்ரவேலரும் விழுந்து வணங்கினர். எக்காளம் தொனித்த போது, சுரமண்டலம் தொனித்தபோது, நாகசுரம் தொனித்தபோது, ஏன், அவர்கள் எல்லோரும் இந்த சொரூபத்திற்கு முன்பாக விழுந்து பணிந்தனர். 154. ஆனால் அவர்களில் மூன்று பேர், “எதுவும் செய்வதில்லை” என்று கூறி இருந்தனர். அவர்கள் அந்த மெல்லிய அமர்ந்த சத்தத்தைக் கேட்டு, அவர்கள் வார்த்தைக்கு ஏற்ப தரித்திருந்தனர். அவர்கள் என்ன செய்தனர்-? அவர்கள் வார்த்தையோடு தரித்திருந்தனர். 155. மேலும் அதன் பிறகு, அவர்கள் அவர்கள், “நீங்கள் அதை செய்யவில்லை என்றால்.. .நாங்கள் உங்களுக்கு மற்றொரு வாய்ப்பினை அளிப்போம், இல்லை என்றால் நாங்கள் உங்களை அக்கினிச் சூளையிலே தூக்கி எறிவோம்” என்றனர். 156. அவர்களோ, "அந்த அக்கினிச் சூளையிலிருந்து எங்களை விடுவிக்க எங்களுடைய தேவன் வல்லவராயிருக்கிறார்” என்றனர். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.) "ஆனால் நாங்கள் வார்த்தையோடு விடுவிக்காமற்போனாலும், தரித்திருப்போம்” என்றனர். 157. இப்பொழுது, சகோதரனே, உங்களைக் குறித்து என்ன-? "சகோ.பிரான்ஹாம், நான் என்ன செய்யவேண்டும்-?” வார்த்தையோடு தரித்திரு. வாக்குத்தத்தத்தோடு தரித்திரு. “என்னுடைய சபையோர் எல்லோரும் என்னை விட்டு சென்று விடுவார்கள்.” வாக்குத்தத்தத்தோடு தரித்திரு. அவர்கள் மங்கி, எப்படியும், என்றோ ஒரு நாள் போகத் தான் வேண்டும். ஆனால், தேவன் அவ்வாறாக மாட்டார். வாக்குத்தத்தத்தோடு தரித்திரு. "பாருங்கள், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் என்னை வெளியே உதைத்துத் தள்ளுவார்கள்.” அப்படி இருந்தாலும், வாக்குத்தத்தத்தோடு தரித்திருங்கள். நீங்கள் சரியாக வாக்குத் தத்தத்தோடு தரித்திருங்கள். இப்பொழுது, உங்களால் அந்த வாக்குத்தத்தத்தோடு தரித்திருக்க முடிந்தால் அங்கேயே தரித்திருங்கள், அப்படி ஆனால் அவைகளோடு சரியாக தரித்திருங்கள். 158. எல்லோரோடும் ஐக்கியமாய் இருங்கள். ஆனால் இப்பொழுது இங்கே, இப்பொழுது, எல்லோரோடும் ஐக்கியங்கொள்வதைத் தவிர, வேறு எந்த வழியிலும் நீங்கள் ஒரு போதும் ஆதாயம் செய்ய முடியாது. நீங்கள் அப்படித் தான் செய்ய வேண்டும். இப்பொழுது, அவர்கள் மிகவும் மோசமடைந்து, அவர்கள் ஒழுக்கக்கேடாய் இருக்கும் பொழுது, அப்பொழுது அதிலிருந்து விலகி இருங்கள். அது சரி. சத்துருவினுடைய எல்லையில் நுழையாதீர்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய சகோதரனை ஆதாயப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கும் வரை அது வித்தியாசமாக இருக்கும். புரிகிறதா-? 159. இப்பொழுது கவனியுங்கள். ஆனால் நீங்கள் ஒரு போதும் ஸ்தாபன கருத்துடைய, ஒரு நபரை ஆதாயப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள். இல்லை, ஐயா. அவர்கள் தங்களுக்கு சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டபோது, "நாங்கள் இதை மாத்திரமே விசுவாசிப்போம், அவ்வளவு தான்-!” என்பார்கள். நீங்கள் உங்களுடைய கோட்பாட்டை எழுதினால், "நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்,” என்று நிறுத்தற்குறியிட்டு, அது வித்தியாசமாக இருக்கும் என்பார்கள். ஒரு முற்றுப் புள்ளி என்பது, "நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், நீங்கள் இதற்கு வந்து, இந்த காகிதத்தில், அல்லது அதைக் குறித்த எல்லாவற்றுக்கும் கையெழுத்திட வேண்டும்,” என்றே பொருள்படுகிறது. 160. ஆனால் நீங்களோ, "நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்,” என்று நிறுத்தற் குறியிட்டு, "நாங்கள் முடிந்த அளவு கூடுதலாக தேவனிடத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியும். நாங்கள் பரிசுத்த ஆவிக்குத் திறந்திருக்கிறோம்,” என்று கூறினால், அப்படியானால் சகோதரனே, நீ நன்றாக போய்க் கொண்டே இருக்கிறாய். ஆம். அது இப்போது வித்தியாசமாக இருக்கப் போகிறது. 161. ஆனால், நீங்கள் பாருங்கள், நீங்கள் அதை ஒரு முற்றுப் புள்ளியிட்டு எழுதி இருந்தால், தேவன் ஏதோ ஒன்றைக் கொடுத்து வெளிப்படுத்தும்போது, அது அவருடைய வார்த்தையை, சத்தியம் என்று நிரூபிக்கிறது, அப்பொழுது உங்களால் அசையவே முடியாது, ஏனென்றால் அது "முற்றுப் புள்ளியாய் உள்ளது” அதுவே அதற்கு முடிவாகிறது. அங்கே தான் லூத்தரன்கள் மரித்தனர். அங்கே தான் மெத்தடிஸ்ட்டுகள் மரித்தனர். அங்கே தான் பாப்டிஸ்டுகள் மரித்தனர். அங்கே தான் பிரஸ்பிடெரியன்கள் மரித்தனர். மேலும் அங்கே தான் பெந்தேகோஸ்தேக்கள் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை. அது உண்மை. அவர்கள் அங்கேயே மரிக்கிறார்கள், பாருங்கள், ஏனென்றால் அது—அது ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது. உங்களால்— உங்களால் அதனோடு எதையும் கூட்டவோ அல்லது அதிலிருந்து எதையும் எடுக்கவோ முடியாது. அது— அது அங்கே உள்ளது. அதுவே உங்களுடைய உபதேசமாக உள்ளது. 162. லூத்தரன்கள் பரிசுத்தமாகுதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இல்லை, ஐயா. அவர், "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்று கூறிவிட்டார். மார்டின்-லூத்தர் அல்ல; ஆனால் அவரைப் பின்பற்றின அந்த குழு. அது உண்மை. 163. ஜான் வெஸ்லி அல்ல; ஆனால் அவரைப் பின்பற்றின அந்தக் குழு. அது உண்மை. கால்வின் அல்ல; ஆனால் அவரைப் பின்பற்றின குழு. 164. தன்னுடைய கண்கள் வீங்கி மூடிக் கொள்ளுமளவிற்கு, தன்னுடைய சபைக்காக, இரவு நேரத்தில், மிக கடினமாக ஜெபித்த, பாப்டிஸ்டு சபையின் ஜான்-ஸ்மித் அல்ல; மேலும் அவருடைய மனைவி அவரை வெளியே அழைத்துச்சென்று அவருக்கு மேஜையண்டையிலே அங்கே ஒரு கரண்டியால் உணவளிக்க வேண்டியதாயிருந்தது. அவரல்ல; ஆனால் அவரை பின்பற்றுகிற இந்த பாப்டிஸ்ட் கூட்டத்தினர், அவருக்கு பின்னே வந்த ஸ்தாபனம். அலெக்சாண்டர் கேம்பெல் அல்ல; ஆனால் அவரைப் பின் பற்றியவர்கள். 165. எல்லா காரியங்களையும் பொதுவாக உடையவர்களாயிருந்து, எல்லோரோடும் ஐக்கியங் கொண்டிருந்த, ஆரம்ப பெந்தேகோஸ்தே அசைவில் இருந்தவர்கள் அல்ல; ஆனால் குழுக்களாக வந்து, “இல்லை. நாங்கள் இது, மற்றும் நாங்கள் இது, மேலும் இவைகள் பிரச்சனைகள், அது தான் அது-!” என்று கூறினவர்களே. ("தங்களை வேறு பிரித்துக்கொண்டு, வெளித் தோற்றத்திலும் விசுவாசம் இல்லாதிருப்பவர்கள்.") சரி. அதை செய்தது அது தான். பொல்லாத காரியமாய் உள்ளது. ஆமென். நான் இந்த காலையில் பக்தி பரவசமடைகிறேன். 166. எபிரெயப் பிள்ளைகள், அவர்கள் சோதனைக்கு நின்ற பிறகு, அவர்கள் வாக்குத்தத்தத்தின் வார்த்தைக்காக தரித்திருப்பார்களா, அல்லது இல்லையா, என்ற ஒரு சோதனைக்குள்ளாக அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்கள் என்ன செய்தனர்-? அவர்கள் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொண்டனர். ஆமென். ஏன்-? அவர்கள் வார்த்தையில் தரித்திருந்தனர். உங்களிடம் பேசுகிற அந்த தேவனுடைய சத்தத்தின், வார்த்தையோடு தரித்து இருங்கள். 167. இப்பொழுது, எல்லாக் காரணங்களாலுமே, "இப்பொழுது, பாருங்கள். பாபிலோன், அது வேறுபட்டதாயிருக்காது. ஏனென்றால், நாங்கள், நாங்கள் இந்த சொரூபத்திற்கு முன்பாக வணங்கும்போது, நாங்கள் எப்படியும், தேவனையே ஆராதித்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள், நாங்கள் அதை இந்த விதவிதமாக செய்தால், நாங்கள் அதை இந்த விதமாக பொருட்படுத்துகிறோம்” என்றனர். தேவன் கூறினவிதமாக அதைச் செய்யுங்கள். 168. தேவன், “மோசே, உன்னுடைய பாதரட்சைகளைக் கழற்றிப் போடு, மோசே. நீ பரிசுத்த பூமியில் இருக்கிறாய்." 169. அதற்கு அவன், “கர்த்தாவே, உமக்கு நன்றி. நான் நிச்சயமாக உம்மிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறேன். ஆனால் அதற்குப் பதிலாக நான் என் தொப்பியைக் கழற்றுவேன். என்னுடைய பாதரட்சையை அவிழுப்பது மிகுந்த சிரமமாக இருக்கிறது” என்று கூறியிருந்தால் என்னவாயிருக்கும். ஹு-ஹூ-! அது ஒருபோதும் கிரியை செய்திருக்காது. அவர், "பாதரட்சை” என்றார். அவர், “தொப்பி” என்று கூறவில்லை. சரி. 170. நீங்கள் வரிக்கு வரி, தேவன் என்ன கூறுகிறார் என்பதற்கும், அவருடைய வார்த்தையோடு வரிசைப்படுத்திக்கொள்ள வர வேண்டும். 171. இப்பொழுது, அவர்களுக்கு சோதனை உண்டாயிருந்த பிறகு, அவர்கள் சத்துருவின் அக்கினியின் வாசலை சுந்தரித்துக் கொண்டனர். அவர்கள் முடிவு வரை சென்று, தேவனுடைய வார்த்தையின் பேரில் தரித்திருந்து, அவர்கள் வாசலை சுதந்தரித்துக் கொண்டதை, அவர்கள் கண்டறிந்தனர். அது உண்மை. பிறகு... 172. தானியேல். மேதியர், பெர்சியரால் கையொப்பமிடப்பட்ட ஒரு அறிவிப்பு புறப்பட்டுச் சென்றது, அதை மாற்ற முடியாததாயிருந்தது, அது, “எவரேனும் வேறெந்த தேவனிடத்திலாவது விண்ணப்பம் பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே வீசியெறியப்படுவான்” என்பதாகும். மேலும் தேவனுடைய வார்த்தையின்படி அவரிடத்தில் மாத்திரமே ஜெபிக்க வேண்டும் என்பதை தானியேல் அறிந்திருந்தான், எனவே அவன் ஜன்னல்களைத் திறந்து எப்படியும் ஜெபித்தான். இப்பொழுது, அவன் ஒரு போதும் ஒரு மூலைக்குத் திரும்பிச் சென்று விடவில்லை. அவன் தேவாலயத்தை நோக்கியவாறு ஜன்னல்களைத் திறந்தான். அவன் அதைக் குறித்து வெட்கமடையவில்லை. 173. ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமையில் நாங்கள் எங்களுடைய மதத்தை பின்பற்றி ஏதோ ஒரு காரியத்தை செய்ய நாங்கள் விரும்புகிறது இல்லை. இல்லையென்றால் எங்களுடைய இருதயத்தில் ஒரு காரியத்தை விசுவாசிக்கிறோம், யாராவது ஒருவருக்கு முன்பாக வந்து, "பாருங்கள், எனக்கு தெரியாது. ஆம், நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன்” என்று கூறுவார்கள். நீங்கள் இருக்கிறவாறே இருங்கள். நீங்கள் சரியாக இல்லை என்றால், பிரசங்க பீடத்திலிருந்து வெளியேறுங்கள், சபையில் இருந்து வெளியேறுங்கள். அதுசரி. காரணம், நீங்கள் இருவருக்கும் கடன்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதிலே தரித்திருங்கள். நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்களா அதையே கூறுங்கள், அப்பொழுது உங்களை ஆதரிக்க எதுவும் வேண்டியதில்லை. நீங்கள் சரியாக எது உண்மையோ அதில் நின்று கொண்டிருக்கிறீர்கள். எல்லோருக்குமே உங்களுடைய சுபாவங்கள் தெரியும். மனிதர், எந்த மனிதனும் உங்களைப் பாராட்டுவான். 174. எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டிய அளவிற்கு அவ்வளவு அசிங்கமாக ஒரு ஸ்திரீ இருக்கலாம். அவள் பெரிய உருவமாக, பருமனாக, சிறிய உருவமாக, எலும்பாக, கருப்புத் தலையுடன், பழுப்பு நிற கண்களுடன், நீல நிற கண்களுடன், சாம்பல் நிற கண்களுடன் இருக்கலாம்; ஒரு பக்கமாக ஒன்றும், மற்றொன்று மற்றொரு பக்கமாக இருப்பது ஆகும். ஆனால் அந்த ஸ்திரீ, பெண்மணி சுத்தமாக இருந்தால், தேசத்தில் தன்னுடைய தொப்பியைக் கழற்றி அவர்களுக்கு மரியாதை செலுத்தாத ஒரு மனிதனும் இருக்க மாட்டான், அவன் தனக்குள் சிறிது ஆண்மைத் தன்மையையாவது கொண்டு இருப்பான். சரி. ஏன் என்றால், அவள் என்னவாக இருக்கிறாள் என்பதை அவள் உருவாக்குகிறாள், மேலும் மனிதர் அதைப் பாராட்டுகிறார்கள். 175. எனவே அப்படிப்பட்டவராயிருக்கிற ஒரு மனிதனை, அல்லது கிறிஸ்தவ மார்க்கத்தை உறுதியாகக் கூறுகிற மனிதரைத் தேவன் பாராட்டுவார். தேவனுடைய வார்த்தையினால், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட, ஒரு கிறிஸ்தவனாய் இருப்போமாக, இல்லையென்றால் அதைக் குறித்து மறந்து விடுவோமாக. சரி. காரணம், மற்றபடி நீங்கள் மாய்மாலம் பண்ணி, மேலும் ஒரு வித்தியாசமான ஜீவியம் ஜீவிக்கிறீர்கள். நீங்கள் இங்கே நடனங்களுக்கு ஓடுவதையும், புகைப் பிடிப்பதையும், அது போன்ற காரியங்களைச் செய்து, ஒரு கிறிஸ்தவராயிருப்பதாக உரிமை கோருவதையும் ஜனங்கள் காண்கிறார்கள், அப்படியானால், பாருங்கள், நீங்கள் மற்றொரு வழியில் ஒரு இடறலை உண்டு பண்ணுகிறீர்கள். 176. சில நேரங்களில், ஸ்திரீகளாகிய நீங்கள், எப்படி அவர்கள் தங்களுடைய தலை முடியை வெட்டிக் கொண்டு, ஆடை அணிந்து மற்றும் இந்த சிறு பண்டைய ஆடைகளை அணிந்து நடிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள், சருமத்தோடு ஒட்டிக் காணப்படுகின்ற அல்லது அது போன்ற ஏதோ ஒன்றை அணிந்து, அங்கே வெளியே வீதிக்குப் போய், சுற்றித் திரிந்து, கிட்டத்தட்ட அந்த அளவு உயரமுள்ள ஒரு குதிங்கால் காலணிகளை அணிந்து வீதியில் ஒய்யாரமாய் நடக்கின்றனர். அது பெந்தேகோஸ்தேவா-? அதன் பின்னர் மற்ற சபைகளோ, “அவர்கள் பெற்றிராத ஏதோ ஒரு காரியத்தை இவர்கள் பெற்று இருப்பதாக உரிமை கோருகிறார்கள்” என்று கூறுகிறார்கள். 177. நீங்கள் பரிசுத்தாவியினால் முத்திரையிடப்பட்டு அடையாளமிடப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய கணவனாயில்லாத, யாரோ ஒரு மனிதனுடைய கரங்களை நீங்கள் கட்டித் தழுவ, நீங்கள் இன்றிரவு ஒரு நடன அரங்கத்தில் இல்லை; அடுத்த இரவு திரும்பவும் சபைக்கு வந்து, எல்லா இடங்களிலும் நடனம் ஆடுகிறீர்கள். அது பெந்தேகோஸ்தே அல்ல. அது மாய்மாலம். அது அசுத்தம். 178. நான் உங்களிடத்தில் மட்டும் அதை அதிகமாக கூறிக் கொண்டு இருக்கவில்லை. ஆனால், உலகம் முழுவதும் செல்வதற்காக இங்கே ஒலி நாடாக்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பதை, நீங்கள் தெளிவாக உணருகிறீர்கள், எனவே நான் அதை முழு உலகத்திற்கும் பிரசங்கிப்பது போல பிரசங்கிக்கிறேன். தேவன், “ஏதாவது கூறு,” என்று கூறுவதை நான் உணரும் போது, நான் அதை கூறுகிறேன், ஏன் என்றால் அது எங்கே போய்க் கொண்டு இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதைக் குறித்து பொறுப்பேற்றுக் கொள்வது அவருடையதாகும். வார்த்தையோடு தரித்திருங்கள். அது உண்மை. சரி. 179. இல்லை, தானியேல் ஸ்தாபனத்தை விட்டு தூக்கி எறியப்பட்டாலும் அல்லது இல்லை என்றாலும், அவர்களுடைய பிரகடனத்திற்கு தலை வணங்கி இருக்க மாட்டான். அவன் ஜன்னலண்டைத் தரித்திருந்து, தேவனுடைய வார்த்தையோடு தரித்திருந்தான். அவன் அதைக் குறித்து வெட்கப்படவில்லை. 180. என்ன சம்பவித்தது-? அவர்கள் அவனை ஒரு சிங்கக் கெபியில் தூக்கி எறிந்தனர், ஆனால் அவன் சிங்க கெபியின் வாசல்களை சுதந்தரித்துக் கொண்டான். ஏன்-? மகிமை-! தேவன் அவனிடத்தில் கூறியிருந்தபடியால்.. ."உன்னுடைய சந்ததி சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ளும்.” எப்போதுமே சத்துரு என்னவாய் இருந்தாலும், நீங்கள் வாசலை சுதந்தரித்துக் கொண்டீர்கள். ஓ, எத்தனை முறை நம்மால் முடிந்தது...-? 181. தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றி, எகிப்துக்குச் சென்ற மோசேயை நோக்கிப் பாருங்கள், ஒவ்வொரு காரியமும் முரணாயிருந்ததைப் போன்று காணப்பட்டது. அவன் தன்னோடு சில போலியாக பாவனை செய்பவர்களையும் உடையவனாய் இருந்தான். அவன் தான் அனுப்பப்பட்டிருந்தான் என்பதை காண்பிக்கும்படி, இரண்டு அடையாளங்களோடு புறப்பட்டு சென்றான். கோலைப் போட்டு ஒரு சர்பமாக்குதல், அது போன்றது. 182. இங்கே அந்த போலியாக பாவனை செய்பவர்களும் தொடர்ந்து வந்து, தங்களுடையதையும் கீழேயெறிந்துக் காண்பித்தனர். அவனால் என்ன செய்ய முடிந்தது-? ஒன்றுமில்லை. அவர்கள் அதைச் செய்யப்போகிறார்கள் என்று தேவன் அவனிடத்தில் ஒரு போதும் கூறவில்லை. அவர் மோசேயை சோதிக்க விரும்பினார். அவரே, யந்நேயும் யம்பிரேயும் தங்களுடைய சர்ப்பங்களை, இல்லை தங்களுடைய கோல்களை கீழேயெறிய அனுமதித்தவராயிருந்தார். 183. ஆகையால் மோசே அங்கே கடமையின் பாதையில் நின்றான். தன்னுடைய கோலை கீழேயெறிந்தான். அது ஒரு சர்ப்பமாக மாறிற்று. அப்பொழுது அவன், “பார்வோனே, அதைப் பார். அதைத்தான் என்னுடைய கர்த்தர் உனக்கு முன்பாக வந்து, செய்யும்படி என்னிடம் கூறினார்” என்றான். 184. பார்வோனோ, "யந்நேயும், யம்பிரேயும், இங்கே வாருங்கள்,” என்றான். அவர்கள் தங்களுடைய கோல்களை கீழேப் போட்டனர். அவைகளும் சர்ப்பங்களாக மாறின, மோசே செய்தது என்னவாயிருந்து. 185. அவனுடைய முகம் சிவந்ததா-? இல்லை, ஐயா. அவன் இன்னமும் தன்னை அனுப்பின தேவனை விசுவாசித்தான். அவன் அந்த வாக்குத்தத்தத்தோடு தரித்து இருந்தான். மேலும் என்ன சம்பவித்தது-? 186. அப்பொழுது தான் உங்களுடைய சில கலந்தாலோசனைக் கூட்டங்களுக்கு முன்பாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய முகம் சற்று, சிவப்பாக மாறலாம். வார்த்தையோடு தரித்திருங்கள். 187. என்ன சம்பவித்தது-? திடீரென்று, இந்த மோசேயின் பெரிய நாகம் சுற்றி வந்து அவைகளை விழங்கிவிட்டது. தேவன் ரூபகாரப்படுத்தினார். அவனுடைய சோதனைக்கு பிறகு, அவன், "இந்த அடையாளத்தின் மூலம், அந்த புத்திரர் புறப்பட்டுச் செல்ல நீர் அனுமதிக்க வேண்டும் என்று, நான் விரும்புகிறேன்,” என்றான். “நீர் அவர்களுக்கு சொந்தமான, அவர்களுடைய வீட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவன் இதைக் கூறும்படிக்கு இங்கே இறங்கி வந்து, அவர்களை விடுவிக்கும்படி இங்கே என்னை அனுப்பினார். அவர்கள் திரும்பிப் போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” அவன் அதை அங்கே வீசியெறிந்தான். 188. ஓ, சோதனை உண்டானது. மோசே, நீ என்ன செய்யப்போகிறாய், திரும்பி நடந்து போய், "பாருங்கள், நான் தவறாக இருந்திருக்கலாம்,” என்று கூறப் போகிறாயா-? இல்லை, ஐயா. மோசே, “தேவன் இதைக் கட்டளையிட்டாரே,” என்று அங்கேயே நின்றான். மகிமை-! 189. தேவன் எந்தக் காரியத்தையாவது கூறினால், அதனோடு தரித்திருங்கள். என்ன சம்பவித்தாலும் கவலைப்படாமல், அதனோடு தரித்திருங்கள். அவர்கள் உங்களை வெளியேத் தள்ளி, “நாங்கள் ஒத்துழைக்கமாட்டோம், இதை செய்ய மாட்டோம்” என்று கூறினாலும், அதனோடு தரித்திருங்கள். 190. மோசே அதனோடு தரித்திருந்தான். என்ன சம்பவித்தது-? அவன் தன்னுடைய சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொண்டான். அல்லேலுயா. பிசாசு, “நான் உங்களுக்கு முன்பாக சவக் கடலை வைப்பேன்,” என்றான், ஆனால் அது திறக்கப்பட்டது. அவர்களால் அதற்கு மேல் அவர்களை எகிப்தில் பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லை. அவன் சந்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொண்டான். ஏன்-? ஏனென்றால் தேவன் அவனுக்கு கொடுத்து இருந்த கட்டளையோடு அவன் தரித்து இருந்தான். அவன் தேவனுடைய கட்டளைகளோடு, தேவனுடைய வார்த்தையோடு தரித்திருந்து, அவன் சத்துருவின் வாசல்களை சுதந்தரித்துக் கொண்டான். 191. யோசுவா, அவன் ஒரு சோதனையினூடாக சென்றிருந்த பிறகு. அநேகமாக, அவன் அங்கே இருந்து இருக்கலாம், மேலும் அவனும் காலேபும், வேவுக்காரர் களோடு, யோர்தானை நீந்திக் கடந்து இருக்கலாம். அவன் யோர்தானிலிருந்து திரும்பி வந்த போது, அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்குச் சென்றனர். மேலும் அவர்கள் எல்லோரும், ஓ, நாம் துவங்கினால், அது நம்முடைய ஸ்தாபனங் களை சுக்கு நூறாக உடைத்துவிடும். நம்மால் உள்ளே செல்ல முடியாது,” என்றனர். 192. அந்த ஆவி மரிக்கிறதில்லை. “ஓ, நாம் அதைப் பெற்றுக் கொள்ள முடியாது. நாம் அதை நம்முடைய ஜனங்களுக்குப் போதித்தால், நாம் என்ன செய்வோம்-? நாம் கிட்டத்தட்ட சபையிலிருந்து பாதி உதவிக்காரர்களை வெளியே கொண்டு சென்று விடுவோம். அவர்கள் இரண்டு, மூன்று முறை விவாகம் செய்து கொண்டனர். நாம் என்ன செய்வோம்-? நாம், ஏன், நம்முடைய ஸ்திரீகளை நீண்ட தலைமுடியை வைத்திருக்க வேண்டும் என்று நாம் அவர்களிடத்தில் கூறினால், அவர்கள் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா-? அவர்கள் சபையை விட்டு சென்று விடுவார்கள். நாம் என்ன செய்வோம்-? ஏன், நாம் பண்டைய மாதிரியை உடையவர்களாகக் கருதப்படுவோம்." இயேசு வானவரும் கூட, பண்டைய மாதிரியாயிருந்தார். “நம்மால் அதைச் செய்ய முடியாது. நாம் அதைச் செய்ய முடியாது. அது நமக்கு அதிகமானதாக இருக்கிறது.” 193. எல்லைக்கோடு விசுவாசி என்னத்தைப் பெற்றுக் கொள்கிறான் என்று உங்களுக்குத் தெரியும். எபிரெயர், 6-ம் அதிகாரம், அதை விளக்குகிறது. "அவன் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், மறுதலித்துப் போனவனை, அவனை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்." அவன் எல்லைக் கோட்டுக்கு வந்து, அதற்கு மேல் செல்ல மறுத்து விட்டான், அதுதான் இது, முழுமையாக விசுவாசிக்க மறுத்து விட்டான். 194. காரணம் காலேப் என்ன செய்தான்-? யோசுவா என்ன செய்தான்-? அவன், “நாம் அதைக் கண்டிப்பாக சுதந்தரித்துக் கொள்ள முடியும்” என்றான். ஏன்-? அவர்கள் தேவன் வாக்களித்திருந்ததோடு தரித்திருந்தனர். 195. ஏன், அவர்கள் கூறினர், அவர்களில் மற்றவர், "பாருங்கள், அவர்கள் இராட்சதராய் இருக்கிறார்கள். அவர்கள் முழுவதும் மதிற்சுவற்றைக் கட்டி உள்ளனர். அவர்கள் இந்தவழியில் இருக்கிறார்கள். ஏன், நாம் எந்த வகையிலும், அவர்களைத் தொட முடியாது," என்றனர். 196. யோசுவா, "நாம் அதைக் கண்டிப்பாக கைப்பற்ற முடியும். ஜனங்களே நீங்கள் அமைதியாய் இருங்கள்-! வாயை மூடுங்கள்-! அமருங்கள்-!" என்றான். ஆமென். 197. நானும் உங்களுக்குச் சொல்கிறேன், அது தேவனுடைய வார்த்தையின் மீது வரும் பொழுதே, விசுவாசம் ஒரு மகத்தான பெரிய காரியத்தில் இருக்கிறது. அதனால் அவன் பயப்படுகிறதில்லை. விசுவாசம் மார்பில் முடிகளையும், பெரிய சதைகளையும் கொண்டு உள்ளது. அது, "வாயை மூடு-!” என்று கூறுகிறது. தேவன் பேசுகிற போது, ஒவ்வொரு காரியமும் மூலைக்குச் சென்று விடுகின்றன, அது உண்மை. “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்து இருந்தால், நீங்கள் விரும்புவதை கூறுங்கள்.” அங்கு தான் காரியமே உள்ளது. ஓ, எனக்கு அது பிடிக்கும்-! ஹும்-! பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவர்; யேகோவாவிலுள்ள விசுவாசம் எதையும் அசைக்கும்.... 198 நீங்கள் அவருடைய வார்த்தையில் நடவாதபடியினால், உங்களிடத்தில் கிரியையில்லை என்பதை அறியும்போது, நீங்கள் கூற வேண்டிய காரியங்களை நீங்கள் அறிந்திருந்தும், அதைக் கூறவில்லை என்று நீங்கள் அறியும் போது உங்களால் எப்படி விசுவாசத்தை உடையவர்களாக இருக்க முடியும்-? நீங்கள் போதிக்க வேண்டிய காரியங்கள் இருந்தும், நீங்கள் அதைப் போதிக்கிறதில்லை. நீங்கள் கூற முடியாத காரியங்கள் உள்ளன, மேலும் நீங்கள் தவறாக இருக்கின்றீர்கள் என்று அறிந்திருக்கும் பொழுது நீங்கள் எப்படி விசுவாசத்தை உடையவர்களாக இருக்க முடியும்-? 199. "நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளாக தீர்க்காதிருந்தால்." அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. ஆனால் வார்த்தையோடு தரித்திருங்கள், அங்கே ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கப்பட ஒன்றுமே இல்லை. ''ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர் களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை.” ஆவியானவர் வார்த்தையுடன் வழி நடத்துகிறார், ஏனென்றால் ஆவியானவர் வார்த்தையில் இருந்து மாத்திரமே வரமுடியும், ஏனென்றால் அவருடைய வார்த்தை ஆவியாக இருக்கிறது. மேலும் அது மாத்திரமே... உண்மையான தேவனுடைய சத்திய ஆவி தேவனுடைய வார்த்தையை மாத்திரமே பேச முடியும். ஓ, என்னே-! என்னே, என்னே-! உலகமே விலகிச் செல். சாத்தானே எங்களை விட்டுச் செல். 200. இந்த மலையைப் பார்த்து, "பெயர்ந்து போ” என்று சொல்ல பயப்படாது இருங்கள். அதைக் கூறுங்கள். அங்கேயே தரித்திருங்கள், அது நொருங்குவதைக் கவனிப்பீர்கள். அது உண்மை. 201. ஆனால் நீங்கள் அங்கு ஏதாவது ஆக்கினைத் தீர்ப்பைப் பெற்றிருந்தால், அப்போது நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது— நல்லது. அப்பொழுது நீங்கள் உளறிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சத்தியத்தை கூறிக் கொண்டு இருக்கவில்லை. நீங்கள் கூற வேண்டிய காரியங்களைக் கூறிக் கொண்டு இருக்கவில்லை. சரி. 202. யோசுவா அந்த சோதனையினூடாகச் சென்ற பிறகு, அவன் ஒரு நல்ல தேசத்தின் அத்தாட்சியைக் கண்டான் என்று, அவனைக் குறித்து நாம் கண்டு இறிகிறோம், மேலும் அவன் அங்கே காதேஸ்பர்னேயாவில் நின்று, அவர்கள் எல்லோருக்கும் எதிராக முறையிட்டு, “நாம் அதைக் கண்படிப்பாக கைப்பற்றிக் கொள்ள முடியும். நாம் அதைக் கைப்பற்ற முடியும்,” என்று கூறினான். யோசனை என்னவாய் இருந்தது-? கடந்து செல்லுதல். 203. மோசேயினுடைய யோசனை என்னவாய் இருந்தது-? "இந்த அடையாளத்தைக் காண்பித்து பிள்ளைகளை வெளியே அழைத்து வா.” அது தோல்வி உற்றது போன்று காணப்பட்டது. ஆனால் அவன் வார்த்தையோடு தரித்திருந்தான், மேலும் சவக்கடலின் வாசலலால் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவன் அதனூடாகச் சென்று விட்டான். அவன் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொண்டான். 204. யோசுவா தேவனுடைய வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்த்து, "நம்மால் கண்டிப்பாக கைப்பற்ற முடியும்," என்றான். அது உண்மை. அவன் யோர்தான் அண்டைக்கு வந்த போது, அது என்ன செய்தது-? அது வழிவிட்டது. ஆமென். அவ்வளவு தான். அவன் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொண்டான். அந்த யோர்தான் அங்கு கடந்து செல்வதிலிருந்து அவனைத் தடுத்துக் கொண்டிருந்த போது, அந்த வாக்குறுதியைக் கொண்டு சென்றான். ஆனால் அவன் அங்கு இறங்கின போது, அவன் ஆபிரகாமின் சந்ததியாயிருந்தான். ஏன்-? அவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தான். நீங்கள் ஒரு ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கக்கூடிய ஒரே வழி தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதே ஆகும். அதன் பின்னர் சத்துருவை மேற்கொள்ள ஆயத்தமாக அங்கே அந்த இடத்திற்கு வந்த போது அவன் என்ன செய்தான்-? தேவன் வாசலைத் திறந்தார், அவன் அதை சுதந்தரித்துக் கொண்டு, அதைக் கைப்பற்றி, கடந்து சென்றான். 205. முதல் யுத்தத்தின்போது, அவனுக்கு அவர்களோடிருந்த அவனுடைய முதல் போராட்டம், மதில் சுவர்களின் மேல் அவர்கள் ஒரு ரத பந்தயத்தை நடத்தும் அளவிற்கு அவைகள் மிகப் பெரியதாக இருந்தன. அவன் எப்படி அவர்களை உள்ளே சென்று ஜெயங்கொள்ளப் போகிறான்-? அவர்கள் அவனிடத்திலிருந்து ஓடி உட்புறமாக பதுங்கிக் கொண்டனர். சத்துரு அதையும்கூட செய்வான். “ஆனால் நீங்கள் சத்துருவின் வாசலை மேற்கொள்ள வேண்டும்." 206. மேலும், “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்-?” என்றான். அவன் ஒரு பிற்பகல் சுற்றி நடந்து வந்து, தியானித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் ஒரு மனிதன் தன்னுடைய உருவின பட்டையத்தோடு நின்று கொண்டு இருப்பதைக் கண்டான். யோசுவா தன்னுடைய பட்டயத்தை உருவி, "நீர் எங்களைச்சேர்ந்தவரா-? எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரா-?” என்று கேட்டான். அதற்கு அவர், "நான் இந்த சேனையின் அதிபதியாய் இருக்கிறேன்” என்றார். “நான் என்ன செய்ய வேண்டும்-?” 207. "பதிமூன்று முறை அதைச் சுற்றி வாருங்கள். ஒரு எக்காளம் ஊதுங்கள். நீங்கள் சத்துருவின் வாசலை மேற்கொள்வீர்கள்.” 208. அது இடிந்து விழுந்தது. ஆம், ஐயா, ஏன்-? அவன் ஒரு ஆபிரகாமின் சந்ததியாய், தேவனுடைய வார்த்தையைக் காத்துக்கொண்டவனாய் இருந்தான். அவனிடத்திற்கு வந்த ஒவ்வொரு வாசலையும் அவன் மேற்கொண்டான். நிச்சயமாகவே. தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. நான் வெளியே செல்ல வேண்டும். 209. பாருங்கள், இந்த எல்லா விலையேறப் பெற்ற வீரர்களையும், அவர்களைக் குறித்து ஒரு முழு பக்கமே இங்கு எழுதி வைத்து உள்ளேன். ஆனால் இந்த விலையேறப்பெற்ற வீரர்கள், அவர்கள் எல்லா காரியங்களையும் செய்திருந்தும், அவர்கள் முடிவிலே மரித்தனர். 210. ஆனால் அதன் பின்னர் உண்மையான விசுவாச சந்ததியான, ஆபிரகாமின் ராஜரீக சந்ததியான, ஒரு வாக்குத் தத்தமான, இயேசு வந்தார். ஆபிரகாம் ஈசாக்கை உடையவனாய் இருந்தான், உண்மையாகவே, மாம்சப்பிரகாரமாக, ஆனால் அந்த உண்மையான சந்ததி அந்த ஸ்தாபனம் முறைமையில் இருக்கவில்லை. அவர் அவனை ஜாதிகளின் தகப்பனாக்கும் படிக்கு, அது அந்த தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தத்தில் இருந்தது, ஈசாக்கினூடாக அல்ல, ராஜரீக சந்ததியான, இயேசுவின் மூலமேயாகும். அதுவே ராஜரீக சந்ததியாய் இருந்தது, அது, உண்மையாகவே, ஆபிரகாமின் சந்ததியாகும். இயேசு ஒரு யூதனாயும் இருக்கவில்லை, அவர் ஒரு புறஜாதியாயும் இருக்கவில்லை. அவர் தேவனாய் இருந்தார். பார்த்தீர்களா-? அந்த... 211. இங்குள்ள கத்தோலிக்கர்களே, உங்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கப் படுவதாக, ஆனால் நீங்கள் மரியாளை ஒரு தெய்வமாக வழிபடும் போது, எப்படி ஆயினும், உங்களோடுள்ள காரியம் என்ன-? மரியாள் ஒரு ஸ்தீரியே அல்லாமல் வேறொன்றுமாய் இருக்கவில்லை. தேவன் அவளைத் தெரிந்து கொண்டார். அவள் ஒரு அடைகாக்கும் கருவியாய் இருந்தாள். அவ்வளவு தான். ஒரு அடை காக்கும் கருவி, அது தான் ஒரு ஸ்திரீயாயிருக்கிறது, ஆனால் அவள் மனிதனின் வித்தோடு தொடர்புடையவள். 212. ஆனால், இது ஒரு கலப்படமான கூட்டமாய் இருக்கிறது, ஆனால் நான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படி நான் இதைக் கூறத்தான் வேண்டும். இப்பொழுது, நீங்கள் உங்களுடைய மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள், நான் உங்களுடைய சகோதரன். நிச்சயமாகவே, உங்களால் கேட்க முடியும். 213. மரியாளுக்கு கிறிஸ்துவில் மகரந்தம் இல்லாதிருந்தது. பரிசுத்த ஆவியானவர் அவளை நிழலிட்ட போது, ஒரு இம்மியும், பாலியல் உணர்வு இல்லாது இருந்தது. ஆனால் சிருஷ்டிகராகிய, சர்வவல்லமையுள்ள தேவன், மகரந்தத்தையும் இரத்த அணுவையும் சிருஷ்டித்தார். ஹூம்-! மரியாள் இடத்தில் இருந்து மகரந்தம் வந்திருந்தால், அப்பொழுது மரித்தோர் எழும்ப வில்லை. மகிமை-! அது புதிதாக வருகிறது. நான் அதைப் புரிந்துகொண்டேன். 214. அப்படியானால் எந்த வேறுபாடும் இல்லை என்று நீங்கள் கூறினால், நாம் என்ன செய்கிறோம், அப்படியானால் தேவன் ஏன் நம்மை தவறான காரியங்களிலிருந்து விலகியிருக்கச் சொன்னார்-? அப்படி இல்லாது இருக்குமானால், ஏன் தேவன் இயேசுவின் சரீரத்தை எழுப்பினார்-? ஆகையால், நீங்கள் பாருங்கள், அதற்குள் ஒரு ஸ்திரீ இணைக்கப்பட்டிருக்க முடியாது. அவ்வாறு இருந்திருந்தால், அப்பொழுது அவருடைய சரீரம் அவருடைய தாய் மரியாளுக்கு பிறகானதாய் இருக்கிறது, ஏனென்றால் ஒரு ஆவியின் மூலம் நிழலிடுவதனால் அவளுக்கு ஒரு பாலியல் செய்கை உண்டாயிருந்து, ஒரு விந்தணுவை வெளியேற்றத் தூண்டினதாய் இருக்கும், அது தவறாகும். பரிசுத்த ஆவியானவர், மாசற்ற கருத்தரிப்பினால், அல்லேலூயா, அவர் மனிதன் மற்றும் ஸ்தீரி இருவரின் விந்தணுவையும் சிருஷ்டித்தார். 215. இயேசு அவளை “அம்மா” என்று அழைத்தாரா-? வேதத்தில் அதைக் கண்டறியுங்கள். அவர், அவளை 'ஸ்திரீயே” என்று அழைத்தார். அல்லேலூயா-! ஸ்திரீயே-! (அது புதியது. அந்தக் காரணத்தினால் தான் அது செய்து கொண்டு இருக்கிற விதமாகவே இது செய்து கொண்டிருக்கிறது.) "ஸ்தீரியே, அதோ உன் மகன்.” அவன் இவரைப் பார்க்கிலும் அவளுக்கு மானிடப் பிறப்பில் நெருக்கமாக இருந்திருக்கக் கூடும். 216. அவர் தேவனாய் இருந்தார். அவர் யூதனாக அல்லது புறஜாதியாக இருக்கவில்லை. அவர் தேவனாய் இருந்தார், மாம்சத்தையும் சரீத்தையும் இரண்டையுமே உடையவராய் இருந்தார், தேவன் அவருக்குள் வாசம் பண்ணினார். ஒரு ஸ்திரீயின் விந்தணுவில் தேவன் வாசம் பண்ணினாரா-? அது கூடாதே. அந்தப் பெண்ணின் விந்தணுவும் நம்முடைய சதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் அது இரத்தமும் மற்றும் விந்தணுவுமாய் இருந்தது, அதாவது தேவன் நிழலிட்டார். 217. அவர் விரும்பியிருந்தால் அவரால் அதை அடி மரத்தின் மீது வைத்திருக்க முடியும். ஆம், ஐயா. அவர் விரும்பின எங்கும் அதை அவரால் வைத்திருக்க முடியும். 218. ஆனால் ஸ்திரீயானவள் விழுந்து போயிருந்த காரணத்தால் அவர் அதைக் கொண்டு வந்தார். ஜீவனுள்ள தேவனுடைய மாசற்ற குமாரன், சிருஷ்டிக்கப் பட்டு, கன்னிப் பிறப்பாய், மாம்சமும் ஆத்துமாவும் இரண்டுமே உடையவராய் வந்தார். 219. தாவீது, “என் பரிசுத்தர்...காணவொட்டேன், என் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டேன், என் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டேன். அவருடைய ஆத்துமாவை நான் பாதாளத்தில் விடேன்” என்று ஏன் கூறினான்-? தாவீது அதைக் கூறினான். புரிகிறதா-? ஆத்துமா, சரீரம், மற்றும் ஆவி, தேவனால், அவரால் சிருஷ்டிக்கப்பட்டது. 220. அந்த ஸ்திரீ ஒரு தாயாயிருக்கவில்லை. அவள் ஒரு ஸ்திரீயாக மாத்திரமே இருந்தாள். அவள் ஒரு நல்ல, பரித்தமான ஸ்திரீயாய் இருந்தாள். முற்றிலுமாக. அவள் ஒரு போதும் ஒரு அடைகாக்கும் கருவியாக இருந்ததில்லை. தேவன் ஒரு போதும் அழுக்கான அடைகாக்கும் கருவியை தேர்ந்து எடுத்திருந்திருக்க மாட்டார். கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு நான் அதன் பேரில் பிரசங்கிப்பேன், ஆனால், “பழைய அழுக்கான அடைகாக்கும் கருவி என்றால் என்ன-?” அவருடைய, அவருடைய குமாரனை பூமிக்கு கொண்டு வருவதற்கு, அவர் "ஒரு புருஷனை அறியாத ஒரு கன்னிகையை” அவர் தெரிந்து கொண்டார். பரிசுத்த ஆவியானவர் அவளை நிழலிட்டபோது, அவளுக்கு விந்து வெளியேற்றமும் அல்லது வேறு எதுவுமோ உண்டாகி இருக்கவில்லை. ஏனென்றால், தேவன், தம்முடைய மாசற்ற, முடிவற்ற வழியில், அவளுக்குள்: இயேசு கிறிஸ்துவினுடைய ஆத்துமா, சரீரம், மற்றும் ஆவியை சிருஷ்டித்தார். அது உண்மை. அவர் கன்னிப் பிறப்பான தேவ குமாரனாக இருந்தார். 221. அது என்ன செய்தது-? அது சத்துருவின் வாசலை உடைத்தது. அல்லேலூயா-! வ்வுயூ-! இது எனக்கு நன்மையாய் இருந்து கொண்டிருக்கிறது. பாருங்கள். ஏன்-? இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு பாலியல் இச்சையினால் பிறக்கிறான் என்ற, அந்த சத்துருவின் வாசலை அவர் உடைத்தார், அவ்வாறு பிறப்பதனால் பரலோகத்திற்குச் செல்ல முடியவில்லை, ஏனென்றால் அது துவக்கத்திலேயே, ஏதேன் தோட்டத்தில் பாலியலாய் இருந்தது, ஏன் அவர்கள் தங்களை மூடிக் கொண்டனர். அவர் அதைச் செய்த போது, அவர் அந்த காரியத்தை அங்கே இரண்டாக உடைத்து, சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொண்டார். எதனால்-? முதன் முறையாக ஆபிரகாமின் ராஜரீக சந்ததியை எடுத்து, அதை அடியோடு நொறுக்கினார். ராஜரீக சந்ததியின் விசுவாசமும் வாக்குத்தத்தமும், மரியாளின் ஒரு கருத்தரிப்பினால் அல்ல, ஆனால் தேவனால் அந்த வாசல்கள் உடைக்கப்பட்டன. அது, மானிட வர்க்கத்தை அந்த வாசலினூடாக கடந்து செல்ல வைக்கிறது. தேவனுக்கே மகிமை-! 222. அவர் என்ன செய்தார்-? அப்பொழுது அவர் சத்துருவின் எல்லா வாசல்களையும் மேற் கொண்டார். அவர் சுகவீனத்தின் வாசலை மேற் கொண்டார். சுகவீனம் அவருடைய பிரசன்னத்தில் இருக்க முடியவில்லை. இல்லை, ஐயா. எதுவுமே அவருடைய பிரசன்னத்தில் இருக்க முடியவில்லை. ஒரு சவ இறுதி ஊர்வலம் அவருடைய பிரசன்னத்தில் இருக்க முடியவில்லை. இல்லை. அவர் என்ன செய்தார்-? 223. யோசுவா மரித்தான். மோசே மரித்தான். மீதம் உள்ள அனைவரும் மரித்தனர், ஆனால் இந்த ராஜரீக சந்ததியல்ல. ஜீவன் இருந்த இடத்தில் மரணம் நிற்க முடியவில்லை. 224. நாயீன் என்னும் ஊரிலிருந்து, அவளுடைய மரித்த பையனோடு வந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீயை நிறுத்தி, “மகனே, எழுந்திரு” என்றார். 225. யவீருவினுடைய குமாரத்தியான, அந்த பெண் மரித்துப் போய்விட்டாள், அவர், அங்கே அப்பால் அறியப்படாத உலகத்தில் ஒரு வார்த்தை பேசி, "மகளே எழுந்திரு” என்றார். 226. லாசரு, மரித்து நான்கு நாட்களாகி மற்றும் அவனுடைய சரீரம் அழுகிப் போய், அவனுடைய ஆத்மா அதிலிருந்து போய், நான்கு நாட்களாகியிருந்தது. அவர், "லாசருவே, வெளியே வா," என்றார். மகிமை-! 227. அங்கு தான் அவர் இருக்கிறார். அவர் என்ன செய்தார்-? அவர் எல்லாவற்றின் முத்திரைகளையும் உடைத்தார். அல்லேலூயா-! 228. அப்போது அவர் மரிக்க வேண்டியதாயிருந்த போது, அவரால் அந்த ஜீவனை பற்றிப் பிடித்துக்கொள்ள முடியவில்லை. அவர் மரித்திருந்திருக்க மாட்டார், ஆனால் அவர் அந்த ஜீவனை கொடுக்க வேண்டியதாக இருந்தது. அவர் அந்த ஜீவனைக் கொடுத்தபோது, அவர் ஒரு பயங்கரமான மரணத்தில் மரித்தார். அவருடைய விலையேறப் பெற்ற ஆத்துமா, வேதம் கூறியுள்ளது போல, என்னுடைய ஸ்தானத்தையும் உங்களுடைய ஸ்தானத்தையும் எடுத்துக் கொள்ளும்படி பாதாளத்திற்கு இறங்கினது. ஆபிரகாமின் ராஜரீக சந்ததி-! என்ன-? அவர் ராஜரீக சந்ததியாய் இருந்தார். ஓ, மகிமை-! 229. இப்பொழுது நாம் ராஜரீக சந்ததியாய் இருக்கிறோம், என்ன, அது அவர் இருந்த விதமாகவே சரியாக, வார்த்தையோடு தரித்திருக்கிறது. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது; அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” அந்த ராஜரீக சந்ததி எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் காணவில்லையா-? ராஜரீக சந்ததி வார்த்தையோடு தரித்திருக்கிறது. 230. பிசாசோடும், அவனுடைய உலக நாகரீகங்களோடும், மனப்பூர்வமாக ஒப்புரவாகுவதற்கு ஆயத்தமாய் இருக்கும் பெலவீனர்களே. (நான் இங்கு உங்கள் இடத்தில் மாத்திரம் பேசிக் கொண்டிருக்கவில்லை.) அங்கே, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று பிரசங்கிக்கிற பிரசங்கிமார்களாகிய நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை என்று நீங்கள் பிரசங்கிக்கிறீர்கள், உங்களுக்கு அவமானம், மற்றும் உங்களை ஆபிரகாமின் சந்ததி என்று அழைத்துக் கொள்கிறீர்கள். 231. ராஜரீக சந்ததி வார்த்தையோடு தரித்திருக்கிறது. ராஜரீக சந்ததி மனிதனால் பிறக்கவில்லை, மனிதனுக்கோ அல்லது ஸ்திரீக்கோ அதனோடு சம்பந்தம் கிடையாது. ஸ்திரீ சபையாய் இருக்கிறாள்; சபையோடு எந்த சம்பந்தமும் இல்லை. மரியாளுக்கு அந்த வித்தோடு எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. அதே போல் ஸ்தாபனம் என்றழைக்கப்படுகின்ற, சபைக்கும், அந்த சந்ததியோடு எந்த சம்பந்தமும் இல்லை. அது எதிலிருந்து பிறந்தது-? ஒரு ஸ்தாபனத்தில் இருந்து அல்ல, மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடெரியன், கத்தோலிக்கம், லூத்தரன், போன்றவற்றிலிருந்தும் அல்ல. 232. ஆனால், தேவனுடைய வாக்குத்தத்தத்தின் சந்ததியாய் பிறந்துள்ளதே, அந்த சத்துருவின் வாசலை மேற்கொள்கிற ஒன்றாய் இருக்கிறது. அது ஏற்கனவே அவருக்காக எடுக்கப்பட்டிருந்தது. “நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும்.” அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. அது ஒரு வாக்குதத்தம். அது ஏற்கனவே முடிந்துவிட்டது. 233. நான் செல்ல வேண்டிய பாதாளத்திற்குள்ளாக, அவருடைய விலையேறப் பெற்ற ஆத்துமா இறங்கினது. ஆனால் அந்த மூன்றாம் நாளிலே...சிம்சோன் பட்டணத்து வாசல் கதவை தன் தோளின் மேல் வைத்து சுமந்து சென்றான், அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. அவர் பாதாளத்தில் வாசல்களை, கல்லறையின் வாசல்களை, மற்ற ஒவ்வொன்றின் வாசல்களையும் மேற் கொண்டார். அவர் அதை மலையின் மேல் சுமந்து செல்லவில்லை, ஆனால் அவர் அதை அழித்துப் போட்டார். அல்லேலூயா-! அவர் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொண்டார். 234. சூழ்நிலைகளும் பிசாசினுடைய வல்லமையால் நிரப்பப்பட்டிருந்தது, மேல் இருந்து, தூதர்களோ அல்லது வேறு எதுவுமோ கீழே வர முடியாதிருந்தது. எந்தப் பரிந்து பேசுதலும் இருக்க முடியாதிருந்தது, ஏனென்றால் வெள்ளாட்டுக் கடாக்களின் இரத்தம் பாவத்தைப் போக்காது. ஆனால் அவருடைய சொந்த இரத்தம் பாவத்தைப் போக்கிற்று. 235. அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கினார். அவர் மனிதர்களுக்கு வரங்களை அளித்தார். இப்பொழுது, ஆபிரகாமின் சந்ததியான ஒவ்வொருவரும் அந்த கிரயத்தை செலுத்தும்படி, இறங்கி வந்து அவர்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்பி, அவர்களுடைய பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, சோதனைக்கு நிற்க ஆயத்தமாக இருக்கின்றனர். 236. அவைகள் உங்களிடத்திலிருந்து உலகத்தை வெளியேற்றும் போது, தவறாக இருக்கின்ற ஒவ்வொரு காரியமும், தவறாய் தோன்றுகிற ஒவ்வொரு காரியமும், ஸ்திரீகள் தங்களுடைய தலைமுடிகளோடும், புருஷர்கள் தங்கள் உடைய மட்டுமீறிய செய்கைகளோடும், சபைகள் தங்களுடைய ஸ்தாபனங்க ளோடும், மற்றும் மேய்ப்பர் தன்னுடைய உதவிக்காரர்களுக்கு உதவி செய்வது மற்றும்—மற்றும் அந்த விதமான எல்லாக் காரியங்களும் போய்விடுகின்றன. உலகப் பிரகாரமான மற்ற ஏதோ ஒரு கூட்டம் அங்கே உள்ளே வந்து, ஒரு ஏழ்மையான மேய்ப்பரை, சபையை விட்டு அவரை வெளியே உதைத்துத் தள்ளுகிறது. 237. மேய்ப்பரே, தொடர்ந்து செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வார்த்தையோடு தரித்திருங்கள். ஒன்றையும் எடுத்துக்கொள்ளாதீர்கள். 238. அவர் உன்னதத்திற்கு ஏறினார். அவர் என்ன செய்தார்-? அவர் ஒரு துளையை வெட்டினார், ஒரு வாசலை, அதாவது இந்த ஆபிரகாமின் சந்ததியின் ஜெபத்திற்காகவே. ஏன்-? ஏன்-? நாம் கிறிஸ்துவின் சரீரமாக இருந்தால், நாம் மரித்திருந்தால், நாம் நம்மை கிறிஸ்துவுக்குள் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட வர்களாகவும், உயிர்த்தெழுதலில் அவரோடு எழுந்தவர்களாகவும் எண்ணிக் கொள்கிறோம். அவர் சரீரத்தின் தலையாய் இருக்கிறார். தலை எங்கே இருக்கிறதோ, சரீரமும் அததோடே இருக்கிறது. அப்படியானால், இக்காலையில், அதை செய்த ஒவ்வொருவரும் ராஜரீக சந்ததியோடு, "உன்னதங்களிலே அவரோடு உட்கார்ந்திருக்கிறோம்,” தேவனுக்கு ஸ்தோத்திரம். 239. வாசல்களே இல்லை. உங்களால் இவ்வளவு நேரம் ஜெபித்து, மேலும், "ஓ, ஓ, ஒரு வார்த்தை உண்டு,” என்று சொல்ல முடியாது. ஹூ-ஹு. அவர்கள் அங்கேயே, உங்களை நிறுத்திவிடுவார்கள். 240. ஆனால் நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளாக தீர்க்காது இருந்தால்; நாம் தேவனுடைய கற்பனைகளில் நடந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருந்தால்; நம்முடைய ஜீவியங்கள் சுத்தமாக்கப்பட்டு இருப்பதை நாம் காண்போமானால்; நாம் அதைக் காண்கிறோம்; தேவன் கட்டளையிட்டு உள்ள ஒவ்வொரு வார்த்தையையும், நாம் அதைக் காத்துக் கொள்ள வேண்டும்; அதன் பின்னரே சத்துருவின் ஒவ்வொரு வாசலும் சுதந்தரிக்கப்படுகிறது. “அப்பொழுது நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவது உங்களுக்காக செய்யப்படும்.” "அவன் தன் சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்கிறான்.” ஓ, சகோதரனே, நாம் என்னே... ஒரு சபையாய் இருப்போம்-! 241. கர்த்தர் என்னை அனுமதிப்பாரேயானால், நாம் ஃபீனிக்ஸூக்கு மீண்டும் திரும்பி வரும் போது, நான் இந்த கூடாரத்துக்குள் நடந்து வரும் போது, இந்த இருக்கைகள் நிரப்பப்பட்டிருக்கும் என்றும், இந்தப் பட்டணத்தில் உள்ள முழு சுவிசேஷ அசைவில் உள்ள ஒவ்வொரு இருக்கையும் ஜீவனுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களால் நிரப்பப்பட்டு இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்: கிறிஸ்தவனைப் போல் காணப்படுங்கள்; கிறிஸ்தவனைப் போல் பேசுங்கள்; கிறிஸ்தவர்களைப்போல் செயல்படுங்கள்; அப்பொழுது அவர்களுக்கு மத்தியிலே தேவனுடைய ஆவி அசைவாடுவதோடு, அங்கே, ஒருவர் பாவம் செய்தாலும், பரிசுத்தாவியானவர் உடனே அதை அழைப்பார். 242. அதுவே இதைச் செய்யும். நீங்கள் அதை ஜெப வரிசையில், இங்கே மேலே பீடத்தண்டையில் அதைக் கண்டீர்கள். அங்கே, "நீ அங்கே திரும்பிப் போய், உன்னுடைய கணவனோடு அதை சரிப்படுத்திக்கொள். நீங்கள் நேற்று முன்தின இரவு, அந்த ஸ்திரீயோடு, நீங்கள் வெளியே போய், ஒரு குறிப்பிட்ட- குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து இருந்ததாக போய் உங்களுடைய மனைவி இடத்தில் சொல்லுங்கள்,” என்று கூறுகிறது. வார்த்தையில் நடப்பதன் மூலம், அது இதனை இங்கே செய்யுமானால், அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்திற்குச் செவி கொடுத்தல், அது உங்களுக்குள் அதனைச் செய்யும். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கிறீர்கள். அப்படியானால், பாவம் என்பதே இல்லை. 243. பிரசங்கியாரே, நீங்கள் அதை உங்களுடைய சபையில் காண விரும்ப மாட்டீர்களா-? இந்த சபைக்குள் நடந்து, இங்கே நோக்கிப் பாருங்கள், புருஷனும் ஸ்திரீகளும் இருவரும் தேவ பக்தியாய், பரிசுத்தமாய், அங்கே தேவனுடைய வல்லமையால் நிரப்பப்பட்டு அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். பாவம் உள்ளே பிரவேசிக்க முடியாது. ஒரு மனிதன் உள்ளே வந்து அமரும் போது, ஆவியானவர் எழும்பி, “ஜான் ஜோன்ஸ், நீர் இன்ன- இன்ன, ஒரு பட்டிணத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட- குறிப்பிட்ட இடத்திலிருந்து வந்திருக்கிறீர். அவர் தன்னுடைய சரீரத்துக்கான சுகமளித்தலை கண்டறியவே இங்கிருக்கிறார். பார்த்தீர்களா-? அவர் ஒரு குறிப்பிட்ட காரியத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்தார். அவர் இதைச் செய்தார், அவர்... அவர் இதை திரும்ப ஒப்புக்கொண்டு, இதை சரிப்படுத்திக் கொண்டால், அப்பொழுது தேவன், அவரை அந்த புற்று நோயில் இருந்து சுகப்படுத்துவார். ''கர்த்தர் உரைக்கிறதாவது," என்று கூறுகிறார். என்னே, என்னே-! 244. எனக்கு ஒரு சபையைக் கொடுங்கள், எனக்கு பத்து மனிதரை, நிரப்ப-...உண்மையாகவே தேவனுடைய இரத்தினங்களை, ராஜரீக சந்ததியைக் கொடுங்கள், அந்த மனிதர்களை ஒன்று சேர்க்கும் போது, என்ன சம்பவிக்கும் என்று பாருங்கள். அந்தவிதமான ஜனங்களை எனக்கு இந்த இந்த சிறு வீடு நிறையத் தாருங்கள், உலகத்திற்கு வெளிச்சம் தரும் ஒரு ஒளியை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். அது உண்மை. அப்படித் தான் நாம் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். “நீங்கள் ஒரு மலையின் மேல் இருக்கிற ஒரு பட்டிணமாய் இருக்கிறீர்கள்." நீங்கள் ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாய் இருக்கிறீர்கள். “அது அதனுடைய சத்துருவின் வாசலை சுதந்தரித்துக் கொள்ளும்." 245. சுகவீனம், சுகவீனத்திற்கு ஒரு காரணம் உண்டு. இந்த காரியங்களுக்கான ஒரு காரணம் உண்டு. தேவன், பரிசுத்த ஆவியானவர், அந்தக் காரியத்தை வெளிப்படுத்த, நீங்கள் ஏன் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று உங்களுக்குக் கூற இங்கிருக்கிறார். நம்மோடு உள்ள காரியம் என்ன-? நாம், “அது செய்யுமா” என்று ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அது ஏற்கனவே அதைச் செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்-? 246. அந்த தீர்க்கதரிசியை கவனியுங்கள். அவன், "தேவனுக்கு மகிமை-! அல்லேலூயா-!” என்ற பலத்த காற்றடிக்கிற முழக்கத்திற்குச் செவி கொடுக்க வில்லை. 247. அது உண்மை. இப்பொழுது, நினைவிருக்கட்டும், நான் அதை கண்டித்துக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவரும் அதை புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றே நான் நம்புகிறேன். யாரோ, "சகோதரன் பிரான்ஹாம், 'தேவனுக்கு மகிமை-! அல்லேலூயா-!' என்று கூறுவதில் நம்பிக்கைக் கொள்வதில்லை,” என்றார். பாருங்கள், இப்பொழுது இங்கே என்னைப் பாருங்கள். நான் சத்தமிடுவதில், அந்நிய பாஷைகள் பேசுவதில், ஆவியில் நடனமாடுவதில் நம்பிக்கைக் கொண்டு உள்ளேன். 248. ஆனால், சகோதரனே, நீங்கள் அந்த அமர்ந்த மெல்லிய வார்த்தையின் சத்தத்தைக் கேட்க தவறும் போது, அந்தக் காரியம் தான் உங்களைக் கவர்கிறது. அது தான் காரியமாகும். 249. இந்த எழுப்புதல் எல்லாம் வெளியே நடைபெற்றுக் கொண்டிருந்ததை எலியா அறிந்திருந்தான். ஆனால் அவன், அது அவனை வெளிப் புறத்தில் அதற்கு ஒரு போதும் கவரவில்லை. ஆனால் அவன் அந்த அமர்ந்த மெல்லிய தேவனுடைய சத்தத்தைக் கேட்ட போது, அப்பொழுது அவன் கவரப்பட்டான். அவன் தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டு, வெளியே வந்தான். ஏன்-? எலியா ஆபிரகாமின் சந்ததியாயிருந்து, வார்த்தையைப் பின்பற்றிக் கொண்டு இருந்தான். 250. “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், அப்பொழுது நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ, அது உங்களுக்காகச் செய்யப்படும்." நாம் ஒரு நிமிடம் நம்முடைய தலைகளை ஜெபத்திற்காக வணங்குவோமாக. 251. ஓ, சபையே, நான் அந்த விதமாக பிரசங்கிக்கும்போது, எப்படி, எப்படி நான் உணருகிறேன்-! ஆவியானவர் என்னிடத்தில் இறங்கி வந்து கடிந்துரைப்பதை நான் திரும்பிப் பார்கிறேன். ஜனங்கள் உண்மையாகவே தங்களுடைய சட்டைப் பையிலிருந்து, தங்களுடைய பிள்ளைகளுக்கான ஆகாரத்திலிருந்து எடுத்து, அதை எனக்குக் கொடுக்கிறதை நான் காண்கிறேன். நான் இங்கே ஸ்திரீகளைப் பார்க்கிறேன், ஒருவேளை அவர்கள் குட்டை முடியோடு இருக்கலாம். அவர்கள் என்ன செய்வார்கள்-? அவர்கள் இந்த உலகத்தில் எனக்கு செய்ய முடிந்த எந்த காரியத்தையும் செய்வார்கள். அந்த விதமான ஒரு மனைவியோடு வாழ்கின்ற மனிதன், நான் அவனை வார்த்தையினால் துண்டு துண்டாக வெட்டி, அவனை புண்படுத்தி அவனுடைய மனசாட்சியை உணர்த்தும்படி செய்கிறேன். அதே சமயத்தில் அந்த மனிதன் இங்கிருந்து போய் கடுமையாக பணி புரிந்து, அவனுடைய தசமபாகத்தை எனக்கு அனுப்புகிறான். உண்மை. அது என்னை உணரச் செய்கிறது, பாருங்கள், அதன் பின்னர் நான் மாம்சப் பிரகாரமான நிலையினை திரும்ப அடைகிறேன், நீங்கள் பாருங்கள், என்ன, நான் என்ன கூறினேன்-? நான் புண்படுத்த வேண்டும் என்று செய்கிறதில்லை. அதுவல்ல அது. 252. ஆனால், ஓ, சகோதரனே, என் அன்பான சகோதரி மற்றும் சகோதரனே, அது தேவனுடைய வார்த்தையாய் இருந்தால், அவருடைய ஆவியானது அந்த வார்த்தையை உங்களுக்கு, ஜீவிக்க செய்கிறதாய் இது இருக்கும், நியாயத் தீர்ப்பின் நாளில் அது என்னவாயிருக்கும்-? நான் அந்த நாளுக்காக உங்களை ஆயத்தப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். தயவு கூர்ந்து, தயவு செய்து அவருடைய வார்த்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் எப்போதாவது, தேவனுடைய வாக்குத்தத்த, வார்த்தையாய் இல்லாத எந்த ஒரு காரியத்தையாவது பிரசங்கித் இருந்தால், அப்பொழுது உங்களுக்கு என்னிடத்தில் வர உரிமை உண்டு. ஆனால் அது வார்த்தை. அது நான் உங்களை நேசிப்பதனாலேயாகும். 253. நீங்கள் அந்த படகில் இருப்பதை நான்— நான் விரும்பவில்லை என்ற காரணத்தினால் அல்ல. அந்தப் படகு உங்களை கொண்டு செல்லாது என்ற காரணத்தினாலேயாகும். இந்நாட்களில் ஒன்றில், நீங்கள் நொறுங்கப்போகிறீர்கள். 254. நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு வந்தாக வேண்டும். "மிகச் சிறியதில் குற்றவாளியாய் இருப்பவன் எல்லாவற்றிலும் குற்றவாளியாய் இருப்பான்." எந்த காரியத்தையாவது செய்வது சரி என்றும், அது தேவனுடைய வார்த்தை என்றும், அதை செய்வது ஒரு வாக்குத்தத்தம் என்றும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும் போது, அதன் பின்னர் நீங்கள் அதை செய்யாதிருந்தால், அப்பொழுது அதைக் குறித்து என்ன-? அப்பொழுது ஒரு காரணத்தைக் கூறும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள், பிறகு என்ன-? இந்த காலையில் இந்த செய்தி நியாயத் தீர்ப்பின் நாளிலே, அப்பால் உள்ள அந்த திரையிலே உங்களை எதிர் நோக்கும் போது, அதைக்குறித்து என்ன-? நண்பர்களே, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அந்த நாள் முடிவதற்கு முன்னரே நீங்கள் மரிக்கலாம். நாம் யாவரும் மரிக்கலாம், மேலும் ஒரு காரியம் நிச்சயம், நீங்கள் மரிக்கப் போகிறீர்கள். 255. அன்றொருநாள் என் தாயை கவனித்துக் கொண்டே, நான் என்னுடைய கரங்களினால் அவளைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தேன். அதற்கு முன்னர் நான் என் தந்தையை சற்று நேரம் பற்றிப் பிடித்திருந்து, அவர் மரிப்பதைக் கவனித்தேன். 256. தாங்கள் சரியாய் இருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள், அவர்கள் முடிவின் பாதைக்கு வந்ததை நான் கண்டிருக்கிறேன். "ஓ, சகோ.பிரான்ஹாம், ஓ, என்னால் இன்னும் கொஞ்சக் காலம் மாத்திரம் வாழ முடிந்தால் நலமாய் இருக்குமே-!" என்று கூறுவார்கள். அப்பொழுது அதிக காலதாமதமாய் இருக்கும். நினைவிருக்கட்டும், மரணம் ஆத்துமாவை மாற்றுகிறதில்லை. அது அதனுடைய வாசஸ்தலத்தை மாத்திரமே மாற்றுகிறது. நீங்கள் அதைக் காண்பீர்களானால், உங்களுக்குள் இருக்கின்ற ஏதோ ஒன்று. இப்பொழுது எதிர்பார்க்கத்தக்கதாக இருங்கள். நீங்கள் அதைக் காண்பீர்களானால், உங்களுக்குள் இருக்கிற ஏதோ ஒன்று உங்களை அந்த விதமாக செயல்பட செய்யும், உணரக்கூடாததை, அந்த விதமாக உணரவும் செய்யும், நண்பனே, நீ இந்தக் காலையில், மனம் திரும்புவாயா-? வாருங்கள். இருங்கள்... நீங்கள் அந்த விதமாக இருக்க வேண்டாம். நீங்கள் ஒரு பரிதபிக்கத்தக்க நபராய் இருக்கிறீர்கள். ஒரு உண்மையான ராஜரீக சந்ததியின் ஜீவியத்தை ஜீவியுங்கள். இன்றைக்கு தேவன் உங்களை விரும்புகிறார். 257. உங்களுடைய தலையும், இருதயமும் வணங்கி இருக்கையில், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா-?. “சகோ.பிரான்ஹாம், நான் என் உடைய இதயத்திலிருந்து, என்னுடைய கரத்தை தேவனுக்கு உயர்த்துகிறேன். நான் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். நான் உண்மையாகவே அப்படித் தான் இருக்க விரும்புகிறேன். நான்- நான் இங்கு மற்றும் ஒவ்வொரு காரியத்திலும் குழம்பியிருக்கிறேன், ஆனால் உண்மையாகவே நான்- நான் அந்த விதமாக இருக்க விரும்பவில்லை. நீர் இந்தக் காலையில் பேசிக் கொண்டிருந்த விதமாக நான் இருக்க விரும்புகிறேன். சகோதரன் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள். நான் என்னுடைய கரங்களை தேவனுக்கு, உங்களுக்கு அல்ல, சகோ.பிரான்ஹாமுக்கு அல்ல, ஆனால் தேவனுக்கு உயர்த்திக் கொண்டு இருக்கிறேன். என் இருதயத்தில், அவர் என் இருதயத்தை அறிந்திருக்கிறார். இயேசு கிறிஸ்து மூலமாக, ஆபிரகாமின் ஒரு ராஜரீக சந்ததியைக் குறித்து, நீர் பேசிக் கொண்டிருந்த அந்த விதமான ஒரு கிறிஸ்தவனாய் இருக்க நான் வாஞ்சிக்கிறேன்," என்று கூறுங்கள். இப்பொழுது உங்களுடைய கரத்தை உயர்த்தி, "நான்... சகோ.பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள்,” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நிச்சயமாகவே அவர் அதை உங்களுக்காக செய்வார். 258. எங்களுடைய பரலோகப் பிதாவே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில், உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில்-! கர்த்தாவே, இந்த ஏழையான ஜனங்கள் இங்கே அநேக முறை சிக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் தெளிவாக உணர்கிறேன், வெவ்வேறான... ஜனங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை; ஒருவர் வந்து ஒரு காரியத்தைக் கூறுகிறார்; மேலும் ஒருவர் வந்து, மற்றொன்றைக் கூறுகிறார். 259. மேலும் இங்கே பீனிக்ஸில், இந்தப் பெரிய பட்டணத்தின், சுற்றுலா பயணிகள், தேச முழுவதிலும் உள்ள ஒவ்வொரு காரியத்திற்கு உள்ளாகவும் மாம்சப்பிரகாரமாக மற்றும் ஆவிக்குரியப் பிரகாரமாக வருகிறார்கள். அன்றொரு நாள், மலையின் மேல் நின்று கொண்டு, இங்கே கீழே தேவனுடைய நாமம் எத்தனை முறை வீணாக வழங்கப்பட்டிருக்கிறது என்றும், எத்தனை முறை விபச்சாரங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்றும், எவ்வளவு பாவம் மற்றும் சகதி இந்த வீதிகளில் இருக்கிறது என்றும், மது மதுபான கடைகள், மதுபான பிரியர்கள், மற்றும் ஒவ்வொரு காரியத்தை குறித்தும், அவர்களில் அநேகர் விசுவாசிகளாக இருப்பதாகவும், கிறிஸ்தவராய் இருப்பதாகவும் கூறிக் கொள்வதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேனே-! 260 ஸ்தீரிகள் வீதியில், தங்களுடைய கரத்தில் ஒரு சிகரெட்டோடு சென்று கொண்டிருக்கிறார்கள். ஒழுக்கக்கேடான ஆடைகளோடு நடந்து செல்கிறார்கள், "அது அருவருப்பானது,” என்றும், அது உமக்கு முன்பாக நாற்றமடிக்கிறது என்றும் நீர் கூறின போதும், எங்கோ பழைய, அழுக்கான, அசுத்தமான, நாற்றம் அடிக்கும் சிறுநீர் கழிப்பிடம் போன்றுள்ளனர். ஓ தேவனே, பரிசுத்த ஆவியை பெற்று உள்ளதாக உரிமை கோருகிற ஒரு ஸ்திரீ எப்படி அத்தகைய ஒரு காரியத்தை செய்ய முடியும், மேலும் அது இரட்சகருடைய நாசியில், அந்த விதமான துர்நாற்றமாய் வீசுகிறது என்று தெரியுமா-? அவருடைய ராஜ்ஜியத்தில் அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தை அவர் எப்படி உடையவராய் இருக்க முடியும்-? பிதாவே, அவர்கள் அதிலிருந்து பத்து இலட்சம் மைல்கள் தொலைவில் இருக்கிறார்கள் என்பதை. அவர்கள் மாத்திரம் அறிந்திருந்தால் நலமாயிருக்குமே. 261. தேவனே, இரக்கமாயிருக்க வேண்டும் என்று, நான் ஜெபிக்கிறேன். எவருமே அந்த இழக்கப்பட்ட ஸ்தலத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறதில்லை. பிதாவே, எவருமே அங்கே செல்ல விரும்புகிறதில்லை. எங்களில் எவருமே அங்கு செல்வது தூரமாய் இருப்பதாக. அதே சமயத்தில் அந்த நபரிடத்தில், அந்த மனிதனிடத்தில், அந்த ஸ்திரீ இனிடத்தில் அங்கு ஒரு நல்ல இருதயம் இருக்கிறது, தான தரும சிந்தனையுள்ள, அருமையான, தயவான ஒரு மனிதனோ அல்லது ஸ்தீரியோ, பிசாசினால் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றனர். பிசாசு அதைச் செய்துவிட்டான். 262. சாத்தானே, நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன், ஏனென்றால் நீ என் கர்த்தருடைய சத்துருவாய் இருக்கிறாய். அவருடைய வார்த்தைக்கு சத்துரு வாய் இருக்கிறாய். ஒரு அழிவுள்ளவன் என்ற காரணத்தினால், எனக்குள் எந்த வல்லமையும் இல்லை என்பதை அறிந்து, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால், நான் உனக்குக் கட்டளை இடுகிறேன். உன்னைத் தடுத்து நிறுத்த என்னிடத்தில் வல்லமை இல்லை. இந்த ஒலி நாடாவை கேட்டுக் கொண்டிருக்கிற இந்த புருஷர்களில் எவரையும், இந்த ஸ்திரீகளில் எவரையுமே, அல்லது— அல்லது எங்குமே சுத்தம் செய்யக் கூடிய வல்லமை என்னிடத்தில் இல்லை. அவர்களை சுத்தமாகக் கூடிய வழி என்னிடத்தில் இல்லை. நான் வல்லமை அற்றவனாக இருக்கிறேன். ஆனால் ஒரு ஊழியக் காரன் என்ற முறையில், அதை பிரசங்கிக்க தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தை நான் பெற்றி இருக்கிறேன், மேலும் அந்த அதிகாரத்திற்கு கடமைப் பட்டுள்ளேன். இங்குள்ள இந்த காவல்காரனுக்கு ஒரு காரை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை இல்லை, ஆனால் அதை செய்யும்படியான அதிகாரத்தை உடையவனாய் இருக்கிறான். 263. மேலும், சாத்தானே, நீ போய் உன்னுடைய வேலைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளலாம், ஏனென்றால், எங்கெங்கெல்லாம் இந்த செய்தி போகிறதோ, உலகம் முழுவதிலும் இருக்கிற இந்த ஜனங்களை நீ விட்டுவிட வேண்டுமென்று நான் உனக்கு இயேசு கிறிஸ்துவினால் கட்டளையிடுகிறேன். அவர்களை விட்டுவிடு. அவர்கள் கிரையத்திற்கு கொள்ளப்பட்டவர்கள் என்று, நான் அவர்களை உரிமைகோருகிறேன். அவர்கள் தங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல. அவர்கள் ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாய், கர்த்தராகிய இயேசுவினால், ஒரு கிரையத்திற்கு கொள்ளப்பட்டவர்கள். 264. அசுத்தமான, அழுக்கான, நாற்றமடிக்கும் மாய்மாலக்காரனே, மனிதர்களை வஞ்சிக்கிறவனே, அவர்களை குருட்டுத்தனமாக நரகத்தின் பள்ளங்களில் வழி நடத்துகிறவனே, நீ அவர்களை விட்டுவிடு. நீ அவர்களை விட்டுவிடு என்று, அவருடைய குமாரனின் பலியாகிய இயேசுவின் மூலமாகவும், ஜீவனுள்ள தேவனின் மூலமாகவும், நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், அவர்களுடைய ஆத்துமாக்கள் அவருடைய ஆசீர்வாதத்தினாலும், அவருடைய பிரசன்னத்தினா லும், ஒவ்வொரு சத்துருவின் வாசலையும் அவர்கள் சுதந்தரித்துக் கொள்ளும் படியாக நிரப்பப்படுவதாக. [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.) நீ அவர்களை இதற்காகவோ, அதற்காகவோ, அல்லது மற்றதெற்காகவோ அல்லது ஏதோ பரிசுத்த தொடுதல் அல்லது மற்ற ஏதோ ஒன்றுக்காக காத்திருக்க வைத்து இருக்கிறாய், ஆனால் நீ உன்னுடைய பிடியைத் தளறவிடப் போகின்றாய் என்றே நான் கூறிக் கொண்டிருக்கிறேன். 265. இது போன்ற அபிஷேகத்தில் எப்படி சுகவீனம் நிற்க முடியும்-? தகப்பனாகிய ஆபிரகாம் செய்தது போல வாக்குத்தத்தை நோக்கிப் பார்க்காமல் அவர்கள் மறுக்கும் போது மாத்திரமே, ஆபிரகாமினால் அவரை நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு அப்பால் ஒரு உருவத்தில் வருவதைப் பார்க்க முடிந்தது. 266. அவர்களை விட்டுவிடு. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், அந்த ஜனங்களைப் போகவிடு. 267. தேவனுடைய வல்லமையும், வார்த்தையின் புரிந்து கொள்ளுதலும், அவர்கள் இக்காலையில் அதனால் கழுவப்பட்டிருக்கிறபடியால், தேவனுடைய வார்த்தையும் அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மை என்று கடைபிடிக்கும் புரிந்து கொள்ளுதலும், சாத்தானால் உடைக்கப்பட முடியாத ஒரு பிடியாய் இருப்பதாக. ஒவ்வொருவரும் அந்த வாக்குறுதியைப் பற்றிப் பிடித்து, “இது தான் அது. நான் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார். நான் ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கிறேன். என்னால் எப்படி அவருடைய வாக்குத்தத்தை சந்தேகிக்க முடியும்-?” என்று கூறுவார்களாக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊடாக, முன்னோக்கி செல்வார்களாக. ஆமென். நான் அவரை நேசிக்கிறேன்... 268. நண்பர்களே, இந்தக் காலை இது ஒரு கடிந்துகொள்ளுதலாய் இருந்து வந்துள்ளது. இப்பொழுது நாம் இனிமையாக ஆராதிப்போமாக. ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 269. இது நிகழக்கூடியதா, பரிசுத்த குலைச்சல் அல்ல, நிச்சயமாக அல்ல...இது பக்தியானது. நாம் நேசிக்கிற அவரிடத்தில் நாம் நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. மேலும் இவ்வாறு கூறுவோம்: நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என்ற இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 270. எப்பொழுது இங்குள்ள ஒவ்வொரு ஸ்திரீக்கும் அல்லது பெண்ணுக்கும், இது என்னுடைய கரமாயுள்ளது. தேவன் உங்களை நேசிக்கிறார். இங்குள்ள ஒவ்வொரு புருஷனுக்கும் அல்லது பையனுக்கும், தேவன் உங்களை நேசிக்கிறார். நான் உங்களை நேசிக்கிறேன். இப்பொழுது நான் கரம் நீட்டி உங்கள் ஒவ்வொருவருடைய கரங்களையும் பற்றிப் பிடிக்க முடியாது, ஆனால் நான் என்ன பொருட்படுத்துகிறேன் என்பதை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். நாம் அதை மீண்டும் பாடுகையில், அப்படியே சுற்றித் திரும்பி யாருடனாவது கரங்களைக் குலுக்குங்கள். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” நான்... ...சம்பாதித்தார் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என்ற இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 271. நீங்கள் அவரை நேசிக்கவில்லையா-? அது பரிசுத்த ஆவியின் இனிமையான உணர்வு-! வார்த்தை ஒரு சுத்திகரிப்பு செயல்முறையாக இருக்கிறது, அது உங்களை தேய்த்துக் கழுவிச் சுத்தம் செய்து, உங்களை ஒரு புது சிருஷ்டி ஆக்கி, எல்லாவற்றையும் எடுத்துப் போடுகிறது. வார்த்தை இரு புறமும் கருக்குள்ள எந்த ஒரு பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது, அது விருத்தசேதனம் செய்து, உலகத்தில் எல்லா காரியங்களையும் வெட்டிப் போடுகிறது. பார்த்தீர்களா-? ஆகையால் நாம் சுத்தமாக, தேய்த்துக் கழுவப் பட்டதை உணர்ந்து, அவரை ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கிறோம். அப்படித் தான் நம்மால் பாட முடியும்: நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என்ற இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 272. அது அழகாயுள்ளதா-? நான் அதை என்னுடைய என்னுடைய முழு இருதயத்தோடு நேசிக்கிறேன். புரிகிறதா-? நாம் அதை மீண்டும், இப்பொழுது ஒவ்வொருவரும், உண்மையாகவே, உங்களுடைய உச்சக் குரலில் இப்பொழுது, முயற்சிப்போமாக. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என்ற இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே.